Pages

Tuesday, 2 April 2013

“காலநிலை விற்பனைக்கல்ல”தோஹாவில் நடைபெற்ற காலநிலை நெருக்கடி பற்றின உரையின்போது அறிவித்த பொலீவியா:




Juan Evo Morales,Bolivia's President

 பொலீவியா ..காலநிலை நெருக்கடி விடயத்தில் உலக அரங்கில் தனித்து நிற்கும் நாடு . 2010 இல்  COP16 வது  மற்றும்  CMP6 வது மாநாடு  மெக்சிகோவின்  காகன் நகரில் நடைபெற்றது .அம்மாநாட்டில் பசுமை காலநிலைக்கான நிதி என்ற திட்டமும் இன்ன பிற வரைவுத்திட்டமும் விவாதிக்கப்பட்டு முன்மொழியப்பட்டது .192 நாடுகள் ஆதரவளித்தத இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்த  ஒரே நாடு பொலீவியா .அந்நாட்டின் முதல் பூர்வகுடி அதிபர் எவோ மொரலசால்  சூழலுக்கு ஒத்திசைந்த சில குறிப்பிடத்தக்க முன்மாதிரி திட்டங்கள் அங்கு தொடர்ச்சியாக முயற்சிக்கபடுகின்றன.அதோடு மட்டுமல்லாமல் கார்பரைட் தொழில்சாலைகளுக்கு அதிக வரிவிதிப்பு ,நிலங்களை நாட்டுடமை ஆக்குவது போன்ற நடவடிக்கைகளால் உலக முதலாளிய நாடுகளின் மத்தியில் பகைமையாய் பொலீவியா பார்க்கப்படுகிறது .இதன் நீட்சியாக 2011 ஆண்டு  கோப்பேன்ஹெகனில் COP 17 வது  மற்றும் CMP 7 வதுமாநாட்டில் நிறைவேற்றப்பட்ட திட்டத்திற்கு கையெழுத்திடாத காரணத்தால் அமெரிக்க அரசானது பொலீவியாவுக்கு செய்துவந்த  அனைத்து உதவிகளையும் ,பொருளாதார இணைப்புகளையும் துண்டித்துகொண்டது .அதைத்தொடர்ந்து பன்னாட்டு நிதி மையம் மற்றும் உலக வங்கி அதுகாறும் பொலீவியாவிற் க்கு வழங்கி வந்த கடனுதவிகளை நிறுத்தியது . ஆனால் அமெரிக்கா நினைத்ததிற்கு மாறாக பிரேசிலும் வெனிசுலாவும் பொலீயாவிற்கு ஆதரவளித்து நிலைமையை காப்பாற்ற உதவியது.சூழல் குறித்த தீர்மானகரமான பார்வை அதோடு இணைவாக்கம் பெற்ற இடதுசாரி நிலைப்பாடு போன்றவை உலக அரங்கில் காலநிலை நெருக்கடி விடயத்தில் மேற்பூச்சி அரசியல் செய்யும் முதலாளிய நாடுகளின் ஆடைகளை களைந்து நிர்வாணமாய் நிறுத்தியது. கடந்த ஐநூறு வருடங்களாக உலக நாடுகளால் காயடிக்கப்பட்ட இலத்தீன் அமெரிக்க நாடுகளின் பூர்வகுடி மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாய் பொலீவியா தனது அரசியல் செயல்பாட்டை முன்னேடுகிறது .

 ஆக இதுவரை அமெரிக்காவிற்கும் பொலீவியாவிற்கும் இடையில் இருந்துவந்த இணைவு முற்றாக அறுந்தநிலையில்சூழல் சீர்கெட்டு விடயத்தில் உலக ஏகாதிபத்திய நாடுகளை செயலற்றதிறனை பற்றின தனது கண்டனங்களை வெளிப்படையாக பகிரங்கப்படுத்த ஆயத்தமானது பொலீவியா .இதன் தொடர்ச்சியாக கடந்த  டிசம்பர் மாதம் தோஹாவில் நடைபெற்ற  COP 18 வது மற்றும்  CMP  8 வது  மாநாட்டில் பேசிய பொலீவிய நாட்டமைச்சர் ஜோஸ் ஆண்டனியோ சமரோ கியிடேரஸ்  ,வளர்ந்த /வளரும் நாடுகளின் சாதூர்ய  போக்கை கடுமையாக விமர்சித்து மீண்டும் அந்நாடுகளை உலக அரங்கினில் நிர்வாணப்படுத்தினார்.சாதாரண மக்களின் குரலாய் ஐநா மன்றத்தில் ஓங்கி ஒலிக்கும் பொலீவியாவின் குரலானது  , சுழல் குறித்த அக்கறை மற்றும் இப்புவியயை முதலாளியத்திடமிருந்து காப்பதற்கான முயற்சி எனும் ஒற்றை புள்ளியில் பிராந்திய ,தேசிய ,கலாச்சார எல்லைக்கு அப்பாற்பட்டு நாமனைவரையும் ஒன்றிணைக்கிறது.அவர் உரையின் சுருக்கம் :

Jose Antonio Zamora Gutierrez

நமது பூமியும் மனித இனமும் கடுமையான அழிவில் உள்ளது.காடுகள் அபாயத்தில் உள்ளது ,பல்லுயுரியம்அபாயத்தில் உள்ளது, ஆறுகள்  மற்றும் கடல்கள்  அபாயத்தில் உள்ளது ,பூமி அபாயத்தில் உள்ளது. பூமித்தாயில் குடியிருக்கும் மனித இனம் காலநிலை நெருக்கடியால் அபாயத்தில் உள்ளது .

 
குறிப்பிட்ட சிறு  குழுக்கள் மற்றும் சில நாடுகளின் செல்வ வள குவித்தலும் ,  மிதமிஞ்சிய /தேவையற்ற நுகர்வுக்கலாச்சாரம் மற்றும் அளவிற்கதிகமான வகையில் இயற்கை வளங்களை உற்பத்தித்தேவைக்காக சுரண்டி அதற்கு   சுற்றுச்சூழலை விலையாகக் கொடுத்ததற்கும்   காலநிலை நெருக்கடி விளைவிற்கு  நேரடி தொடர்புள்ளது.

ஒரு பிரயோசனமற்ற ,பேராசயுடைய ,விதிவிலக்கான சமூகத்தின் செல்வ வளத்தேவைக்கான உற்பத்தி நோக்கம்  ,உலகின் மற்ற பகுதிகளில் வறுமையையும் ,மாசையும் காலநிலை நெருக்கடியையும் உருவாக்குகிறது .
நாம் இங்கு காலநிலை பற்றி பேரம் பேச வரவில்லை ,காலநிலையை ஒரு தொழிலாக மாற்ற இங்கு  வரவில்லை அல்லது அவர்களின் பூமித்தாயை அழித்திக்கொண்டிருக்கும் ,காலநிலை நெருக்கடியை தொடர்ந்து மோசமாக்கும் தொழில்களை பாதுகாக்க இங்கு வரவில்லை .நாமெல்லாம் திடமான தீர்வுகளுடன் வந்துள்ளோம்

கனவான்கள் மற்றும் கனவான்மிகளே ,இக்காலநிலை விற்பனைக்கானதல்ல.
வளர்ந்த நாடுகள் ஒப்புக்கொண்ட கியோடோ வரைவு ஒப்பந்தத்தை  திரும்ப பெற்றும், தவிர்த்தும் வருவது பூமித்தாய் மற்றும் ஒட்டுமொத்த  வாழ்வின் மீதான தாக்குதலாகும் .காலநிலை நெருக்கடி சிக்கலக்கு ,வெறும் அரசியல் உறுதிமொழிகளால் தீர்வழிக்கமுடியாது  மாறாக குறிப்பிட்ட செயல் திட்டத்தால் தீர்வழிக்கமுடியும் .

வளர்ந்த நாடுகள் தங்களின் பொறுப்புகளை  பூர்த்திசெய்யவேண்டும்.சில வளர்ந்த நாடுகள்   ,கால நிலை நெருக்கடி சிக்கலை தீர்க்கும்விதமாய்  தாங்கள் கொடுத்த  உறுதிமொழிகளை தவிர்க்க தங்களால் முடிந்தவரை முயற்சிக்கின்றன .கால நிலை நெருக்கடியின் விளைவையும் , அனுதினமும் அது விட்டுப்போகும் வெள்ளம் ,சூறாவளி ,புயல் மற்றும் பஞ்சங்களையும் அதிக விலை கொடுத்து  வாங்கும் வளரும் நாடுகள் , பசுமைக்குடில் வாயுக்களின்  வெளியேற்றத்தை குறைக்க சிறப்பான முயற்சி எடுக்கின்றன .
இந்த கால நிலை நெருக்கடி எங்களை ஏழையாக்கின்றது ,உணவுகளை இழக்கச்செய்  கிறது ,பொருளாதாரத்தை சீர்குலைக்கிறது பாதுகாப்பின்மை மற்றும் இடப்பெயர்ச்சியை உருவாக்கின்றது.கால நிலை மாற்றம்,  ஏழை நாடுகளை மேலும் ஏழ்மையாக்கின்றது .ஏழை  மற்றும் வளரும் நாடுகளின் மிகப்பெரிய சவால் ,வறுமையை முற்றிலும் ஒழிப்பது .குற்றம் செய்யாத நாங்கள் கால நிலை நெருக்கடியை சந்திக்க வேண்டியுள்ளது .
இத்துடன் காலநிலை மாற்றத்திற்கு நம்மை தகவமைத்துக்கொள்ளும்வேலையில்  கல்வி ,பாதுகாப்பு ,சுகாதாரம் ,மக்களக்குத்தேவையான ஆற்றல் ,நீர் வசதி மற்றும் துப்புரவு சேவை,உள்கட்டமைப்பு சேவை , தொலைத்தொடர்பு  சேவை ,வேலை உற்பத்தி ,வீட்டு வசதி  போன்றவற்றை உறுதி செய்தும் ,மோசமான காலநிலை நிகழ்வுகள் ஏற்படுத்திய ஆபத்துக்கள் மற்றும் மருசீரமைப்பிற்கான நஷ்டம் போன்றவற்றில் பலரோடினைந்து பணியாற்றும்    செயல்களையும் உறுதி செய்யவேண்டி இருக்கின்றது.

புதிய கரியமில தொழில் உக்திக்கன வணிகத்தை ஒப்புக்கொள்ள சில  குறிப்பிட்ட நாடுகள் இங்கு முன்வைக்கும் தீர்வுகளும் யோசனைகளும் அதை நிறைவேற்ற அவர்கள்  கொடுக்கும் அழுத்தமும்  எதை காட்டுவேன்றால் அவர்கள் காலநிலை நெருக்கடிக்கெதிராக போராட முயலாத பயனற்றவர்கள். அவர்கள்   காலநிலை நெருக்கடியை , புதிய கரியமில தொழில் வணிகத்திற்கான  வாய்ப்பாகவே அணுகுகிறார்கள்.இது காலநிலை மாற்றத்திற்கான மாநாடே தவிர கரிமத்தொழிலுக்கான மாநாடல்ல .நாம் இங்கே வந்தது பூமித்தாயின் மரணத்தின் மீது தொழில் செய்யவும் ,அதன் சக்திகளை விற்கும் தொழிலை முன்னெடுக்க வரவில்லை .நாமிங்கு இருப்பது நமது பூமித்தாயை காப்பதற்கும் ,வருங்கால மனித இனத்தை பாதுகாக்கவும் தான் நாம் இங்கு வந்துள்ளோம்.

நேற்று ,காடுகளை கரிம வியாபாரச்சந்தையாக மாற்றினார்கள் ,இன்று அதுவே நிலத்தின் மீது செயல்படுத்தப்படுகிறது ,கடல்கள் மீது முயற்சிக்கப்படுகிறது ,வேளாண்மை பாதிப்படைகிறது .வேளாண்மையே உணவுப்பாதுகாப்பு ,வேலைவாய்ப்பு ,வாழ்வு மற்றும் கலாச்சாரம் .
இந்த உலகமும் நமது வாழ்வும் விற்பன்னைகானதல்ல .

வளர்ந்த நாடுகள் தீர்கமான முடிவுகளுடனும் அதிக முன்னேற்றத்திற்கான ஆர்வத்தோடும் ,வளர்ந்துகொண்டிருக்கும் நாடுகள் தங்களின் பங்களிப்பையுணர்ந்து வறுமையொழிப்பிற்கான பொருளாதார மற்றும் தொழ்நுட்ப பகிர்தலை முன்னெடுப்பதும்  தேவையாயுள்ளது. கலாச்சார மற்றும் நாகரீகத்தின் வாயிலாய்  நலமான வாழ்வு என்ற இலக்கை நோக்கி  முதலாளியத்திற்கு மாற்றீடான ஒரு புதிய அணுகுமுறையை  பொலீவியாவில் நாங்கள் மேற்கொள்ளுகிறோம் மேலும் சமூகத்திற்கும் இயற்கைக்கும்  நடுவில் ஒரு சமநிலையை நிறுவகிக்க நாங்கள் அதிக அக்கரை எடுத்துக்கொள்கிறோம் . உலகப்பருவநிலை கட்டமைப்பை உறுதிபடுத்தும் தீர்கமான தீர்மானத்துடன் பொலீவியாஇங்கு வந்துள்ளது . எங்கள் நாடு  REDD போன்ற கரிச்சந்தைக்கான  வணிகத்திட்டத்தை தூக்கிப்பிடிப்பதில்லை .மாறாக பூர்வகுடி மக்கள் ,உழைக்கும் மக்கள் போன்றவர்களை கொண்ட நீடித்த வன மேலாண்மை திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துகிறோம் . சில நாடுகளின் பொறுப்பற்றதனத்தாலும் பேராசயினாலும் ஒட்டுமொத்த உலகை பலிகொடுக்க முடியாது . 
இது பூமித்தாய்க்கு பதில்சொல்லவேண்டிய தருணம் .

No comments:

Post a Comment