Pages

Saturday, 30 March 2013

மார்க்சிய சூழலியல் அறிமுகம் :





தற்கால சுழல் நெருக்கடியின் அடிப்படை குறித்த மார்க்சின் முக்கிய திறனாய்வான வளர்சிதைமாற்றப்பிளவு(Metabolic Rift) கருத்தாக்கம் ,அவருக்கு பின்வந்த மார்க்சிய அறிஞர்களால்  செழுமைப்படுதப்படாமல் போனதால் மார்க்சியம் சூழலியலில் அக்கறைகொள்ளவில்லை என்ற கருதுநிலை உருவாகியதுஇதனால்  ,முதலாளியத்தின்  பகுப்பாய்வு மற்றும்  சமூக புரட்சிக்கான அழைப்பு விடுத்தமை போன்றவற்றிற்காக பெரிதும் அறியப்பட்ட    மார்க்சும்  ஏங்கல்சும்  ,சூழலிய சிந்தனைகளில்  சிறிதே அறியப்பட்டனர்  . 


ஆனால் கடந்த இருபது ஆண்டுகளில் நம்பிக்கையளிக்கும்விதமாய் ,சூழல் குறித்த மார்க்சின் எழுத்துக்களை சில சோசியலிசவாதிகள் மறுவாசிப்பிற்கு உட்படுத்தினர் .மனிதனுக்கும்  புவிக்கோளின் சூழலுக்குமான உறவே மார்க்சின் வராலற்று பொருள்முதல்வாத தத்துவ திறனாய்விற்கான  அச்சாணியாக இருந்ததென அவர்கள் வாதிடுகிறார்கள் .மனித சமூகத்திற்கும் மனிதனல்லாத புற உலகிற்குமான இயங்கவியல் உறவை திறனாயும் மார்க்சின் சூழலிய அணுகள் , தற்போதைய நெருக்கடிக்கான தீர்வினையழிக்கும் என்று உறுதியாக நம்பினார்கள்.

மார்க்சிய சூழலியல் :
முதலாளியத்தின் உழைக்கும் மக்கள் சுரண்டலையும்  இயற்கை வளச்சுரண்டலையும் , ஒன்றோடொண்டு பிணைந்த  மற்றும் ஒரு ஒத்த நிகழ்முறையின் அங்கம் என  மார்க்சும்  ஏங்கல்சும்   சுட்டிக்காட்டினார்கள் .
 
 
வரலாற்று சூழலுக்கு அழுத்தம் கொடுத்து ,இயற்கை மற்றும் மனித சமூகத்தின் பரிணாம வளர்ச்சியினை ஒத்திசைந்த முறையில்  சுற்றுச்சூழலை மார்க்ஸ் அணுகுகிறார்.மார்க்சின்  சூழலியல் நுண்ணறிவு இரு முக்கிய கூறுகளை கொண்டது .ஒன்று தொடர்ச்சியான உற்பத்தி மற்றொன்று  வளர்சிதைமாற்றப்பிளவு .வரைமுறையற்ற விரிவாக்கதிற்கான  முதலாளியத்தின் உத்வேகம்,லாபத்தை அதிகரிப்பதற்கான  கருணையற்ற இயக்கம் ,இப்புவின்  இயற்கைவள வரம்புகளை  கண்டுகொள்ளாமை போன்றவற்றை தொடர்ச்சியான உற்பத்தியை குறிக்கிறது .

இயற்கையில் உபயோகமற்றது என்று எதுவுமில்லை .அனைத்தும்  மறுசுழற்சிக்குல்லாகும் வகையிலான ஒரு சுழல்வட்ட  கட்டமைப்புடன் இயற்கை இயங்குகிறது .ஆனால் இதற்கு நேரெதிரான முதலாளியத்தின் நீள்வடிவ உற்பத்தி பொருளாதாரமானது இயற்கை கட்டமைப்பில், எப்பொழுதும் அதிகரித்தவண்ணம் இருக்கும் தனது கழிவு பொருட்களை மேன்மேலும் அளவுக்குமீறி திணிக்கிறது  .ஆகாயத்தில் வெளித்தள்ளும் கரிப்ப்புகைகழிவு   ,நீரில் கலக்கும் அசுத்த நீர்கழிவு  ,மண்ணில் கலக்கும் வேதிய நச்சுக்கழிவென   அனைத்துவிதத்திலும் தனது உபயோகமற்ற கழிவுகளை இயற்கை கட்டமைப்பிற்குள் தள்ளுகிறது. 

மனிதசமூகத்திற்க்கும்  இயற்கைக்கும் இடையிலான  சிக்கல்மிகுந்த இரு வழி வளர்சிதை வினை மாற்ற உறவிற்கு    நடுவில் முதலாளியத்தின் லாப நோக்க உற்பத்திமுறை ஒரு கூர்மையான பிளவை உண்டுபண்ணியது என்று மார்க்ஸ்   வளர்சிதைமாற்றப்பிளவு  குறித்து பேசுகிறார்மனித சமூகத்திற்கும் இயற்கைக்குமிடையே நடைபெறும்   மூலப்பொருள் மற்றும் ஆற்றல் பரிமாற்றத்தை, மனித உழைப்பாளர் மூலம்    நிகழ்முறைப்படுத்தப்படுதுவதாக  வளர்சிதைமாற்றம் பற்றின மார்க்சின் பொதுக்கருத்து  உள்ளது.

தொழில்மயமடைந்த வேளாண்துறையில் மண்ணின் வளங்கள் தொடர்ந்து சுரண்டப்படுவதை திறனாய்ந்து மார்க்ஸ் இந்தமுடிவிற்கு வந்தாலும் ,மேற்குலக நாடுகளின் முதலாளித்துவ வளர்ச்சிக்கு , காலனிய நாடுகளின் இயற்கை வளங்கள் வரம்புகளற்று சுரண்டப்படும் போக்கை  வளர்சிதைமாற்றப்பிளவின் கோட்பாடாய்  உலக அளவில் ஒட்டுமொத்தமாய் புரிந்துகொள்கிறார். "மனிதனுக்கும் இயற்கைக்குமான வளர்சிதைமாற்ற வினையை விவேகமான முறையில் ஆளுமைசெய்து கட்டுக்குள் வைத்திருப்பதற்கு மாறாய்  கண்மூடித்தனமான அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் அது இருக்கக்கூடாது "என மார்க்ஸ் தனது மூலதனத்தில் குறிப்பிடுகிறார்.

இயற்கையின் உலகை அழிக்கும் முதலாலியதை பற்றி ஏங்கெல்ஸ் கருதுவதாவது " சமூகத்தோடும்  இயற்கையோடும் தொடர்புடைய  தற்கால உற்பத்தி முறையானது உடனடியான மற்றும் உறுதியான இலக்கை மட்டுமே கவனத்தில்கொள்கிறது "
இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவைபற்றின மார்க்சின் திறனாய்வையொட்டி , நிகோலாய் புக்ஹரின் இவ்வாறு ஒரு முடிவிற்கு வருகிறார் "சூழலுடன் மனிதன் தன்னை தகவமைத்துக்கொள்ள தவறினால் ,அவனது நாகரிகம் காணாமல் போகும் ,சமூகம் புழுதிமயமாகும் "

5 comments:

  1. background nice once i studied content,i will give u reply...................

    ReplyDelete
  2. அருமை .நான் தொடர்ந்து வாசிக்கப் போகும் வலைத்தளம் இது

    ReplyDelete
  3. Marxist philosophy links with nature...this is the new perception for me...My thought about Marxist is, they mainly speaks for ulaikum makkal human rights...

    ReplyDelete
  4. Actually marxism not only speaks for ulaikum makkal human rights..எம். ஏ. நுஃமான் குறிப்பிட்டபடி
    மார்க்சியம் உலகைப் புரிந்துகொள்வதற்கான ஒரு தத்துவம் என்ற வகையிலும், உலகை மாற்றுவதற்கான ஒரு வழிமுறை என்ற வகையிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து உலகில் பெரும் செல்வாக்குச் செலுத்திவருகிறது. மானுட விழுமியங்களை நோக்கிய மனிதனின் முழுமையான வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் சகல தளைகளையும் உடைத்து உண்மையான மனித விடுதலையைப் பெற்றுத்தரும் ஒரு தத்துவமாக அது கருதப்படுகிறது...
    come your first point : we need marx's analytical approach to understand and throw the capitalism out of the world to protect our planet earth...every green Ngo's ,capitalist state government dont understood/do this..

    ReplyDelete