Pages

Saturday 2 July 2016

“வனக் கொள்கையல்லாத” வனக் கொள்கை வழங்குகிற செய்தி-பழங்குடிகளின் உரிமைக்கான கூட்டமைப்பின் கண்டன அறிக்கை





(புதிய தேசிய வனக் கொள்கை -2016 வரைவை ஜூன்-16 அன்று, வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தனது வலைத்தளத்தில் பொதுமக்களின் கருத்துக் கேட்ப்பின் பொருட்டு  பதிவேற்றம் செய்தது.ஆனால் கடந்து சில நாட்களுக்கு பின்பாக, தெரியாமல் இப்பதிவேற்றம் நடந்துவிட்டதாகக் கூறி,புதிய வரைவுக் கொள்கையை சுற்றுச்சூழல் அமைச்சகம் திரும்பப்பெற்றது.இது குறித்து,பழங்குடிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த வருகிற அமைப்பினர் கண்டம் தெரிவித்திருந்தனர்.forestrightsact.com  லைத்தளத்தில் வெளியான இக்கண்டன அறிக்கையின் தமிழாக்கம்).




நண்பர்களே,

கடந்த வாரத்தில்,  வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகமானது “தேசிய வனக் கொள்கையின் வரைவை தனது வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தது. இக்கொள்கை  மீதான ஆலோசனைகளை இரண்டு வாரத்திற்குள் பதிவிடவும் கோரியிருந்தது.

ஆனால் தற்போது இது ஒரு “ஆய்வறிக்கை மட்டுமே, கொள்கை வரைவல்ல என அவர்கள் முடிவு செய்துள்ளார்கள். “தேசிய வனக் கொள்கை (வரைவு) எனத் தலைப்பிட்ட இந்த ஆவணத்தைப் பற்றி இவ்வாறு கூறுவது புதிராக உள்ளது.
கொள்கையல்லாத  இக்கொள்கையானது”, “சமூக வன மேலாண்மை என்ற பெயரில் அவர்களுடைய  மிகவும் மோசமான  கூட்டு வன மேலாண்மைக் கொள்கைகளை  ஆதரிப்பதன் மூலம், சுதந்திரத்துக்கு பிந்தைய சட்டங்களில் முக்கியமானதாகக் கருதப்படுகிற வன உரிமைச் சட்டம் – 2006 ஐ சுத்தமாக ஒழித்திட மாநில வனத் துறைகளைத் தூண்டுகிறது. 

வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு இதுவெல்லாம் புதிதல்ல. கடந்த இரண்டாண்டுகளில் அது என்ன செய்துள்ளது என்பதைப் பார்ப்போம்..

·         “வனங்களில் மரம் நடுவதற்காக பல்லாயிரம் கோடி ரூபாய்களை மாநில   வனத்துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிற மசோதாவை (the CAMPA Bill) அது உருவாக்கியது. அதில் ஒரு வரிகூட வனங்களை நம்பியே  வாழ்கிற மக்களின் உரிமை குறித்துப் பேசவில்லை. வேறு வார்த்தைகளில் கூறினால், வனச் சட்டத்தின் கீழ்  மேலாண்மை உரிமைகளைப் பெற்றுள்ள வனவாசிகளின் நிலங்களைக் கைப்பற்றுவதற்கு இந்த நிதியைப் பயன்படுத்துங்கள் என்பதற்கான  அழைப்பாகும் இது.

·         தனியார் நிறுவனங்கள் முறைகேடாக வன நிலங்களைக் கைப்பற்றுவதற்கும்,அவற்றில்  பணப் பயிர்களை நட்டு வளர்ப்பதற்கும், அதே சமயத்தில் உள்ளூர் மக்கள் அந்தப் பகுதிகளின் மீது தங்களுக்கு உள்ள உரிமைகளைப் பயன்படுத்துவதைச் சட்டவிரோதமாகத் தடுப்பதற்கும் அது வழி  காட்டுதல்களை வெளியிட்டுள்ளது.இதுவும்கூட ஒரு பத்திரிக்கையாளர் மூலமாக தெரியவந்ததே தவிர,இதுவரை அமைச்சகம் வெளிப்படையாக பொதுவெளியில் அறிவிக்கவில்லை.

·         தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பழங்குடி மக்களுக்கான அமைச்சத்தின் கருத்துக்கு எதிராக மராட்டிய மற்றும் மத்தியப்பிரதேச அரசாங்கங்களால் நிறைவேற்றப்பட்டுள்ள “கிராம வனச் சட்டங்களை அது சட்டவிரோதமாக ஆதரிக்கிறது.

·         வனச் சட்டத்தில் முன் கூட்டியே அங்கீகரிக்கப்பட்ட வனவாசிகளின் உரிமைகள் மற்றும்  வனவாசிகளின் அனுமதி போன்ற  நிபந்தனைகளைத் தொடர்ந்து மீறியும், அவற்றைச் சீர்குலைத்தும்   பெரும் நிறுவனங்களின் திட்டங்களுக்குப் பெரும் அளவிலான வனப்பரப்பை தாரை வார்த்துள்ளது.

இதன் ஒட்டுமொத்த சாரமானது –சுற்றுச்சூழல் அமைச்சகமும் வனத்துறை அதிகாரிகளும்  சட்டத்திற்கு மேலானவர்கள், வட்டார பழங்குடி மக்களின் உரிமையைக் கண்டுகொள்ள மாட்டார்கள், வனங்களில் வாழ்கிற மக்களை எந்தவிதமான  சட்டரீதியான உரிமையையும் அற்ற விலங்குகளைப் போல நடத்துவார்கள்; பிறகு அவர்களுடைய அதிகாரவர்க்கத்திற்கு  எல்லையற்ற, சட்டவிரோதமான அதிகாரங்களையும், பெரும் அளவு நிதிகளையும் அளிப்பார்கள், அதே சமயத்தில் கார்பரேட் நிறுவனங்களுக்கு நாட்டின் வளங்களைத் தாரை வார்ப்பார்கள். “சீர்திருத்தங்கள்”, “வெளிப்படையானது எனக் கூறிக் கொண்டு, நாட்டின் ஒட்டுமொத்த நிதி அமைப்பையும் சீர்குலைக்கும் விதத்தில், மக்களுக்குப் பொறுப்பற்ற அதிகாரிகள் தங்களுடைய நலன்களுக்காகவும், கார்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காவும் இயற்கை வளங்களைக் கைப்பற்றுவார்கள்.

  
இறுதியான முரண்நகை என்னவென்றால், “தேசவிரோதிகள் என மற்றவர்களைக் குற்றம் சாட்டும் ஒரு “தேசியவாத ஆளும் கட்சி  காலனியாதிக்க முறையிலான வன மேலாண்மைக் கொள்கைகளையும் காலனியப் பாணியிலான நிலம் கையகப்படுத்துகிற கொள்கைகளையும் மீண்டும் திட்டமிட்ட முறையில் கொண்டு வர முயலுவதுதான். 

சுற்றுச்சூழல் அமைச்சகம் முன்னணியில் நின்று வழி நடத்தும் ஒரு யுத்தம்.


ஆங்கில அறிக்கையை வாசிக்க:https://forestrightsact.com/2016/06/28/the-forest-policy-that-wasnt-but-which-says-a-lot/