Pages

Thursday, 28 January 2016

ரோசடோம் எனும் பூதம்

ரோசடோம் எனும் பூதம்

                                    
(கூடன்குளத்தில் அணுவுலைகளைக் கட்டுகிற ரஷ்ய நிறுவனமான ரோசடோமின்(ROSATOM) சிக்கலான வரலாறு பற்றின விமர்சனம்.கிரீன் பீஸ் அமைப்பின் அறிக்கையை முன்வைத்து)

உலகின் எந்த மூலையில் அணுவுலைகளைக் கட்டினாலும் நாம் அதை எதிர்கின்றோம்.ஏனெனில் அணுவுலைகள் ஆபத்தானவை பாதுகப்பற்றவை,அழிவை ஏற்படுத்துபவை.எனவே அணுவுலைகளைக் கட்டுகிற அரசுகளின் முயற்சிகளை நாம் எதிர்க்கிறோம்.தன் நாட்டில் அணுவுலைகளைக் கட்டுகிற அரசுகள்,தன் குடிகளை அச்சத்திலும் ஆபத்திலும் வாழ நிர்பந்திக்கிறது.அணுவுலைகளைப் பாதுகப்பதற்கும்,முறையாக பராமரிப்பதற்கும்,மறு நிர்மாணம் செய்வதற்கும் மிகப்பெரும் அளவிலான மக்களின் வரிப்பணத்தை “மக்கள் நல அரசுகள் வீணடிக்கின்றன.

அணுவுலை அமைக்கிற அரசுகளின் முயற்சிகளுக்கு அதன் துவக்க காலம்  தொட்டே பொதுமக்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள் இருந்து வருகிறது.அணுசக்தி ஆபத்துமிக்கவை என்பதை கடந்த கால வரலாற்று அனுபவங்கள் மெய்ப்பித்து வருகின்றன.செர்நோபிலும் புகுசிமாவிலும் என்ன நடந்தன என்பதை இவ்வுலகம் கண்டுகொண்டது.அணுசக்தியின் கோர முகத்தை இவ்வுலகுக்கு வெளிப்படுத்திய விபத்துகள் இவை இரண்டும்.

1986 ஆம் ஆண்டில் செர்னோபிலில் ஏற்பட்ட அணு உலை விபத்திற்குப் பிறகு உலகம் முழுவதம் இதுவரை இருபத்தியிரண்டு  அணு உலை விபத்துக்கள் நடந்துள்ளன.இதில் பதினைந்து விபத்துக்கள், கதிர் வீச்சு கசிவால் ஏற்பட்டவை. கதிரியக்கத்தை வெளியிடும் கதிரியக்க மூலப் பொருட்களை ஆதாரமாகக் கொண்டு மின்சார உற்பத்தியில் ஈடுபடுவது இனி ஒருபோதும் பயனளிக்காத ஒன்றே என்பதையே இது காட்டுகிறது. குளிர் தொட்டிக்குள் அமிழ்த்தி வைத்தபோதும் பெருமளவிலான கதிரியிக்கக் கசிவுகள் சூழலை நஞ்சாக்குவதை யாராலும்  தடுக்க இயவில்லை.

ஆனபோதும்,வரலாற்றுப்  படிப்பினைகளை, நமது “மக்கள் நலஅரசுகள் கவனத்தில் கொள்வதில்லை.அணுவுலை விரிவாக்க முயற்சிகளை கைவிடுவதாகவும் தெரியவில்லை.அணுசக்தி மீதான அதன் மோகமும் குறைவதாகத் தெரியவில்லை.இதற்கான காரணம் எளிமையானது.அது- அணு சக்தித் துறையில் புழங்கும் கோடிக்கணக்கான நிதி மூலதனம்.

யூரேனிய வர்த்தகம் மற்றும் நியுக்கிலியர் பிரீடர் வர்த்தக நலனுக்காக அமெரிக்கா,ரஷ்யா,பிரான்சு போன்ற நாடுகளும் அந்நாடுகளின் முதலாளித்துவ சக்திகளும் மூன்றாம் உலக நாடுகளின் அரசாங்கங்களின் தலையில் அணு உலைகளை கட்டுகின்றன.ததத்தம் மக்களின் வாழ்வை முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாயாத நலனுக்காகக் விலையாகக் கொடுக்கின்றன.

இந்நிலையில் இந்தியாவின் மின்சாரத் தேவையில் மூன்று சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்கிற அணுமின் நிலையங்களை ஒட்டுமொத்த இந்தியாவிற்கான ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்யும் சர்வரோக நிவாரணியாக ஆளும் அரசுகள் விதந்தோம்பி வருவது  நகைப்பிற்குரியதாகும்.அதோடு திரு ஹோமி பாபாவால் முன்வைக்கபட்ட மூன்று கட்ட அணு சக்தித் திட்டம் அப்பட்டமாகத் தோல்வயடைந்தும் கூட,இவ்வுண்மையை ஆளும் அரசுகள் ஒப்புக் கொள்ள மறுக்கிறது.மாறாக,மேலும் மேலும் மூர்க்கத்துடனேயே அணுவுலைகளைக் கட்டத் துடிக்கின்றன.இது  சனநாயக அமைப்பிற்குச் செய்யும் துரோகமாகவே பார்க்க வேண்டியவர்கள் ஆகிறோம்.

சமகால வரலாற்றில்,அணுசக்திக்கு எதிராக இந்திய அளவிலும் உலகளவிலும் மிகப்பெரும் மக்கள் திரள் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் இடிந்தகரை மக்கள்.கூடன்களும் அணு உலைத் திட்டத்தை எதிர்த்து இம்மக்கள் முன்னெடுத்த தீரமிக்க போராட்டம்,ஆயிரத்தி ஐநூறாவது நாட்களை கடந்துள்ளது.அரசின் இத்திட்டத்திற்கு எதிராக போராடிய பல லட்சம் மக்கள் மீது அரசுக்கு எதிரான யுத்தம் தொடுத்தல்,தேசத் துரோக வழக்குகள் என முன்னூறுக்கும் மேற்பட்ட வழக்குகளை போட்டு ஒடுக்கியது.உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலையும் மதிக்காமல் 248 வழக்குகளை மட்டுமே திரும்பப் பெற்றுள்ள.இன்னும் ஒரு லட்சம் மக்கள் மீது 132 வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளது.

துப்பாக்கிச் சூடுகளின் மூலமாகவும் வழக்குகள் போட்டும்  மக்கள் திரள் போரட்டத்தை ஒடுக்கி,முதலாளிய சக்திகளுக்கு எடுபிடிகளாகவே ஆளும் அரசுகள் இயங்கி வருகிறன.மக்கள் நலனைப் புறக்கணித்து  கூடன்குளத்தில் கட்டப்பட்ட  ஒன்று மற்றும் இரண்டாம் அலகு அணுவுலைகள் ஆறு மாத காலத்திற்கு மேலாக உற்பத்தியை தொடர இயலாமல், மூச்சித் திணறி முடங்கியுள்ளது.

அதைத் தொடர்ந்து கட்டப்பட்ட மூன்று மற்றும் நான்காம் அலகில் எப்போது உற்பத்தி தொடங்கும் என யாருக்கும் தெரியவில்லை.இந்திய அணுசக்தித் துறையைக் சேர்ந்தவர்களும் ரஷ்ய அதிபரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்துவருகின்றனர்.இச்சூழலில் கூடன்குளத்தில்,மேலும் ஐந்து மற்றும் ஆறாம் அணுவுலைகளைக் கட்டுவதற்கு ரஷ்யாவுடன் இந்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.
முன்னதாக முதல் இரண்டு அணுவுலைகளில் இருந்து வந்துள்ள அணுவுலைக் கழிவுகளுக்கான தீர்வென்ன,இதுவரை கட்டியுள்ள அணுவுலைகளின் உபகரணங்களின் பாதுகாப்புத்தன்மை,உபகரணங்களின் தரம் மற்றும் இத்தனை மாதங்களுக்கு மேலாக முதலிரண்டு அலகுகளின் உற்பத்தி தொடங்காததற்கு காரணம் என்ன போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு இதுவரை இந்த “மக்கள் நல “அரசிடமிருந்து எந்த விளக்கமும் இல்லை.

இச்சூழலில் புதிதாக கட்டவுள்ள(ஐந்து,ஆறு) அஅணுவுலைகளுக்கான வடிவமைப்பை ரஷ்யா செய்யுமென்றும் அணுவுலைக்கான உபகரணங்களை இந்திய நிறுவனங்கள் உற்பத்தி செய்து வழங்கும் என சொல்லப்படுகிறது. அவ்வாறு இருந்தால்,இங்கு உற்பத்தி செய்யப்படுகிற உபகரணங்களின்  பாதுகாப்புத்தன்மையை யார் உறுதி செய்யப்போகிறார்கள்?உறுதி செய்தாலும் அரசின் சார்புநிலை இல்லாமல் இருக்குமா?போன்ற  பல கேள்விகள் நம்முன் எழுகின்றன.
அணுவுலை திட்டங்களின் போதும், தொடங்கிய பின்னும் ஏற்படுகிற தாமதங்கள்,உபகரணங்களின் தொடர்ந்து ஏற்படுகிற பழுதுகள்,கதிர் வீச்சு மற்றும் அணுக்கழிவு ஆபத்துகள் என அனைத்து வகையிலும் தோல்வியடைந்து ,மக்களுக்கு பேரச்சமாக  எழுந்து நிற்கிற இக்கொலைக் கள  அணுவுலைகளை கட்டுவதற்கும் விற்பதற்கும் ரஷ்ய அரசு ஏன் இவ்வளவு மூர்க்கமாக செயல்படுகிறது?அதன் பின்னணிதான் என்ன?

ரோசடோம் எனும் பூதம்:

2000 ஆம் ஆண்டின் மத்தியிலிருந்து ரஷ்யாவின் சிவில் மற்றும் இராணுவ அணுசக்தி திட்டங்களை கட்டுப்படுத்துகிற அமைப்பாக  ரோசடோம் உள்ளது.இந்நிறுவனம் ரஷ்ய அரசிற்கு  சொந்தமானது.சோவியத் ஒன்றியமாக இருந்தபோது 1941 ஆம் ஆண்டில் ரோசடோம் துவங்கப்பட்டது.சோவியத் தகர்ந்த பிற்பாடு, ரஷ்யா கூட்டமைவு அரசில் சேர்க்கப்பட்டது.பல பத்தாண்டுகளுக்கான முதலீடுகள்,பரந்த அளவில் அணுசக்தி தொடர்புடைய உள்கட்டுமானங்கள்,அதில் பணி செய்கிற லட்சக்கணக்கான தொழிலாளர்கள்  என அணுசக்தியில் முடி சூடா மன்னனாக திகழ்கிற ரோசடோம்,இன்றளவிலும் சிவில் மற்றும் ராணுவத்திற்கான அணுசக்தி பயன்பாட்டை பெரியளவில் வேறுபடுத்தவில்லை.

உலகிலேயே ஆபத்துமிக்கவையாக ரோசடோமின் அணுவுலைகள் திகழ்வது அதன் வரலாற்றில் நிரூபணம் ஆகிவருகிறது.தற்போது ரஷ்யாவில் ஒன்பது அணுவுலைகள் கட்டுமானப் பணியில் உள்ளது.இதில் மூன்று அணுவுலைகள் சோவியத் தகர்விற்கு முன்பாக 1991 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது.ஆறு  அணுவுலைகள் 2007 ஆம் ஆண்டிற்கு பிற்பாடு  துவங்கப்பட்டது.

சர்வதேச அளவில் அணுசக்தி வல்லமை மிக்க சக்தியாக நிறுவிக்கொள்வது,சர்வதேச அணுசக்தி திட்டங்களின் ஒப்பந்தப் புள்ளிகளில் பங்கேற்பது,கைவிடப்பட்ட அணு உலைத் திட்டங்களைக் கைகொள்வது போன்றவை அணுசக்தி தொடர்பான முதலீடுகளை ஈர்ப்பதற்கு ரோசடோமின் ஊடாக ரஷ்யா மேற்கொள்கிற பிரதான யுக்திகளாகும்.
ROSATOM GLOBAL PRESENCE


ரோசடோமோடு அணுசக்தி ஒப்பந்தங்களை மேற்கொள்கிற நாடுகள் உலகின் மோசமான விபத்துக்களை அதன் வரலாறு தோறும் எதிர்கொண்டு வருகிறது.1986 ஆம் ஆண்டில் உக்ரைனில் ஏற்பட்ட செர்நோபில் அணுவுலை விபத்து இதற்கோர் உகந்த உதாரணம்.அரசியல்-சமூக-சூழலியல்-பொருளாதார  ரீதியாக பெரும் தாக்கத்தை செர்நோபில் விபத்து ஏற்படுத்தியது.சோவியத் தகர்வதற்கு இதுவும் ஒரு காரணம் என மைக்கல் கோர்பசேவ் கூறியது தனிக் கதை!

மெய்யாகவே மக்களின் நலனில் அக்கரையுள்ள அரசுகள் அணுசக்தி மீதான மோகத்தை இப்பெரு விபத்திற்கு பிற்பாடு நிறுத்தியிருக்கவேண்டும்,ஆனால் இவ்வரசுகளோ  சலுகைகள்,ஊக்குவிப்புகள் என மென்மேலும் அணுவுலை விரிவாக்கத்தை மேற்கொள்கின்றன.

பொருளாதார ரீதியிலும் சூழலியல் ரீதியல் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய செர்நோபில் விபத்திற்கு பிற்பாடும் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அணு உலைத் திட்டங்களை ரஷ்ய அரசு தீவிரப்படுத்தியது.குறிப்பாக ஆசியாவில் தங்களது அணுவுலைத் திட்டங்களை விற்பதில் அது தீவிர கவனம் செலுத்தியது என்றேக் கூறலாம்.மேற்குலகமோ,குறிப்பாக அமெரிக்கா,பிரான்சு போன்ற நாடுகள்  அணுசக்தி விவகாரத்தில்  ரஷ்யாவை  அப்படியே பிரதிபலித்தது எனச் சொல்லலாம்.அணுசக்தி மறுமலர்ச்சி யுகம் என்ற முழக்கத்தோடு அது அணுவுலை விரிவாக்கத் திட்டங்களை தீவிரமுடன் முன்னெடுத்தது.

இத்தகைய சூழலில்தான் கடந்த 2011 ஆம் ஆண்டில் சப்பானில் ஏற்பட்ட  புகுசிமா அணுவுலை விபத்தானது மிகப்பெரிய அளவில் மனித இழப்புகளையும்,சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தியது.புகுசிமா அணுவுலை வெடிப்பிற்கு பிற்பாடு அணுவுலை திட்டங்களின் மிகப் பெரும் போதாமைகளான பாதுகப்புத்தன்மை,உற்பத்தி செலவுகள் குறித்த விவாதங்களை தீவிரப்படுத்தின.இதன் விளைவாக சர்வதேச அளவல் அணு உலை சந்தை வீழ்ச்சியை நோக்கி சிறுதி காலத்திற்கு பயணப்பட்டது.

பாதுகாப்பு மிக்க புதிப்பிக்கத்தக்க ஆற்றல்களான காற்று மற்றும் சூரிய சக்தியின்  மூலமாக மின்சாரத்தை  உற்பத்தி செய்கிறத் திட்டங்கள் வேகமெடுக்கத் தொடங்கின.இந்தியாவில்,அணுசக்தியால் தாயாரிக்கப்படுகிற மின்சாரத்தைவிட காற்றாலையின் மூலமாக உற்பத்தி செய்யப்படுகிற மின்சாரமே அதிகம்.
சர்வதேச அளவில் அணுசக்தி சந்தை வீழ்ச்சியடைந்து வந்தாலும்  இந்தியா,சீனா,தென் கொரியா போன்ற நாடுகள் மூர்க்கமான வகையில் அணுவுலை விரிவாக்கத்தை மேற்கொண்டு வருகின்றன.

பூதம் வரும் .......

No comments:

Post a Comment