சூழலின் மார்க்ஸிய அரசியல் பொருளாதாரம்
தற்போதைய சூழல் அவசரகால நிலையை இக்கிரகம் எதிர்கொள்வதற்கும் ,வேகமாக அழிந்துவரும் புவிக்கோளின் பல்லுயிரியத்திற்கும் முதலாளியத்தின் பொருளாதார கட்டமைப்பே அனைத்து காலநிலை நெருக்கடிச்சிக்கலுக்கான வேர் என்று சந்தேகத்திற்கு இடமின்றி தெரியும்வேளையில்,சுற்றுச்சூழல் சிதைவை சுழல் மீது கண்மூடித்தனமான திணிக்கும் முதலாளியம் குறித்த நமது புரிதல் இன்னும் போதாமையாகவே உள்ளது . இப்போதாமையின் விளைவே ‘இயற்கை முதலாளித்துவம்’ மற்றும் “பருவநிலை முதலாளித்துவம்” போன்ற வடிவில் சுற்றுச்சூழலின் எதிரியே சூழலை காக்க வந்த மீட்பராக வேறுவடிவில் முதலாளிய அமைப்பானது எழுச்சிபெற பெரு வாய்ப்பாக உள்ளது.
இப்புவியின் இருப்பை அச்சுறுத்தும் உற்பத்தி அமைப்பின் உறவுகளை, அதன் நிகழ்கால
உற்பத்தி நடவடிக்கைகளை மட்டும் கருத்தில் கொண்டு குறைவாக மதீப்பிடுவதே இப்போதமைக்கு காரணமெனலாம். ஆகவே ,இப்புவி எங்கும் ஒட்டுமொத்தமாக எதிர்கொள்ளும் சூழல் நெருக்கடியின் காரணியான முதலாளியத்தை நாம் முற்றாக புரிந்துகொள்வதற்கு முதலாளியம் குறித்தான மார்க்ஸிய திறனாய்வின் வழியில் சென்றால் மட்டுமே இதை புரிந்துகொள்ள முடியும்.
(19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கால )முதலாளிய சூழல் திறனாய்வு பொதுவாய் பலவீனமாக இருப்பதற்கு காரணம் , அக்காலகட்ட திறனாய்வாளர்களின் வரலாற்று சூழலாகும். அவர்களின் கருத்தியல்களானது 19 ஆம் நூற்றாண்டு சூழலில் நிலவிய முதலாளித்துவ அமைப்பை மையநீரோட்டமாக கொண்டவை .இதன் விளைவால் 20 நூற்றாண்டில்(21ஆம் நூற்றாண்டும் கூட!) தொடர்புள்ள பெரும்பாண்மையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் சிக்கல்கள் குறித்த போதுமான திறனாய்வுகள் மேற்கொள்ளவில்லை .சூழல் குறித்த மார்க்ஸின் இன்றியமையாத திறனாய்வானது 19 ஆம் நூற்றாண்டின் வரலாற்று சூழலோடு வரையறுக்கப்பட்டதால் முதலாளியத்தின் போட்டி மிகுந்த கட்டத்தை எழுதியவர்,முற்றுரிமை வாய்ந்த முதலாளிய தோற்றத்தின் விளைவால் சுற்றுச்சூழலை அழிக்கும் முதலாளிய அமைப்பின் சில அவசிய பண்புகளை கண்டுகொள்ள முடியாமல் போனது . ஆகையால் ,பின்வரும் ஆய்வுகளில் சூழல் குறித்த மார்க்ஸ் மற்றும் எங்கெல்சின் திறனாய்வை மட்டும் விவாதிக்கப்போவதில்லை ,இவர்களுக்கு பின்வந்த மார்க்சியர்கள் மற்றும் பொருளாதார அறிஞர்களான வெப்லன் (Veblen) , பால் பாரன்(Paul Baran) ,சுவீசி(Sweezy) மற்றும் ஆலன் சிணைபார்க்( Allan
Schnaiberg)போன்றோர்களின் திறனாய்வையும் விவாதிக்க இருக்கிறேன்.
மார்க்ஸின் அரசியல் பொருளதார பகுப்பாய்வானது பயன்மதிப்பிற்கும்(Use
Value) பரிவர்த்தனை மதிப்பிற்குமான(Exchange
Value) வேறுபாட்டினை விளக்குவதிலிருந்து தொடங்குகிறது.ஒவ்வொரு சரக்கிற்கும் பயன் மதிப்பும் பரிவர்தனை மதிப்பும் இருக்குமென்று தனது மூலதன தொடக்க பக்கங்களில் விளக்கும் மார்க்ஸ் போக போக பரிவர்த்தனை மதிப்பானது பயன்மதிப்பை ஆளுமை செய்வதை விளக்கிச்செல்வார் . பொதுவாக பயன்மதிப்பானது உற்பத்தி தேவையோடு இணைவாக்கம் பெற்று இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவை அடித்தளமாக கொண்டிருக்கும்;அதாவது மனித தேவையை பூர்த்திசெய்வது.ஆனால் இதற்குமாறாக பரிவர்த்தனை மதிப்பானது லாபநோக்கத்தை சுற்றி இயங்குவதாகவும். முதலாளிய உற்பத்திக்கும் பொதுத்தேவை உற்பத்திக்குமான முரண்பாடு இங்கிருந்துதான் உருவாகிறது.
இம்முரண்பாடு மார்க்ஸ் காலத்தில் தீவிரமாக நிலவியது என்பதை ஜேம்ஸ் மைட்லாந்தின் (The eighth Earl of Lauderdale
(1759–1839))வாயிலாய் அறியலாம் . ஜேம்ஸ் மைட்லாந்து தொடக்க காலத்தைய சிறந்த பொருளாதார அறிஞர் ஆவார். பொது வளத்தை பற்றின “An Inquiry into the Nature of
Public Wealth and into the Means and Causes of its Increase” (1804) எனும் நூலை எழுதியவர் . அவரின் விளக்கப்படி பொது வளங்களானது பயன் மதிப்புகளை கொண்டிருக்கும் உதாரணமாக நீர் ,காற்று போன்ற வளங்கள் மிகுதியாக எப்போதும் இருக்கிறது.மாறாக தனியுடைமை செல்வமானது பரிவர்த்தனை மதிப்பென்னும் அடிப்படையில் கட்டமைக்கப்படுகிறது.இச்சூழ்நிலையில் தனியுடைமை செல்வந்தர்கள் கைகோர்த்துக்கொண்டு பொதுவளங்களை அழித்தொழிக்கும் இந்நிகழ்முறை அமைப்பை கண்டிக்கிறார்.அதாவது முன்பு நீர் ஆதாரங்கள் இலவசமாக பயன்படுத்த முடிந்தது ஆனால் தனியுடைமை அமைப்பில் கிணற்றிலிருந்து நீர் எடுக்க பணம் கொடுக்கவேண்டிய கட்டாயத்தால் தேசத்தில் தனியுடைமை செல்வந்தர்கள் அதிகரித்தனர்.மனிதனுக்கு உபயோகமானதும் பயன்மிக்கதுமாய் உள்ள சரக்குகளுக்கு பற்றாக்குறையை ஏற்படுத்தி செல்வந்தர்கள் ஆகும் தனியுடைமைவாதிகளுக்கு எதிராய் “மனிதனின் பகுத்தறிவு” கண்டிப்பாக “கலகம்” செய்யும் என்று அறிவித்தார். ஆனால் இதற்கு மாறாக அவரின் காலத்திலேயே பூர்ஷுவா சமூகமானது(முதலாளியத்திற்கு முன் கட்டம் எனலாம் ) முன்னவே இச்சுரண்டலை தொடங்கிவிட்டது என்பதை பின்னாளில் உணர்ந்துகொண்டார்.குறிப்பாக டச்சு காலனியர்கள் ,காடுகளில் உள்ள பூக்களை ,இலைகளை ,விதைகளை சேகரித்ததற்காக பூர்வகுடி மக்களை கொலுத்தி கொலை செய்தது , வெர்கீனியாவில் உள்ள நிலக்கிழார்கள் தங்களின் பயிர்களுக்கு நல்ல விலை கிடைக்கவேண்டும் என்பதற்காக அவர்கள் விளைவித்த பயிர்களுக்கு சட்டப்படி தீ வைத்தது போன்றவற்றை கண்டு இவ்வாறு எழுதுகிறார் " தனியுடைமை செல்வந்தர்களுக்கு எதிராய் ,பொது வளங்களை காக்கும் பொருட்டு பொதுவாக ஒன்றிணைய முடியாத இயலாமை அன்றி வேறொன்றுமில்லை ...!)
" மதிப்பின் இவ்விரு (பயன் மதிப்பு ,பரிவர்த்தனை மதிப்பு) வடிவங்களின் தலைகீழ் விகிதம்" முதலாளித்துவ உற்பத்தியின் முதன்மை முரண்பாடாய் பாரடாக்ஸ் கருதுவதை மார்க்ஸ் காண்கிறார்.முதலாளித்துவ வளர்ச்சியின் அனைத்து அம்சமும் சமூகத்தின் இயற்கை வளங்களை அழித்து துடைத்துவிட்டுப் போகிற பண்புகளக்கு உரித்தானவகையாக உள்ளன . இவையெல்லாம் பற்றி மார்க்ஸ் எழுதுகிறார் "முதலாளித்துவ உற்பத்தியானது வணிக நோக்கத்தாலும் ,போட்டிகளாலும் அனைத்து வளங்களையும் தேவையற்ற வகையில் வீணடிக்கின்றன .இது சமூகத்திற்கு (பொது வளத்திற்கு) இழப்பாகவும் தனியுடமை முதலாளிகளுக்கு ஆதாயமாக அமைகின்றது "
முதலாளித்துவ வளர்ச்சியில் பரிவர்த்தனை மதிப்பு பயன் மதிப்பை ஆளுமை செய்வது மற்றும் அதனால் சூழலுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்து மார்க்ஸின் மூலதன சூத்திரமான M-C-M′( பணம் -சரக்கு – பணம்)ல் காணலாம் .பொதுவாக மூலதனத்தை விளக்குவோர் ,அதை ஒரு எளிமையான சரக்கு உற்பத்தி முறைமை என்றும் சரக்கு உற்பத்திக்கும் பரிவர்த்தனைக்கும் இடையிலான நிகழ்முறையில் பணம் இடையீட்டு பாத்திரம் வகிக்கிறது என்பர் அதாவது C-M-C (சரக்கு -பணம் –சரக்கு) ; துவக்கம் முதல் இறுதிவரை சரக்கின் குறிப்பிட்ட பயன்மதிப்பில் அது உருக்கொண்டுள்ளதென விளக்குவர். இதற்கு மாறாக மார்க்ஸ் விளக்கும் முதலாளித்துவ உற்பத்தி முறையில் பரிவர்த்தனை உறவானது M-C-M′ ஆக உள்ளது .இதில் மூலதன பணத்தைகொண்டு உழைப்பையும் பொருளையும் சரக்காக உற்பத்தி செய்து பின் அதிக பணத்திற்காக அச்சரக்கை விற்பனை செய்து முடிக்கிறது. அதாவது M′ அல்லது M + Δm (உபரி லாபம் ). ஏனையோர் விளக்கும் உற்பத்தி முறையிலிருந்து மார்க்சின் விளக்கம் இங்கு பெரிய அளவில் வித்தியாசப்படுகிறது .அதாவது (மார்க்ஸின் விளக்கமான ) பரிவர்த்தனை உறவில் பணமானது சீரிய பாத்திரம் வகிக்கும் வரையில் இந்நிகழ்முறை முடிவில்லாது ஒன்றாக தொடர்ந்துகொண்டிருக்கும்;உபரி லாபம் மீண்டும் M′-C-M′′ ஆக முதலீடு செய்யப்பட்டு அது மீண்டும் M′’-C-M’′′ ற்கு ஊக்குவித்து காலம்தாரும் தொடர்ந்துகொண்டிருக்கும்.
மதிப்பின் இச்சூத்திரமானது தனி முதலாளிகள் மற்றும் முதலாளி வர்க்கம் முழுமையிடமும் இன்னும் போ! இன்னும் போ !என்று ஓயாது கூறுகிறது. தொடர் உற்பத்தி பெருக்கமானது தொழிலாளர் சக்தியை ஒன்றினையாமல் இடம்பெயர்த்து லாபத்தை விரிவுபடுத்தி வளத்தை குவிக்கிறது.
அதேநேரம் உற்பத்தி அதிகரிக்க நுகர்வு வட்டமும் அதையொட்டி அதிகரிக்கிறது. அரசியல் பொருளாதாரம் பற்றின மார்க்ஸின் இந்த உள்ளார்ந்த பகுப்பாய்வனது தொடர்உற்பத்தி பற்றின கருத்தாக்கத்திற்கு வித்திட்டது . இதுவே பின்னாட்களில் “தொடர் உற்பத்தி “(Tread Mill of Production)எனும் சிணைபார்க்கின் கருத்தமைவிற்கு அடிப்படையாக அமைந்தது
சூழலில் மார்க்ஸின் முக்கிய பங்களிப்பாக கருதப்படுவது வளர்சிதைமாற்றப்பிளவு குறித்த கோட்பாடாகும்.ஜெர்மானிய வேதியல் அறிஞரான லைபிக்கின் ஆராய்ச்சியில் கவரப்பட்ட மார்க்ஸ் ,மக்கள்தொகை திரட்சியாக உள்ள புது நகரங்களின் தொழிற்சாலை உற்பத்தி மையங்களுக்காக முதலாளித்துவமானது மண்ணின் வளங்களான பொட்டாசியம் ,நைட்ரஜன் போன்றவற்றை திருடி மறுதலையாக புவிக்கு தூய்மைக்கேட்டை விளைவிக்கிறது என்று விமர்சிக்கிறார்.லைபிக் இதை கொடிய சுரண்டல்(“Raubbau” ) அல்லது “கொள்ளை அமைப்பு” என்று அழைக்கிறார்.மார்க்ஸ் இதை விவரிக்கையில்
சூழலில் மார்க்ஸின் முக்கிய பங்களிப்பாக கருதப்படுவது வளர்சிதைமாற்றப்பிளவு குறித்த கோட்பாடாகும்.ஜெர்மானிய வேதியல் அறிஞரான லைபிக்கின் ஆராய்ச்சியில் கவரப்பட்ட மார்க்ஸ் ,மக்கள்தொகை திரட்சியாக உள்ள புது நகரங்களின் தொழிற்சாலை உற்பத்தி மையங்களுக்காக முதலாளித்துவமானது மண்ணின் வளங்களான பொட்டாசியம் ,நைட்ரஜன் போன்றவற்றை திருடி மறுதலையாக புவிக்கு தூய்மைக்கேட்டை விளைவிக்கிறது என்று விமர்சிக்கிறார்.லைபிக் இதை கொடிய சுரண்டல்(“Raubbau” ) அல்லது “கொள்ளை அமைப்பு” என்று அழைக்கிறார்.மார்க்ஸ் இதை விவரிக்கையில்
லைபிக் |
‘’முக்கிய விஞ்ஞானிகளுள் குறிப்பாக ,ஜெர்மன் விஞ்ஞானியான லைபிக் என்னை பெரிதும் கவனிக்கவைக்கிறார் மண் வளத்தை சுரண்டும் கொள்ளையடிக்கும் இம்முதலாளித்துவ சுரண்டல் அமைப்பு குறைவான காலத்தில் அதிகா லாபம் அடைகிறார்கள் .பழைமையான வேளாண் சமூகங்களான சீனா ,எகிப்து ,ஜப்பான் போன்ற நாடுகளில் அறிவார்ந்த வகையில் வேளாண்மையை மேற்கொண்டு இன்னும் சொல்லப்போனால் பல்லாயிரம் ஆண்டுகளாக மண்ணின் வளங்களை பாதுகாத்ததோடு மட்டுமல்லாமல் மண் வளத்தினை அதிகரிக்கவும் செய்துவந்ததை ,முதலாளித்துவ கொள்ளை முறையானது உலகின் சில பகுதிகளில் உள்ள மனவளத்தை அரை நூற்றாண்டில் சுரண்டியது’’.
மனிதனுக்கும் இயற்கைக்குமான வளர்சிதை மாற்றத்தில் இக்கொள்ளையானது "தீர்க்க முடியாத பிளவாக" முதலாளித்துவ சமூகத்திற்குள் வடிவெடுக்கும் என கருதுகிறார். முதலாளித்துவ வேளாண் உற்பதிமுறையின் உண்மை பண்பு குறித்து மார்க்ஸ் 'முதலாளித்துவ உற்பத்தியானது தொடர்ச்சியாக மண் மற்றும் உழைப்பு போன்ற வளச்சுரண்டல்களை மட்டுமே வளர்க்கிறது' என்கிறார்
இவ்வகை சூழல் உட்கருத்து குறித்த மார்க்ஸின் திறனாய்வை புரிந்துகொள்ள முதலாளித்துவம் பற்றின மார்சின் ஒட்டுமொத்த திறனாய்விற்குள் பார்த்தோமானால் ,மனிதனுக்கும் இயற்கைக்குமான வளர்சிதை மாற்ற உறவே தானாக உழைப்பு மற்றும் உற்பத்தி நிகழ்முறையாக வடிவம் பெறுகிறதென அவரின் திறனாய்விலிருந்து உணரவேண்டும்.கம்யூனிச/சோசியலிச சமூகத்தினை குறித்த மார்க்சின் தொடக்ககால விளக்கம் அதனாலேயே இப்படி இருந்தது "ஒன்றிணைந்த உற்பத்தியாளர்கள் மனிதனுக்கும் இயற்கைக்குமான வளர்சிதை உறவை பகுத்தறிவு வழியில் முறைப்படுத்தவேண்டும் அதுவும் குறைவான ஆற்றலை செலவிட்டு நிறைவேற்றவேண்டும்" என்கிறார் .சூழல் குறித்த அவரின் ஒட்டுமொத்த திறனாய்வு 'முதலாளியத்தின் கீழ் பிளவுபட்ட திறந்த வளர்சிதை(Open
metabolic Rift) மாற்றமாக இல்லாமல் மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவு மூடிய வளர்சிதை (Closed Metabolic Cycle)மாற்றப்பிணைப்பாக இருக்கவேண்டும்' எனக்கோருகிறது.இதுவே பொருளாதாரம் மற்றும் சமூகம் பற்றி புரிந்துகொள்ள வெப்பவியக்கவியல்
(Thermodynamic) கருத்துருவத்தை இதனுடன் இணைத்துக்கொள்ள மார்க்ஸ் அனுமதிக்கிறார்.
--தொடரும்
சூழலியல் பிரச்சனைக்கு மார்க்சியத்திலிருந்து துவங்கும் உங்கள் பணி உருப்படியான பணி; தொடரட்டும் உங்கள்சேவை.
ReplyDeletenandri ...
ReplyDelete