ஏகபோக முதலாளித்துவம் மற்றும்
சுற்றுச்சூழல்:
கனிம விஞ்ஞானத்தின் வளர்ச்சியால்
மார்க்சின் சூழல் குறித்த திறனாய்வுக்கூறுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல முக்கிய கனிம
விஞ்ஞானிகள் மற்றும் விஞ்ஞான தத்துவவாதிகளுக்கு தூண்டுதலாக இருந்தது.ஆனால் நடந்ததென்னவோ வேறு,மார்க்சிய அரசியல் பொருளாதாரத்திற்குள்ளாகவே மார்க்சின் “முதலாளித்துவ கொள்ளை" குறித்த திறனாய்வு 19 நூற்றாண்டு மற்றும் 20 நூற்றாண்டிற்கு இடையில் அரிதாகவே கவனிக்கப்பட்டது.
மூலதனத்தின் ஏகபோக
கட்டம், அது ஏற்படுத்திய சுற்றுச்சூழல் மாறுதல்கள் குறித்த சூழ்நிலைகள் மற்றும் அதன் விளைவுகளை
கண்டுகொண்டது 20 ஆம் நூற்றாண்டின் சூழலியல்
தொடர்பான மார்க்சிய மற்றும் தீவிர அரசியல்
பொருளாதாரத்தின் முக்கிய கண்டுபிடிப்பாகும்.
ஏகபோக முதலாளித்துவ
கோட்பாட்டின் ஆராம்பகால அறிஞர்களாக திகழ்ந்தவர்கள் ஜெர்மனியின் ருடால்ப் ஹில்பெர்டிங்க் மற்றும் அமெரிக்காவின் வெப்லன். இதில் ஹில்பெர்டிங்க் மார்க்சிய அரசியல்
பொருளாதாரத்தின் ஊடாய் நேரடியாக தனது
பகுப்பாய்வினை கட்டமைக்கிறார் ,ஆச்சர்யமளிக்கும் விதமாய் சுற்றுச்சூழல்
சூழ்நிலைகள் குறித்து சிறிதளவே பேசுகிறார். இதற்கு மாறாக , தன்னை
மார்க்சியவாதி என்று சொல்லிக்கொள்ளாத ஆனால் மார்க்சால்
ஈர்க்கப்பட்ட பொருளாதார அறிஞர் மற்றும் சோசியலிஸ்ட்டான
வெப்லனொ இப்படி பார்கிறார் - போட்டியற்ற
கட்டத்திலிருந்து ஏகபோக முதலாளித்துவ கார்பரைட்டாக
மாற்றமடையும் போக்கானது சுற்றுச்சூழல் ,கனிமவள பயன்பாடு மற்றும்
பொருளாதார விரையம் போன்றவற்றில் கடும்
விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்.
1923 இல்
தான் எழுதிய ‘Absentee
Ownership and Business Enterprise in Recent Times’ நூலில் “சுற்றுச்சூழல் மற்றும் பூர்வ குடி
மக்கள் என இரண்டையும் ஆக்கிரமித்து
வளத்தை சுரண்டி மூலதனத்தை குவிக்கும்
"அமெரிக்க திட்டம் " குறித்து வெப்லன் கடுமையாக விமர்சிக்கிறார். சட்டப்பூர்வு திட்டத்தினடிப்படையில் பொதுவளம் அனைத்தும் தனியார் லாபத்திற்காக மாற்றும் போக்கு நிலையாக நிறுவப்படும்
வடிவத்தை எடுக்கிறது என்ற ஜேம்ஸ் மைட்லாந்தின் வாதத்தொடு இது ஒத்திருக்கிறது. இவ்வழக்கத்தை குறித்து அவர் எழுதுகிறார் " அனைத்து பொதுவளங்களையும் தனியாரின்
லாபத்திற்காக ஒவ்வன்றாக மாற்றி தனது மூலதனமாக்கிக் கொள்கிறது ".இவ்வாறான கட்டற்ற போட்டியானது “உற்பத்தியை
வேகப்படுத்தியும் விலைக்குறைவை ஏற்படுத்தியும்” அது முக்கிய கனிம
வளங்களை அளவுக்கு அதிகமாக சுரண்டுகிறது என்று
வெப்லன் வாதிடுகிறார். இதுவே இயற்கை வழங்கும் வளங்களை
வேகமான மற்றும் பயனற்ற வெறுமையாக்கத்திற்கு வித்திடுகிறது என்கிறார். இவ்வாறு ஏகபோக முதலாளித்துவமானது பற்றாக்குறையையும் ஏகபோக விலையையும் கவனமாக
கட்டுப்படுத்தி பொதுவளங்களை மறைமுக சூழ்ச்சி திட்டத்தின்
வாயிலாய் தனியார் லாபத்திற்காக மாற்றிக்கொள்கிறது.
இந்த வளர்சிபோக்குகளை
மரத்துண்டுகள் ,நிலக்கரி ,எண்ணை மற்றும் எரிவாயு
போன்ற தொழிற்துறைகளில் அதிகமாக காணலாம் ,ஒவ்வொன்றிலும்
முதலில் மிகப்பெரிய அளவிலான விரையங்கள் சம்பந்தபடுகின்றன,பின் உடைமையாளர் அற்ற
ஏகபோக கட்டுப்பாட்டிற்கு அது வித்திடுகிறது.இதன்
வளர்ச்சியின் விளைவை குறித்து வெப்லன்
இவ்வாறு குறிப்பிடுகிறார் "லும்பெர்மனின் நிறுவனமானது 19 ஆம் நூற்றாண்டின் மத்திய காலகட்டத்தில் உபயோகிக்கபட்டத்திற்கு அதிகமான மரங்களை அதிகளவில் அழித்தது"என்கிறார்.
வெப்லன் |
பெரிய
வியாபாரங்களின் கீழ் பயன் மதிப்பு மற்றும் நுகர்வு மதிப்பு மாற்றமடைவதை
விளக்கியது வெப்லனின் மிக முக்கிய சூழலிய நுழைபுல
திறமாகும். ஏகபோக முதலாளித்துவத்தின் பண்பானது
,கார்பரைட்களுடனான விலை போட்டியை மறைமுகமாக
நீக்கும் ;அதற்கு உறுதுணையாக உற்பத்தியை
கட்டுப்படுத்தும். இவ்வாறு “ஏகபோக முதலாளித்துவம்” பெரும் தொழிற்துறை
நிறுவனங்கள் பெரும் ஆதாயம் அடைய
வழி செய்கிறது. விலை யுத்தங்கள் வெற்றிகரகமாக
தடை செய்தபின்னர் 'போட்டிக்குரிய செயல் திட்டமானது’ அடிப்படையான 'வரையறுக்கப்பட்ட இரண்டு பெருமுயற்சிகளில் முனைகிறது
' . உற்பத்தியை கட்டுப்படுத்தி உற்பத்தி செலவை குறைப்பது ;விலையை
குறைக்காமல் விற்பனையை அதிகரிக்க செய்வது. இவ்வாறு வெப்லன்
ஏகபோக முதலாளித்துவத்தின் முக்கிய திறன் உற்பதி விலையை உள்ளடக்கிய
அதாவது கூலியை குறைப்பதில் உள்ளதை சுட்டிக்காட்டுகிறார்.மார்க்சிய சொற்களில் சொல்வதென்றால் உபரி இலாபத்தின் அதிகரிப்பு.விற்பனை விலை அதிகரிப்பால்,
கொடுக்கும் எல்லா விலையிலும் ஒரு ஆதாய அளவு
உள்ளடங்கியிருக்கும். உற்பத்தி பொருட்களின் மொத்த விலை மீதான அதிக பங்குகள் விற்பனையை உயர்த்துவதோடு இணைவாக்கம் பெற்று சரக்கு உற்பத்தியை எதிர்க்கிறது.
இதன் விளைவால்தான் பயன் மதிப்பின் பொருளாதார
கட்டமைப்பு அளவிடற்கரிய வண்ணம் உள்ளன. இதன்
“ஒரே விளைவை” வெப்லன் இவ்வாறு கூறுகிறார்.
“விற்பனை
விலை மிகவும் சீராக மற்றும் கணிசமான அளவில் அதிகரித்துவருகிறது ;புத்தகங்களில் ஆய்வு செய்ததைவிட இது அதிகமாக
உள்ளது.சரக்கு உற்பத்தியாளர்கள் சரக்கின் விற்பனைத்திறத்திலேயே அதிக கவனம் செலுத்துகின்றனர்.இதனால் நாம் கொடுக்கும் விற்பனை விலையென்பது விற்பனைக்குகந்த தோற்றங்களை உற்பத்தி செய்வதற்காகவே கொடுக்கப்படும் விலையாக புத்தகங்களில் தோற்றமளிக்கிறது.ஆகவே இங்கு வேலைத்திறத்திற்கும் விற்பனைத் திறத்திற்குமான வித்தியாசங்கள் இவ்வாறு மங்கி போய்விடுகின்றன .இது சந்தேகத்திற்கிடமற்ற உண்மை.தற்பொழுது சந்தைகளில் நாம் கொடுக்கும் அனைத்து கடைவிலைகளும் விற்பனைக்குகந்த தோற்றங்களை உற்பத்தி செய்வதற்காக கொடுக்கப்படும் விலையே “
பொதி சரக்குகளில் (Package goods’)
வெப்லன் இதை பெரிதும் பயன்படுத்துகிறார்.
“வெளிப்பார்வை அம்சத்திற்காகவே இக்கொள்கலங்கள் விற்பனை ஆகின்றன . சில ஊதிய மிகுதியுள்ள கிளைகளின் பொதுவிளம்பரம் இது. இதற்காக பல கலைஞர்கள் ,காப்புரிமைவாதிகள் ,பேச்சாளர்கள் ,செயல் முறைப் பயிற்றாசிரியர்கள் ,மொழிபெயர்ப்பாளர்கள் வேலைக்கமர்த்தப்படுகிறார்கள். பொதுவிளம்பரத்திற்காக ஆலோசனை கூற ,போட்டி விற்பனைக்காக சிக்கலான அறிவுரை கூற ,அதன் பெயருக்காக மற்றும் ஆவணத்திற்க்காக ஒரு மனோதத்துவ நிபுணரை யும் இத்தோடு வேலைக்கு அமர்த்துகிறது. இதற்காகும் செலவெல்லாம் வரவேற்கப்படும்.கடைவிலையில் இக்கொள்கலங்களின் விலை ஒரு பாதி இருக்கும். இதை சரியாக சொல்லவேண்டுமென்றால் "பொதி சரக்குகள் " எனலாம்.நுகர்வோர் செலுத்தும் விலையில் இதற்கொரு பாதி விலையை கொண்டிருக்கும்.அழகு சாதன பொருட்கள் ,வீட்டு உபயோகப்பொருட்கள் போன்றவற்றில் இவை கணிசமானஆதாய விலையை கொண்டிருக்கும் “
விற்பனைத்திறத்தின்
ஊடுருவலால் உற்பத்தியில் ஏற்படும் விளைவான பொருளாதார விரையத்தின் அதிகரிப்பை வெப்லன் தனது ‘The Theory of the Leisure Class’ நூலில் இவ்வறு விளக்குகிறார் “செலவுகள்
ஒட்டுமொத்த மனித வாழ்க்கைக்கு அல்லது மனிதன் சுகமாக இருப்பதற்கு உதவியாயிருக்காது.ஆனால் ஏகபோக முதலாளியத்தின் கீழ் பெரும்பாலான பொருட்களை /சரக்குககளை வாங்குவதற்கான ஆரம்ப தேவை " பாகுபாடு தூண்டக்கூடிய பணஞ் சார்ந்த ஒப்பீட்டால் " ஏற்படுத்தப்படுகிறது.அதாவது மற்றவர்களைக்காட்டிலும் நம்மிடம் எதாவது கொஞ்சம் அதிகமிருக்கவேண்டும் என்ற நமது சமூகத் தனித்தன்மை எழுச்சியடைகிறது அதோடு "பகட்டான நுகர்வு" மற்றும் "பகட்டான விரையம் " என விதவிதமான
வடிவங்களில்
இணைவாக்கம் பெறுகிறது”
அதிகமாக
வைத்திருப்பவர்கள் தம்மிடம் உள்ளவைகளை சமூக அந்தஸ்திற்காக தம்பட்டம்
அடித்து காட்சிக்கு வைக்கிறார்கள்.கார்ப்பரைட்டுகள் இவ்வாறன பாகுபாடு தூண்டக்கூடிய
பணஞ் சார்ந்த ஒப்பீட்டை முதலில்
மேட்டுக்குடி வர்கத்திடமும் பின்னர் நடுத்தர மற்றும்
உழைக்கும் வர்கத்திடம் ஊக்குவிக்கிறார்கள்.சில சமையம் இதேல்லாம்
இல்லையென்றால் நமது சமூக அந்தஸ்து
பறிபோய்விடும் எனும் பீதியையும் உண்டாக்குகின்றனர்
வெப்லனால்
எழுப்பப்பட்ட புரிந்துகொள்ள சிக்கல்வாய்ந்த பிரச்சனைகளான முதலாளித்துவத்தின் கீழ் நுகர்வின் உருமாற்றம் மற்றும் பயன் மதிப்பின் உருக்குலைவு
போன்றவை மார்க்சின் எழுத்தக்களில் பெரும் பங்களிப்பு செய்யவில்லை. எங்கல்ஸ் எழுதுகிறார் முதலாளித்துவத்தின் கீழ் சரக்குகளின் உடனடி விளைவானது " தனது
பின்புலத்திலிருந்து வெகுதூரம் பின்வாங்கி, விற்பனை மூலம் இலாபம்
அடைவதாக அதன் தூண்டுவிசை மாறும்' .இக்கண்ணோட்டத்தில் பார்த்தோமானால் பயன் மதிப்பானது உற்பத்தி
சக்திக்கும் ,பரிவர்த்தனை மதிப்பு மற்றும் நுகர்வு
அமைப்பிற்கு கீழ்ப்படிந்து இருப்பது தெரிகிறது.
தொழில்நுட்ப
மாற்ற விளைவால் உற்பத்தி மற்றும் நுகர்விற்கான இடைவினை
குறித்தும் பயன் மதிப்பு பொருளாதார
கட்டுமான உருமாற்றம் குறித்தும் மூலதனம் எங்கிலும் மார்க்ஸ்
குறிப்பிடவில்லை. காரணம் என்னவென்றால் 19 ஆம் நூற்றாண்டின்
போட்டி முதலாளித்துவமானது , தற்பொழுது ஏகபோக முதலாளித்துவம் முழுமையாக வளர்த்தெடுத்திருக்கும் பிரம்மாண்டமான "விற்பனை முயற்சி"களை உழைக்கும் மக்களின் நுகர்வு பொருட்களில் வளர்த்திருக்கவில்லை. போட்டி முதலாளித்துவத்தில் வீணானவைகள் என்பது
பொதுச்செய்தி- தங்களுக்குள் உள்ள முரண்பாடுகள் மற்றும் நகல் போன்ற தனது உள்ளார்ந்த
போட்டிகளால் இவை உருவாகின்றன.
முக்கிய சிக்கலானது உற்பத்தி செயல்திறமென்னும் அளிப்பு(Supply) பகுதியில் இல்லை மாறாக அது சந்தையை உருவாக்கும்
தேவை(Demand) பகுதியில் உள்ளது . இக்காரணத்தினால் தான்
விளம்பரம் , சந்தைப்படுத்தல் மற்றும் உற்பத்திப்பொருட்களை தனித்து
காட்டுதல் போன்ற பொதுக் கூறுகள்
குறைவான அளவே 19 ஆம் நூற்றாண்டில்
ஆளுமை செய்தன. இதன் வளர்ச்சிபோக்குகள் குறித்த திறனாய்வு மேற்கொள்ள
அது தன்னை முழுமையாய் வெளிப்படுத்திய
20ஆம் நூற்றாண்டின் முற்பகுதிவரை வரை காத்திருக்க வேண்டியிருந்தது.முதலில் இதை திறனாய்வு செய்தவர் வெப்லன் .பின் மார்க்சையும் வெப்லனயும்
ஒன்றிணைத்து பாரானும் சுவீசியும் 1966 இல் வெளியிட்ட ‘ஏகபோக
முதலாளியம்’ நூலில் பகுப்பபாய்ந்தனர்.
ஏகபோக
முதலாளித்துவதின் கீழ் ,உற்பத்தியானது சீராக
விரிவாக்கப்படுகிறது.பின் இதனால் கிட்டும் பெரும்
பொருளாதார உபரியை அது உறிஞ்சிக்கொள்வதை
ஏகபோக முதலாளித்துவதின் மைய சிக்கலாக பாரானும்
சுவீசியும் கருதுகிறார்கள். பொருளாதார உபரியானது கீழ்வரும் வழிகளில் உறிஞ்சப்படுகிறது;முதலாளித்துவ நுகர்வுவாதம் ,முதலீடு அல்லது விரையம்
.முதலாளித்துவ நுகர்வுவாதமானது முதலாளி வர்கத்தின் ஒரு
பகுதியான குவித்தல் போக்கெனும் ஊக்கியால் கட்டுப்படுத்தப்படுகிறது .முதலீடானது சந்தை தெவிட்டு நிலையால் கட்டுண்டுள்ளன. ஆகையால் ஏகபோக கட்டத்தில்
முதலாளித்துவமானது சந்தை சிக்கல்கள் மற்றும்
உபயோகத்தின் வீழ்ச்சி வீதத்தால் உற்பத்தி திறனையும் ,தொழிலாளர் கூலியையும் அச்சுறுத்தி வைக்கிறது. இச்சூழ்நிலையில் பொருளாதார விரையத்தின்பால் நம்பிக்கையை ஆழப்படுத்தி சந்தையை மேற்கொண்டு செல்ல
உதவுகிறது -இது ஏகபோக முதலாளித்துவ பொருளாதாரத்தின்
முக்கிய பகுதியாகும்.
இராணுவ
செலவீடு மற்றும் விற்பனைக்கான செலவீடு
போன்றவகைகள் பொருளாதார விரையத்தின் பல்வேறு வடிவங்களே என
பாரனும் சுவீசியும்வாதிட்டார்கள். பின்னர்
“விற்பனை பொருளை/சரக்கை தனித்துவப்படுத்தி
காட்டுதல் ,விளம்பரப்படுத்தல் , பொதிகட்டுதல் ,திட்டமிட்டு வழக்கற்றுப் போகச்செய்தல் ,வடிவைப்பு மாற்றுதல் கடன் திட்டம்” போன்றவைகளும்
இதோடு சேர்த்துக்கொள்கின்றனர்.இவ்வாறான
விற்பனை முயற்சிகள் ஏகபோக முதலாளித்துவ கட்டத்திற்கு
முன்பு கூட இருந்தாலும் ,ஏகபோக
முதலாளித்துவத்தின் கீழ்தான் அது 'பிரம்மாண்ட பரிமாணம்'
எடுக்கிறது.
விற்பனை முயற்சிகளின் முக்கிய வெளிப்படை வடிவமாக திகழ்வது விளம்பரவாதமாகும், அது 20
ஆம் நூற்றாண்டில் பாய்ந்தும் திணறியும் வளர்ச்சியடைந்தது. "சண்டையிட்டுக்கொள்வது , நுகர்வு பொருட்களின் உற்பத்தியாளர்கள்
மற்றும் விற்பனையாளர்களுக்கு பதிலியாக இயங்குவது , சேமிப்போடு தளராது போர்புரிவது மற்றும் நுகர்வுக்கு சார்பாக மாற்றுவது " போன்றவைகளை
விளம்பர அமைப்பின் பிராதான செயல்பாடுகலாக பாரனும்
சுவீசியும்பார்கிறார்கள். நவீன சந்தைமயத்தை கருத்தில்கொள்ளும்போது
,விளம்பரவாதமென்பது
உருகும் பனிப்பாறையின் நுனியில் நிற்பதென அவர்கள் உணருகிறார்கள்;தற்போது
குறிவைத்தல்,ஊக்க ஆராய்சிகள்,உற்பத்தி
பொருள் நிர்வாகம்,விற்பனை உயர்வு மற்றும்
நேரடி சந்தைப்படுத்தல் போன்றவைகளும் இவற்றோடு சேர்ந்துகொள்கின்றன. பிளாக்ப்ரியார்ஸ் தகவல்தொடர்பியல்படி
2005ல் அமெரிக்காவானது சந்தைப்படுத்தலுக்காக 1 ட்ரில்லியன் டாலர் செலவிட்டிருக்கிறது.
-----தொடரும்
No comments:
Post a Comment