Pages

Sunday, 31 March 2013

புவி வெப்பமயமாதல் :அழிவை நோக்கிய ஒருவழிப்பாதை பயணம் ..



புவி வெப்பமயமாதல்:
                   19 ஆம்  நூற்றாண்டின் இறுதியில் உலகமெங்கிலும் குறிப்பாக இங்கிலாந்திலிருந்து துவங்கிய தொழில்புரட்சிக்கு அடிப்படையாக இருந்தவர் ஜேம்ஸ் வாட்ஸ்காட்லாந்து நாட்டின் இயந்திரப் பொறியாளரான ஜேம்ஸ் வாட்டின் புனல் இயந்திரக்கண்டுபிடிப்பு அதுவரை மந்தகதியில் இயங்கிவந்த தொழித்துறையை புரட்டிபோட்டது .புனலால் இயங்கும் கப்பல் ,ரயில் மற்றும் இயந்திரங்கள் மூலம் தொழிற்சாலைக்கு தேவையான மூலங்களை விரைவாக தொலைதூரத்திலிருந்து பெற்றுகொள்ளவும் உலகமெங்கிலும் தனது உற்பத்திக்கான சந்தைக்கு பெரு வாய்ப்பாகவும் அது முதலாளியத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தது .விரைவான பயணங்களால் உலகம் சுருங்கியது ,சந்தைக்காகவும் மூலத்திற்காகவும் முதலாளிய நாடுகளானது மூன்றாம் உலக நாடுகளை தனது காலனியாதிக்கதிற்குள் கொண்டுவந்து சுரண்டளையும் சந்தையும் விரிவுப்படுதியது .சந்தைக்கான எல்லை  விரிவாக்கத்திற்காகவும் மூலதனத்திற்க்காகவும் முதலாளிய நாடுகள் மூர்கமாக மோதிக்கொண்டு அது உலகநாடுகளுக்கிடையிலான உலகப்போர்கள் ஆயின .

ப்போரின்போது ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு அந்நாட்டு அரசாங்கங்கள் உற்பத்தி  பெருக்கத்தை பெருமளவில் முடிக்கிவிட்டது. 1950 களை ஒட்டிய ஆண்டுகளில் இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய காலனியாதிக்க நாடுகளிடமிருந்து அதிக பரப்பளவுள்ள ஆசிய ஆப்ரிக்க நாடுகள் சுதந்திரம் பெற்றன .,சுதந்திரதிற்குபிந்தய தங்களின் உள்நாட்டு  உற்பத்தி சார்ந்த பொருளாதார நடவடிக்கைக்குக்கு    பெருமளவு  வளர்ந்த முதலாளிய நாடுகளின்  துணையை நாடவேண்டிய கட்டாயத்திற்கு அந்நாடுகள் உள்ளானது .அதேபோலவே தனது சந்தை வாய்ப்பினை சுதந்திரம் பெற்ற நாடுகளில் தக்கவைத்துக்கொள்ள முதலாளியம் முயற்சித்தது. இதன் விளைவாய் பெரும் இருவழிப்பாதைகள்  திறக்கப்பட்டது.தொழில்வளர்சிக்கு தேவையான   தொழில்நுட்ப பகிர்தல் மற்றும்  அந்நாட்டின் முதலாளிய வர்கத்துடனான /அரசுடனான கூட்டு மூலதன பகிர்மானம்  , திறந்துவிடப்பட்ட உலக சந்தை போன்ற கட்டுப்பாடற்ற வளர்ந்த +வளரும் நாடுகளின் கூட்டு  முதலாளியத்தின் கண்மூடித்தனமான தொழித்துறை எழுச்சியால் யந்திர கதியான வளர்ச்சி எனும் இலக்கை நோக்கிய பயணமாக மட்டுமே  அது இருந்தது .

இப்புவியிலிருந்து சுரண்டப்படும் மூலதனத்தின் இருப்பை பற்றியோ ,அதனால் சாரமிழக்கும் வளங்களை பற்றியோ அது அக்கறை கொள்ளவில்லை . அபரிவிதமான இத்தொழில்துறை வளர்ச்சியால் இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவிற்கு நடுவில்  பெரும்  வளர்சிதைமாற்றப்பிளவு உண்டானது .அதாவது இயற்கையிடமிருந்து மனிதன் எடுத்துக்கொள்ளும் அனைத்தும் திரும்ப இயற்கைக்கு உகந்தவாறு  மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு மண்ணுக்கே  மீண்டும் அனுப்பாமல், வளர்சிதைமாற்றமாக அது உருமாறாமல் ,உற்பத்தி செய்யப்படும் நிகழ்முறையில் வெளியேறும் தனது உற்பத்திக்கழிவுகளையே அது இயற்கையிடம் திருப்பித்தந்தது .அது கரிப்புகை மாசாக வளிமண்டளித்தில் வலம்வருகிறது.

 1950 முதல் 2000 வரையிலான 50 ஆண்டுகளில் மட்டும் 10,000 மில்லியன் மெட்ரிக் டன் கார்பன் டைஆக்சைடு (கரிப்புகை) வளிமண்டலத்தில் உமிழப்பட்டுள்ளது(பார்க்க படம்-1)  தற்பொழுது 40,000 மில்லியன் மெட்ரிக் டன்னை தொட்டுவிட்டது !

அதோடு பல சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள காடுகள் அழிக்கப்பட்டது. காடுகளில் வாழ்ந்த காட்டுயிர்கள் செத்துமடிந்தன .அமேசான் காடுகளும் ,போர்னியோ காடுகளும் சூரையாடப்பட்டு பல்லுயிர்களின் அற்புதமான வாழ்விடங்கள் சிதைக்கப்பட்டன 


 
படம்-1

ளர்சிதைமாற்றப்பிளவின் இடைவெளி அதிகரிப்பால்  இயற்கை கட்டமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக தனது வேறுப்பட்ட இயக்கத்தனை ஒவ்வொரு காலச்சூழலிலும்  அழுத்தமாக பதிவு செய்துவருகிறது . அதன் ஒற்றைபரிமானம்தான்  புவி வெப்பமயமாதல் .சூரியனிலிருந்து உமிழப்படும் வெப்பக்கதிர்களை உள்வாங்கி பூமிக்குள் அனுப்பும் வேலையை பசுமைக்குடில் வாயுக்களான கார்பன் டைஆக்சைடு (கரிப்புகை) மீதேன் போன்ற வாயுக்கள் வளிமண்டலத்தின் மேற்பரப்பில் செய்கின்றன(பார்க்க படம்-2) .வளிமண்டலத்தின் மீதான அபரிவிதமான கரிப்புகை உமிழ்வால் ,பசுமைக்குடில் அடுக்கானது அதிகமான அளவில் சூரியவெப்பக்கதிரை பூமிக்குள் ஈர்த்து அனுப்புகிறது .
இதனால் புவியின் சராசரி  வெப்பநிலை நாளுக்குநாள்உயர்கிறது.



படம்-2
1980 களில் நாசா அறிவியலாளர் ஒருவரால் உலகத்திற்கு இப்புவி வெப்பமயமாதல் பற்றின கருத்தாக்கம் வெளியிடப்பட்டதுபுவிவெப்பமயமாவதால் க்ரீன்லாந்திலும் அன்டார்டிகாவிலும் பனிமலைகள் உருகி மறைந்து வருகின்றது .அது புவி ஓடில் அழுத்தம் குடுத்து எரிமலை வெடிப்பையும் ,சுனாமியையும் ஏற்படுத்தவள்ளதாய் உருப்பெறுகிறது .அதைத்தொடர்ந்து வானிலை மாற்றம் ,பருவமழை பொய்தல் போன்ற நிகழ்வுகளால் கடந்த 130 வருடங்களில் வெப்பமான ஆண்டாய் கடந்த 2009 ஆண்டை நாசா அறிவித்து . சுருங்கச்சொன்னால் 
பூமியின் சராசரி வெப்பநிலை உயர உயர துரவப்பகுதியின் பனிமலைகள் உருக  ,கடல் மட்டம் உயர ,தீவுகள் அழிய ,பருவ மழைகள் பொய்க்க ,நதிகள் வற்ற ,நோய்கள் பெருக ,உற்பத்திகள் பாதிக்க எனபெரும்  சங்களித்தொடர் அபாய விளைவுகளை சந்திக்க நேரிடும் தருணத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் .

புவி மாநாடு :
காலநிலை மாற்றத்தின்  வீரியத்தினையுனர்ந்த விழித்துக்கொண்ட மனித இனம் 1992 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனெரியொவில்  (UNFCCC or FCCC) காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய அமைப்பு அமர்வால் (புவி மாநாடு என்று சொல்லப்படும்)முதல் முதலில் பசுமைக்குடில் வாயுக்களின்  வெளியீட்டு விகிதத்தை  கட்டுப்படுத்த மேற்கொள்ளவேண்டிய விடயங்கள் விவாதிக்கப்பட்டது. பல்லுயிரியத்தின் தொட்டிலாக இருக்கும் அமேசான் காடுகளை கொண்ட பிரேசிலை ஒரு புவி சார் குறி ஈடாக கொண்டு முதல் புவி நாடு அந்நாட்டில் நடத்தப்பட்டது 
 (இம்மாநாட்டில்  எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்ததொரு  தனிக்கதை!) அதன்பின் அதே ஆண்டில் நியூ யார்க்கில் இரண்டாவது முறையாக இம்மாநாடு நடத்தப்பட்டு சில முடிவுகள் எட்டப்பட்டது. இம்மாநாடு (Conferences of the Parties)COP-2 என்றழைக்கப்பட்டது . அதைத்தொடர்ந்து COP 3,4,5 என  இதுவரை 18 முறை இம்மாநாடு  நடந்துள்ளது
 

தொழில்மயமாக்கப்பட்ட  நாடுகளால்  வளிமண்டலத்தில் வெளியிடப்படும்  கார்பன் டைஆக்சைடு (கரிப்புகை), மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்ற பசுமைக்குடில் வாயுக்களின்  வெளியீட்டு விகிதத்தை  கட்டுப்படுத்தும்  நோக்கில் ,உலக நாடுகளுத்திடம் ஒரு சர்வதேச உடன்படிக்கையை ஏற்படுத்தும்பொருட்டு “கியோடோ” கருத்தாக்கமானது ,  காலநிலை மாற்றத்திற்கான ஐநா மன்றத்தால்(UNCCCF)   1997 ஆம்  ஆண்டு உருவாக்கப்பட்டு, 2005லிருந்து நடைமுறைக்கு வந்தது.அது CMP என அழைக்கப்பட்டது.

 கியோடோ வரைவு ஒப்பந்தம்:

.உலகிலுள்ள 190 நாடுகள்  (அமெரிக்கா ,ஆப்கானிஸ்தான் ,தெற்கு சூடான் மற்றும் கனடாவைத் தவிர்த்து ) மற்றும் ஐரோப்பிய யூனியன் கியோடோ வரைவு ஒப்பந்தத்தில் பங்கெடுக்கிறது .(அமெரிக்கா இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடும் ஆனால் உறுதியளித்தவாறு நடைமுறை படுத்தாது ,கனடா 2011 இல் இவ்வொப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்டது). ஒப்பந்தத்தின்படி வளர்ந்த /வளரும் நாடுகள் பசுமைக்குடில் வாயுக்களின்  வெளித்தள்ளலவை கட்டுபடுத்தவும் /குறைக்கவும் இரு பகுதியாய் ஒப்பந்தகாலவரைவு நிர்ணயக்கப்பட்டுள்ளது . 2008 முதல் 2012 வரையிலான காலமும்  அதைத்தொடர்ந்து  2013-2020 வரையிலான காலமென இரு பிரிவாக ஒப்புக்கொண்ட உறுதிமொழியினை செயல்படுத்துவதற்கான  கால அவகாசத்தை ஐநா மன்றம் வழங்கியது.இதில் இரண்டாம் ஒப்பந்த காலக்கெடுவில் நிறைவேற்றவேண்டிய கியோடோ வரைவு ஒப்பந்தஇலக்கில் சில திருத்தங்கள் சென்ற ஆண்டில் செய்யப்பட்டது. ஆஸ்திரேலியா ,ஐரோப்பிய யூனியன் நாடுகள் ,பெலாரஸ் ,கிரோட்டியா ,ஐஸ்லாந்து ,சுவிட்சர்லாந்து ,நார்வே போன்ற 37 நாடுகள் கியோடோ ஒப்பந்தத்தின்  இராண்டாம் சுற்று இலக்கை எட்டும் முயற்சிகளை முன்னெடுக்கிறது .ஜப்பான் ,நீயூசிலாந்து மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் முதல் சுற்று இலக்கில் பங்கேற்று இராண்டாம் சுற்று இலக்கை ஏற்காமல் ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்டது .(விரிவாக தெரிந்துகொள்ள பார்க்க படம்)





      கியோடோ ஒப்பந்தத்தின்  இராண்டாம் சுற்று இலக்கை எட்டும் முயற்சிகளை முன்னெடுக்கும்  நாடுகள் 
      இராண்டாம் சுற்று இலக்கை ஏற்காத வளரும் நாடுகள்
      முற்றாக விலகிய நாடுகள் 
     ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பின் விலகிக்கொண்ட நாடுகள்
      ஒப்பந்தத்தை கண்டனம் செய்து இலக்கிலிருந்து விலகிய நாடுகள்
     முதல் சுற்று இலக்கை ஒப்புக்கொண்டு நிறைவேற்றாத நாடுகள் .(இந்நாடுகளுக்கு இரண்டாம் சுற்று இலக்கில்லை )
 

வளர்ந்த நாடுகளும் ,வளரும் நாடுகளும் வெறும் பொருளாதார அரசியலைமட்டுமே  கருத்தில்கொண்டு இப்பூவுலகின் நிகழ்கால அழிவுகளையோ எதிர்கால நலன்களையோ கண்டுகொள்ளமால் இயற்கை வலைப்பின்னலின் கண்ணிகளை காட்டுமிராண்டித்தனமாய் அறுத்தெறியும் யதார்த்த போக்குகள் , சந்தேகத்திற்கிடமில்லாமல் பேரழிவை நோக்கி இட்டுச்சென்றுகொண்டிருக்கிறது .அழிவிலிருந்து இப்புவியையும்  காக்கும் ஒருமித்த ஒரே சர்வதேச நோக்கில்  சுயநலமற்ற ,பேராசையற்ற தீர்மானகர முடிவோடு  கியோடோ வரைவு ஒப்பந்தத்தை செயல்படுத்ததயாரக  இல்லாத அமெரிக்கா ,ரஷ்யா ,ஜப்பான் ,இந்தியா, சீனா போன்ற வளர்ந்த/வளரும்நாடுகள்   உலக அரங்கில்  செய்யும்மேற்பூச்சு பம்மாத்து வேலைகளை கண்டு சில நாடுகள் கடும் விமர்சனத்தை முன்வைத்தன. குறிப்பாக  கடந்த டிசம்பர் மாதம் தோஹாவில் நடைபெற்ற  COP 18 வது மற்றும்  CMP  8 வது  மாநாட்டில் பேசிய பொலீவிய நாட்டமைச்சர் வளர்ந்த /வளரும் நாடுகளின் செயலற்ற போக்கை விமர்சித்து தோலுரித்துள்ளார்.அவர் உரையின் சுருக்கம்அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்  :

No comments:

Post a Comment