Pages

Thursday, 4 April 2013

சூழலிய சோசியலிசம்




ன்று மேற்குலக நாடுகளில் தீவிரமாக விவாதிக்கப்படும்  சுற்றுச்சூழல் பிரச்சினை அங்கு பல்கூறுகளாய் பகுப்பாய்வு செய்யப்பட்டு  அதன் விளைவையும் ,விளைவிற்கான தீர்வையொட்டிய  ( நடைமுறைசாத்தியககூறுகளுக்கு  ஒத்திசைந்த) கருத்தாக்கங்களையும் வரைவு செய்ய , புதுப்புது சொல்லாடல்களாலும் சிந்தனைகளாலும் நுணுக்கமாக திறனாயப்படுகிறது. ஜான் பெல்லாமி பாஸ்டர் மற்றும் மக்டோப் போன்ற மேற்கத்திய சூழலிய  சிந்தனையாளர்கள்  வேகமாக அதிகரித்துவரும் சூழலியல் பிரச்சினைகளுக்கான தீர்வினை மார்க்சிய நோக்கில் அணுகி  தொடர்ச்சியாக தங்களது சிந்தனைகளை  மார்க்சிய சூழலிய சொல்லாடலின் வழி முன்னெடுக்கிறார்கள்  .அது மெல்ல அடுத்த கட்ட சிந்தனை யூக்கியாக பரிணமித்து பொதுப்பரப்பிலும், அறிவு வட்டத்திலும் விவாதிக்கப்படும் முக்கிய கருப்பொருளாகியுள்ளது  .அங்கு சுற்றுச்சூழூல்வாதிகளும் மார்க்சியவாதிகளும் இணைந்து வேளை செய்ய வலியுறுத்தப்படுகிறது.இச்சூழலில் முதலாளிய ஆதிக்கத்தில் மோசாமாக தாக்குண்டிருக்கும் மூன்றாம் உலக நாடுகளான இந்தியா போன்ற நாடுகளில் சூழல் பற்றின அக்கரைத்தன்மையும் சிந்தனைபோக்கும் அதல பாதாளத்தில் உள்ளது என உறுதியாக சொல்லலாம் .
லாப நோக்கத்தை மட்டுமே கருத்தில்கொண்டு காட்டுமிராண்டித்தனமாய் இயங்கும்  முதலாளியத்தின் பொருளாதார நலன் சார்  அரசு இயந்திரக்கட்டுமானம் மற்றும்  இயற்கை பற்றின புரிதலின்மை/அக்கரையற்றத்தன்மை  போன்ற சில குறிப்பிட்ட முக்கிய காரணிகளைக் கொண்டே இந்தியாவின் /தமிழகத்தின்  சூழல் எதிர்  திட்டங்களை இங்கு விளக்கலாம் .தற்போதைய  ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையின்  நச்சுவாயுக் கசிவுவும் , கெய்லின் எரிவாயு குழாய் பதிப்பும்  ,கூடங்குளம் அணுமின் திட்ட விரிவாக்கமும் எதார்த்த நிகழ்வுசாட்சியாக கண்முன் நிழலாடுகிறது. தொழிற்துறையில் குவிக்கப்பட்டிருக்கும் கட்டுப்படுத்தப்படடாத  முதலாளியத்தின் மூலதனக்குவித்தல் போன்ற  முதலாளிய நலன் சார்  அரசு இயந்திரத்தின்  செயல்பாடுகள் மிகவேகமாக  மக்கள் நலனுக்கு எதிராகவும்  இயற்கை வளங்களை அழிக்கும் செயல்களை பொருளாதார வளர்ச்சி என்ற மேற்பூச்சில் தன் சுரண்டலை ஒழுங்கமைப்புடன்,மக்களின் ஒப்புதலுடனும் தந்திரமாக முன்னெடுக்கிறது 

எப்படி முதலாளியத்திற்கு எதிரான சமூக புரட்சியும்  கலாச்சார புரட்சியும் அவசியமோ அதேபோன்று சூழலை நெருக்கடியில் தள்ளிய ,தள்ளிக்கொண்டிருகின்ற முதலாளிய மற்றும் முதலாளிய சார் அரசு இயந்திரத்திற்கெதிரான சூழலியல் புரட்சியும் நமக்கு அவசியமாகிறது ,மண்ணுக்கேற்ற சோசியலிச கருத்தாக்கங்களை சுவீகரித்து  அரசியல் கோட்பாட்டை வளர்த்தெடுக்கப்பட்ட நமது சிந்தனையை இவ்விடயத்தில் மெருகேற்ற , மீண்டும்  மேற்கு நோக்கியே திரும்ப வேண்டியதாயுள்ளது .
இக்கட்டுரையாசிரியர்  இயான் ஆங்கஸ் , கனடாவை சேர்ந்த சோசியலிஸ்ட் ஆவார் .சூழல் தொடர்பபான இவரது கட்டுரைகளும் ,புத்தகங்களும்  தொடர்ந்து அங்கு கவனிக்கபட்டுவருகிறது .அவரது  “How to make an Eco socialist Revolution “எனும் கட்டுரையின் சில முக்கிய பாகங்களை அவரின் அனுமதியுடன் மொழிபெயர்க்கப்பட்டு   இங்கு தருவிக்கிறோம் 



முதலாளித்துவம் அகற்றப்படவில்லையெனில் அதனால் கட்டவிழ்த்துவிடப்பட்ட பெரும் உற்பத்தி சக்திகள் அழிவுச்சக்திகளாக உருமாறும் என  150 ஆண்டுகளுக்கு முன் கார்ல் மார்க்ஸ் அவதானித்தது  மிகச்சரியாக நடந்தேறியது  .

இதற்குமுன் இல்லாத புத்தாக்க சிந்தனை மற்றும் விடுதலைஅலையானது  தன்னை அழிவுசக்தியாய் , சிதைவாய் ,மரணமாய் உருமாற்றிக்கொண்டது .இதுவே பலர் காணும் சாட்சியாய் அதிகரித்துக்கொண்டிருக்கும் முதலாளித்துவத்தின் அடிநாதமாகும்.
அது நேரடியாக மனித இனத்தின்  இருப்பை அச்சமூடியதுடன் ,இப்புவியில் வாழ்வை பகிர்ந்துகொள்ளும் லட்ச்சக்கணக்கான தாவர மற்றும் விலங்கினங்களின் இருப்பை ஞாபகப்படுத்திகொள்ளவில்லை.

பல மனிதர்கள் தங்களின் தொழிநுட்ப்ப அல்லது  அரசியல் திருத்தங்கள்  மூலம்   சுற்றுசூழல் பிரச்சனையை பன்முகத்தன்மையுடன் அணுகினார்கள்.பெரும்பாலோர்களின் நடவடிக்கைகள் கவனத்தில்கொல்லும்படியான தகுதிடயவனவாகவும் இருந்தன. இக்கிரகத்தில் ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கம், பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்புகளில் நீடிக்கும்வரை பலதரப்பட்ட சுற்றுசூழல் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாணமுடியாது என்பதை சோசியலிசவாதிகளான  நாங்கள் அறிவோம்.

எல்லாவற்றிற்கான விடைகளை நாங்கள் கோரவில்லை மாறாக எல்லவிற்குமான  ஒரே  விடையுண்டு.”சூழலிய சோசியலிச புரட்சியேமனிதன் மிச்சமிருக்கும் இயற்கையோடு இசைவாய் வாழச்செய்யும் நீடித்த மாற்றத்திற்க்கான அடிப்படை

இந்த மாற்றம் நிகழவில்லையேன்றால் அழிவை தள்ளிப்போடலாம் ஆனால் தவிர்க்கமுடியாது
"
பருவநிலையும் முதாளித்துவமும் "என்ற எங்களின் தலையங்கம் சொல்வதென்னவென்றால் "சூழலிய சோசியலிசம்  அல்லது கொடுமைத்தனம் "மாறாக மூன்றாமொன்று இல்லை .
 ஆனால் "சூழலிய சோசியலிசம் " என்றும்" சூழலிய சோசியலிச புரட்சியென்றும்  "எதை சொல்கிறீர்கள் ?
முதலாளியத்தை திறனாயத்தவறின சுற்றுச்சூழல்வாதிகள்:

சூழலிய சோசியலிசவாதமென்றால் என்ன ?
"
சூழலிய சோசியலிசம்இந்த வார்த்தைக்கு எந்தவொரு காப்புரிமையும் இல்லை மற்றும் தன்னை சூழலிய சோசியலிசவாதியென்று  சொல்லிக்கொள்பவர்கள்   அனைத்தையும் நம்புவதில்லை .ஆகையால் இங்கு நான் சொல்வதெல்லாம் எனது சொந்த பார்வையின் பிம்பங்களே .
சுற்றுச்சூழலியல் மற்றும் மார்க்சியத்தை திறனாய்வதலி ருந்து தொடங்குகிறது  சூழலிய சோசியலிசவாதம்.

இயற்கையின் இயக்கங்களை புரிந்துகொள்ள சூழலியல் ஒரு சக்திவாய்ந்த கருவியாய் உள்ளது .சூழலலானது தனியான நிகழ்வாய் அல்லது செயல்பாடுகளாய் இல்லாமல் ,ஒன்றுக்கொன்று இணைந்த ஒன்றுக்கொன்று தொடர்புடைய சூழைமைப்பாயுள்ளது.
இன்றியமையாத ஆழ்ந்த புரிதலை தந்த ,தருகின்ற சூழலை ,வாழும் சாத்தியக்கூறுகலனைத்தும் உருவாகித்தந்த சிறந்த ஒழுங்கமைப்பை மனித நடவடிக்கைகள் பலவீனபடுத்திகிறது.

மனிதனால் அழிவுக்குள்ளக்கப்பட்டதை  சிறப்பாய் விளக்கிய சூழலலானது ,சமூக பகுப்பாய்வில்  பின்தங்கியத்தை குறித்துச்சொல்லவேண்டுமென்றால்,சில சூழலிய சோசியலிசவாதிகள் இதை முன்னெடுத்தவிதமனைத்தும்  , அழிவை நிறுத்துவதற்கான பாராட்டத்தக்க மேற்பூச்சு திட்டத்தையே ஒத்திருந்தது .
மற்ற விலங்குகள் போலல்லாமல் ,மனிதனக்கும் சுற்றுப்புறச்சூழலுக்குமான  உறவை நமது எண்ணிக்கையிலாலேயோ  அல்லாத நமது தாவரவியலாலேயோ விளக்கமுடியாது  .அதனால்தான் சூழனாது இதோடு நின்றுவிட்டது .
ஏனென்றால் மனிதயினத்திற்கும் இயற்கைக்குமான உறவானது மனிதசுபாவத்தினாலோ அல்லது அறியாமை மற்றும் தவறான புரிதலின் காரணமாகத்தான்  சிக்கலுக்குள்ளாகிறது  என்று அவர்கள்  கருதுகிறார்கள் . நமக்கு உண்மை தெரியும்வேளையில்தான் உலகம் மாற்றமடையும் .
முதலாளியத்தை  ஒருமித்தவிதமாய் திறனாயத் தவறியதால்  உலகைசுற்றியுள்ள அனைத்து பசுமைஅமைப்புகளும் திறனற்றுப்போனது .இதைவிட மோசமென்னவென்றால் அவர்கள் தாரளமயமாக்களை முன்னெடுக்கும் அரசுடன் கூட்டு சேர்ந்து ,அரசின் கொள்கை முடிவுகளுக்கு   பசுமைப்போர்வை போர்த்தும் பினாமியாய் செயல்பட்டார்கள் . இதுபோலவே கார்பரேட்  அசுத்தவாதிகளிடமிரிந்து தானம் கேட்டு பிரச்சாரம் செய்ய முன்னுரிமை தந்து  மிகப்பெரிய கட்டமைப்பை கொண்டு சுற்றுச்சூழல் தன்னார்வ அமைப்புகள் செயல்பட்டன .
ஏனென்றால் அவர்களுக்கு முதலாளித்துவம் பற்றி தெரியவில்லை, ஆகையால் அந்த முதலாளித்துவர்களிடம் நட்பாய் இருந்தால் இந்த பிரச்சனையை தீர்க்கலாம் என்றென்னினார்கள்  .  

மாறாக மார்க்சியத்தின்  மிகப்பெரும்  பலமானது ,முழுதான  முதலாளித்துவத்தை  பகுப்பாய்வு செய்து அது எவ்வாறு குறிப்பிட்ட சமூகக்குழுமத்தில்   வெற்றியாகவும் அதேசமயத்தில் அழிவாகாவும் உள்ளதென விளக்கியது .
மார்க்சியமானது ,சாத்தியமுள்ள மற்றும் தேவையான மாற்று சமூகத்தை காட்டியது .அந்த சமூகத்தில் முதலாளித்துவத்தின் உற்பத்தி கூட்டு உற்பத்தியாய் மாறியிருக்கும் ,அந்த சமூகத்தில் முதலாளித்துவர்களின் சொத்துக்கள் உலக பொதுவானதாக மாறியிருக்கும் .

சுற்றுச்சூழலியத்தை திறனாயத்தவறின சோசியலிசவாதிகள் :
மார்க்சின்  சிந்தனைகளுக்கு அடிப்படைசூழலியல்”, என்று நாம் சொல்லும்வேளையில் ,20 நூற்றாண்டில் சூழலியல் சிந்தனைகளில்  மார்க்ஸ்சிய அறிவியலார்கள்   பெரும்பங்காற்றியதை  ஜான் பெல்லாமி பாஸ்டர் சுட்டிக்காட்டுகிறார்.
ஆனால் 20நூற்றாண்டின் மார்க்சிய இயக்கங்கள் இச்சுற்றுசூழல் பிரச்சனைகளை புறந்தள்ளில அல்லது புரட்சிக்கு முன்னோ பின்னோ சோசியலிசமானது மந்திரத்தால்  எல்லாவற்றிற்கும் தீர்வுகாணும்   என்று கண்மூடித்தனமாக நம்பின

மோசமென்னவேன்றால், 20நூற்றாண்டில்  சூழலுக்கு மோசமான  பெரும் அச்சத்தை உண்டுபண்ணியது யாரென்றால் தங்களை சோசியலிசவாதி என்று சொல்லிக்கொண்ட நாடுகள்தான்  .சிலவற்றை குறிப்பிட்டால்  செர்நோபில் பயங்கரம் அல்லது ஆரல் கடலினை வற்றச்செய்தது அல்லது விஷமாக்கியது போன்றவைகள் தெளிவுபடுத்துவது என்னவென்றால் முதாளித்துவத்தை அகற்றினால் மட்டும் நாம் உலகை காப்பாற்ற முடியாது .
சோவியத் யூனியன் மக்களும் அவர்களை ஒத்த நாடுகளும் தாங்கள்தான் சோசியலிசத்தை கட்டமைப்பு செய்கிறோம் என்றேன்னுகிறார்கள் . சோசியலிசத்தின் மீதான    உலககத்தின் பார்வையும் இதுவே.
ஆக நாம்இம்மாதிரியான சமூகங்களை  சோசியலிசவாதிகலென்று அழைக்கலாமா அல்லது வேறு ஒரு பெயர் வைக்கலாமா என்று பார்க்கும்பொழுது இக்கேள்வியை நாம் அடிக்கோடிட்டு அடுத்த சோசியலிச சமூகத்தை கட்டமைக்கும் முயற்சியின்போது நாம் யோசிக்கவேண்டியதாயிருக்கிறது  .

மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் :
நமது பதில் இரு பகுதிகளை கொண்டது .
பொருளாதாரத்தை இயக்கும் சக்திகளான லாபத்தையும் ,குவித்தலையும்  நீக்குங்கால் ,முதலாளியத்தின் உள்ளார்ந்த இயக்கமான மாசையும் அழிவையும் நீக்கும்.தவறான கொள்கைகளும் ,அறியாமையும் மிகக்கடுமையான சூழல் பிரச்சனையை ஏற்படுத்தியது.இன்று நாம் சந்திக்கும் உலக நெருக்கடிக்கு காரணமான  தவறான கொள்கையும் ,அறியாமையும்  முதலாளித்துவம்  வேலை செய்வதன் தவிர்க்க முடியாத விளைவாகும்.முதலாளியத்துடன் ஒத்திசைந்த சூழல்  சாத்தியமற்ற உலகமாகும் சோசியலிசமானது  உடனடியாக இதை செய்யாது ஆனால் அதற்கான சாத்தியக்கூறுள்ளது.இரண்டாம் பகுதியான விடையானது ,வரலாறு தனியொருவரின் இயக்கத்தால் உருவாக்கப்படவில்லை .சோசியலிச உருமாற்றத்தை சாதித்தவர்கள் உண்மையான மக்கள் , தங்களின் அனுபவங்களின் கற்றுக்கொண்ட மக்கள் ஆவார்கள் .
கடந்த 25 வருடங்களாக க்யுபாவில் சூழலுடன் ஒத்திசைந்த திடமான பொருளாதாரம்  செயல்பாட்டிலுள்ளதோடு ,WWFஇன் உலகின் உறுதிவாய்ந்த சமூகத்திற்க்கான வரைமுறைகளை பூர்த்திசெய்யும்  சில நாடுகளில் க்யுபா தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகிறது .

நமது சாதனையாலும் ,20 நூற்றாண்டில்  சுற்றுசூழலில் தோல்வியடைந்த சோசியலிசத்தாலும் நாம் கற்றுக்கொண்ட பாடமானது , சோசியலிச கோட்பாடுகள் , சோசியலிச திட்டங்கள் மற்றும் சோசியலிச இயக்கங்கள் யாவற்றுக்கும்" சுழல்" ஒரு மைய பகுதியாக இருக்கவேண்டும்.சூழல் சமதர்மமானது ,பசுமையின் சிறப்பையும் சிவப்பின் சிறப்பையும் ஒன்றிணைத்து அதன் வலிவற்ற பகுதிகளை களைந்து கடந்து வருவது.அது ,மனித சமூகத்தின் மார்க்சிய திறனாய்வையும் ,இயற்கையுடனான நமது உறவு குறித்த சூழல் திறனாய்வையும் ஒன்றிணைக்க முனைகிறது.
அது இரண்டு அடிப்படையான ,பிரிக்கமுடியாத கூறுகளை உள்ளடக்கிய  சமூகத்தை கட்டமைக்க முயல்கிறது
அது சமதர்மமாக ,ஜனநாயகத்தை பூர்த்திசெய்து ,தீவிர சமத்துவமாக ,சமூக நீதியுடயதாக இருக்க வேண்டும்.உற்பத்தியில் கூட்டுரிமை பெற்று ,சுரண்டல் நீக்கப்பட்டு ,லாப நோக்கமற்ற ,குவித்தலற்ற பொருளாதரத்தை இயக்கம் விசையாக இருக்கவேண்டும் .
அது சிறப்பான சூழலியல் கொள்கைகளுடன் ,சுற்றுசூழலிற்கெதிரானவற்றை தடுப்பதற்கு அதிக முக்கியத்த்துவம் குடுப்பதாய்  ,சிதைந்த சூழலை மறுக்கட்டமைப்பு செய்வதாய்  ,சூழல் வலிமையுடன் கூடிய கொள்கைகளைக்கொண்ட விவசாயமாகவும் ,தொழிட்ச்சாலைகலாகவும் இருக்கவேண்டும்.
ஜான் பெல்லாமி பாஸ்டர் தனது  The Ecological Rift என்ற புத்தகத்தில் , சூழலிய சோசியலிசத்தின் தேவையை இவ்வாறு குறுப்பிடுகிறார் .
"
சூழலியல் புரட்சி மட்டும் சோசியலிசமல்ல , சோசியலிச புரட்சி மட்டும் சூழலிய லல்ல "
சூழலிய சோசியலிச புரட்சியென்றால் என்ன ?
நமது நோக்கமானது  முதலாளியத்தை மறுகட்டமைப்பு செய்வது    அல்லது  முதலாளியத்தின் உரிமையில் சிறு மாற்றம் செய்வது மட்டுமில்லை ,ஆனால் மன்த்லி ரெவியுவின்  சமீபத்திய பதிப்பில் மக்டோப் சொன்னதுபோலே "உண்மையான சூழலியசமூகமென்பது  இயற்கை கட்டமைப்போடு ஒத்திசைந்து இருப்பதுதான் "
மக்டோபின் சமூகம் கீழ்வரும் எட்டு சிறப்பியல்புகளை கொண்டிருக்கும்
அடிப்படை மனித்தேவைகள் பூர்த்தியானபின் ,வளர்ச்சியை நிறுத்தவேண்டும்
மக்களிடம் நுகர்வு கலாச்சாரத்தை மிகைவாய் தூண்டக்கூடாது
வருங்கால சந்ததியினரின் தேவையினை உணர்ந்து வாழ்வாதாராமான இயற்கை கட்டமைப்பை பாதுகாத்தும் அதன்  வளங்களை வரையறு செய்து மதிக்கவேண்டும் .
தற்கால மக்கள் தேவைகளை புறந்தல்லாமலும் ,நீண்ட கால சூழலிய /சமூக தேவைகளை அடிப்படையாக கொண்டும்  முடிவெடுக்கவேண்டும்
மனித ஆற்றலின் முழு வளர்ச்சியினை சாத்தியப்படுத்தவேண்டும்.இச்சிறப்பியல்புகளை  கொண்ட சமூகத்தில்  முதலாளியத்திற்கெதிரான அனைத்து  அம்சங்களும் உள்ளன இம்மாற்றத்தை நிறைவேற்றுவது இன்றியமையாதது ,ஆனால் அது  மிக விரைவாகவும் எளிதாகவும் நிகழும் என்று அவதானிக்கக்கூடாது .

சுமார் 40 வருடத்திற்கு முன்பு 1971 இல், நவீன சோசியலிசவாதிகளில் முக்கியமானவருமான பேரி கம்மெனர்  தொழிற்சாலை மற்றும் விவசாய துறைகளை மறுக்கட்டமைப்பு செய்து சூழல் அழிவுகளை பின்னோக்கி சென்று உறுதியான சூழலிய கண்ணோட்டத்தில் அவதானிப்பதாவது "பெரும்பாலான தேசங்களின் இயற்கை  வளங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள மூலதனங்களை, மறுகட்டமைப்பு முயற்சிகளுக்கு திருப்பி   குறைந்தது ஒரு தலைமுறைக்கு ஈடுசெய்ய வேண்டியிருக்கும் "என்றார் 
கம்மெனர் இதையெழுதியதைதொடர்ந்து  வந்த  40 வருடங்களில்    சுற்றுச்சூழல்  அழிப்பு வீதம்  மிக வேகமாக அதிகளவில் தீவிரப்படுத்தப்பட்டது .அழிந்தவைகளை மறுகட்டமைப்பு செய்வதற்கான காலமும் பணமும் அதிகரித்தவண்ணம் உள்ளது .மாற்றத்திற்கான   புது அறிவியலும்   புது சிந்தனையும் தேவையாயுள்ளது .

மாற்றத்திற்கான துவக்கப்புள்ளி :
மனித வாழ்விற்கான சூழலிய சமூகத்தை கட்டமைக்க வாய்ப்புள்ள அனைத்து வழிகளிலும் தெளிவான மற்றும் விழிப்புணர்வு நோக்குடன் கூடிய புரட்சிகர கட்டுமானம் தேவைப்படுகிறது .ஒவ்வொரு நாட்டிலும் நடைமுறையில் இருக்கும் சட்டங்களை உடைத்து ,உழைக்கும் மக்கள்    ,பூர்வகுடி மக்கள் ,விவசாயிகள் மற்றும் அகதிகளுக்கு மட்டும் பதிலளிக்கும் வகையில்   சட்டமாற்றத்தை அந்நாட்டு அரசுகள் முன்மொழிய வேண்டும் .
மனிதயினம் இன்று பெரும் குழப்பத்தில் உள்ளது .மரணத்திற்கான முதலாளியத்தின் வழி செல்வதா அல்லது இயற்கையோடு ஒத்திசைந்த மனித வாழ்வோடு செல்வதா என்று .இயற்கையுடன் சமன்பாட்டு வாழ்வதற்கு மனிதயினம் முதலில் ஒற்றுமையுடன் இருக்கவேன்டியாதகிறது .
இவ்வுலகை காப்பதற்கும் சூழலிய சோசியலிச புரட்சியை கட்டமைக்கவும் மூன்று வார்த்தைகளை நாம் எப்போது நினைவில் வைப்போம் .

ஒன்றுபட்டு  உழைப்போம்
முதலாளியத்தை முடித்துவைபோம்
முதலாளியம் நம்மை முடிப்பதற்குமுன் .


No comments:

Post a Comment