நமது கிரகத்தின் சுற்றுச்சூழல் சிக்கலென்பது “புவி
வெப்பமயாவது” என்பதோடு நிற்கவில்லை.அதனுடன் ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல சிக்கலான
சூழலியல் சிதைவையும் இப்புவிக்கோள் இதற்குமுன் இல்லாத அளவில் எதிர்கொள்கிறது.உதாரணமாக
கடல் அமிலத்தன்மை அதிகரிப்பு,ஒசோன் மெலிவு பல்லுயிரிய இழப்பு இப்படிப் பல.. இதன் வெளிப்பாடு அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிகழ்ந்த போக்கு
மாறி தற்போது மிக மிக வேகமாக பெருகி புவிக்கோளின் சூழலியல் கட்டைமைப்பபு பெரும்
சிதைவை உண்டாக்குகிறது. இச்சூழலை “சூழல் அவசரகால நிலை” என்றே கருதலாம். பூவுலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும்(மனித
இனத்தையும் சேர்த்து) இந்த “அவசரகால நிலைக்கு” தள்ளிய பெருமை அனைத்தும் “முதலாளியத்தின் பொருளாதார கட்டமைப்பையே” சாரும்.சுற்றுச்சூழல் சிதைவை சுழல் மீது கண்மூடித்தனமான திணிக்கும் முதலாளியத்தின் பொருளாதார கட்டமைப்பு குறித்தும்,அவர்களின் சித்தாந்த
நிலைப்பாடு குறித்தும் அறிவியல் பூர்வ பகுப்பாய்வை முன்னெடுக்கசெய்ய முயலாமல்,
சூழலியல் சிக்கல்களுக்கான தீர்வினை நோக்கி நாம் ஒருபோதும் நெருங்க முடியாது என்பதை
நாம் இச்சூழலில் நினைவுபடுத்துக்கொள்ளவேண்டும்.இந்நிலையில் நமது பொது எதிரியான
முதலாளியத்தின் குறித்த நமது புரிதல் போதுமானதாக உள்ளதா என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை என்றே கூறலாம்.குறிப்பாக சூழல்வாதிகளுக்கு....
அக்குறையை தீர்க்க முயலும் புத்தகம்தான் “ஒவ்வொரு
சுற்றுச்சூழல்வாதியும் முதலாளித்துவத்தை பற்றி என்ன தெரிந்துகொள்ளவேண்டும்”
இந்நூலின் ஆசிரியரான மேக்டோப் அமெரிக்காவைச் சேர்ந்த
ஒரு தாவரவியல் துறை பேராசிரியாவர்.மற்றுமொரு ஆசிரியார் அனைவருக்கும் நன்கு
அறிமுகமான பெல்லாமி பாஸ்டர்...இந்நூலின் சிறப்பு அதன் சிறப்பான
பகுப்பாய்வு...தோய்வு கட்டுரைப் தொகுப்பு ஒன்றுக்கொன்று சற்று தொடர்பற்ற வகையில்
அமைந்திருப்பது..ஆனாலும் நூலின் சிறப்பம்சங்கள் இக்குறையை நிவர்திசெய்கிறது.
இனி நூலுக்குள் செல்வோம்......
பகுதி-1
புவிக்கோளின் சூழலிய சிக்கல்கள்
“ இயற்கையின் மீது மனித வெற்றிகளை வைத்துக்கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்து கொள்ள வேண்டியதில்லை.ஏனெனில் இப்படிப்பட்ட வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழி வாங்குகிறது.ஒவ்வொரு வெற்றியும் முதலாவதாக நாம் எதிர்பார்க்கின்ற விளைவுகளை நிகழ்த்துகிறது என்பது உண்மையேயாயினும் இரண்டாவது ,மூன்றாவது நிலைகளாக நாம் எதிர்பார்க்காத,முற்றிலும் வேறுப்பட பலன்களையும் அளிக்கிறது;இவை பல தடவைகளிலும் முதலில் சொன்னதை ரத்து செய்துவிடுகின்றன…….
-- எங்கல்ஸ்
சுற்றுச்சூழல் சீரழிவென்பது தற்போதைய உலகிற்கு புதிதன்று.மாறாக அது வரலாறு எங்கிலும் பழமையான நாகரீகச் சமூகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மெசபட்டோமிய மற்றும் மாயன் நாகரித்தின் பெரும் சிதைவு சூழலிய தாக்கத்தால் தான் நிகழ்ந்தது என நம்பப்படுகிறது .காடழிப்பு ,மண் அரிப்பு மற்றும் வேளாண் நிலத்தின் மண் வளச்சிதைவு என ஒரு சிக்கலான உறவு இயற்கைக்கும் பழஞ்சமூகங்களுக்குமிடையில் தொடர்ச்சியாக நீடித்ததை தொல்லுயிர் எச்சங்களின் வாயிலாய் அறிகிறோம் .சூழல் அழிவை பற்றி கிரேக்க அறிஞர் பிளாட்டோ (427–347 கி .மு ) தனது “கிரிதியாஸ்”(Critias) நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
“இதற்கு மேல் என்ன சாட்சி வேண்டும் ?தற்போது இப்படி காட்சியளிக்கும் நிலம் ஒருகாலத்தில் எப்படியிருந்தது? நோயால் அரிக்கப்பட்டு எலும்புக்கூடாய் ஆன உடலை போன்று இதை விட்டுசென்றுள்ளீர்கள்.இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் ? வளமான, மிருதுவான மண் வளங்கள் எல்லாம் போய்விட்டன .எஞ்சியிருப்பது எழும்பும்தோலுமான வெற்று நிலம்தான் .தற்பொழுது இருக்கும் மலைகளானது தேனீ உற்பத்திக்கு மட்டுமே துணை செய்கிறது.மாறாக ஒரு காலத்தில் இங்கிருந்த மரங்களெல்லாம் பெரிய கட்டடங்கள் கட்டுவதற்காக வெட்டப்பட்டு அக்கட்டிடங்களின் மேற்கூரை உத்திரத்தை தற்பொழுது தாங்கி நிற்கிறது .கால்நடைகளின் தீவனத்திற்காக இன்னும் அதிகமான மரங்கள் கணக்கற்ற அளவில் வெட்டப்பட்டன .ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்காலங்களில் மண்ணானது வளமடைகிறது , தற்போது பூமியின் திறந்த பகுதியில் பாயும் மழைநீரைப்போல் அன்று வீணானதில்லை .அது தனது களிமண்ணான மேலடுக்குகளில் அதிகளவிலான நீரை சேமிக்கிறது .அதனாலேயே மேட்டுப் பகுதிகளிளிருந்து கீழ்பகுதியனை நோக்கி ஓடி பள்ளத்தாக்குகளில் நதிகளாக வசந்தகாலத்தில் பரிணமிக்கிறது .கடந்த வசந்தகாலத்தில் நமது உயிர்வாழ்விற்கு காரணம் இவ்வுண்மைதான் என்பதை நாம் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்”.
தற்போதைய நவீன காலமும் இதையொட்டிய நிலையிலேயே உள்ளது; இதோடு இப்புவியை வாழ்வதற்கு தகுதியற்றதாய் விரைவாக மாற்றி அழிப்பதற்கு நம்மிடையே இன்று தொழில் நுட்பம் உள்ளது ;அதோடு வரம்புகளற்ற பொருளாதார கட்டமைப்பும் உள்ளது .தற்போதைய சூழல் சீர்கேடானது பழஞ்சமூகங்களில் நிகழ்ந்தது போன்று ஒரு குறிப்பிட பிராந்தியத்தை மட்டும் சிதைக்காமல் , ஒட்டுமொத்த புவிக்கோளில் வாழும் உயிரனங்களின் இருப்பை (நம்மையும் சேர்த்து ) அச்சமூட்டுகிறது .ஆகையால் வேகமாக அழிந்துவரும் புவியின் சுற்றுச்சூழல் சிதைவை குறித்த திடமான விஞ்ஞான காரணங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் .
நாம் இன்று சொல்லும் சூழல் சிக்கல்களை ,குறிப்பிட்ட ஒரு சிக்கல் எனச்சுருக்க முடியாது. அது எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரி . மாறாக அது பல சிக்கல்களை கொண்டவை.சமீபத்தில் புவி அமைப்பு விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் ,மூத்த விஞ்ஞானிகள் "புவிக்கோள் எல்லைகள் " எனும் முக்கிய கருத்தியலை உருவாக்கியிருக்கிறார்கள்.இதில் அவர்கள் புவி அமைப்பின் 9 முக்கிய எல்லைகளை வரையறை செய்கின்றனர் (அல்லது அவதானிக்கிறார்கள் ).அவை
1. பருவ நிலை மாற்றம் 2. கடல் அமிலத்தன்மை அதிகரிப்பு
3.ஒசோன் மெலிவு
4. உயிர் -புவி வேதிப்பொருள் ஒழுக்கு எல்லை5. உலக நன்னீர் பயன்பாடு
6.நிலப் பயன்பாட்டு மாற்றம் 7.பல்லுயிரிய இழப்பு 8.வளிமண்டல தூசுப்படல அதிகரிப்பு
9. வேதியியல் மாசு
இவ்வெல்லைகளுக்கு உட்பட்டு நாமிருப்பது மிகவும் அவசியமானது. அதோடு காலநிலை மற்றும் சுற்றுச்சூழலோடு நமது உறவை கடந்த 12000 வருடங்களாக இவ்வாறுதான் பேணிவந்தோம்.இதில் நீடித்த எல்லைகளின் மூன்று அமைப்பான பருவநிலை மாற்றம் ,பல்லுயிரியம் மற்றும் ,நைட்ரஜன் சங்கிலியுடனான மனிதனின் இடையீடு முன்னதாகவே தனது எல்லைகளை கடந்துவிட்டது ; புவி அமைப்பின் தீவிர பிளவுகளின் வாயிலாய் இவை வெளிக்காட்டுகிறது . கடல் அமிலத்தன்மை அதிகரிப்பு, . உலக நன்னீர் பயன்பாடு, நிலப் பயன்பாட்டு மாற்றம் போன்றவை வரப்போகும் பிளவுகளை காட்டுகிறது . புவிக்கோள் எல்லைகளின் ஒவ்வொரு பிளவும் புவியின் உள்ள உயிர் வாழ்வுக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளன .அதில் பருவநிலை மாற்றமானது மிகப்பெரிய மற்றும் அச்சுறுத்தலாக மற்ற எல்லாவற்றையும் பின்தள்ளி மைய இடத்தை பிடிக்கறது.
மனிதனால் உருவாக்கப்படும் பசுமைக்குடில் வாயுக்களின் பெருக்கமானது உலக பருவ நிலையை சீர்குலைய வைக்கிறது .மனித இனம் உடனடியாக மாற்று வழியை நடைமுறைப்படுத்தத் தவறினால் இப்புவியில் உள்ள உயிரனங்கள் (நம்மையும் சேர்த்து ) பெரும்பாலும் மிக பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும். ஒவ்வொரு பத்து வருடமும் முன்பை விட அதிகவெப்பமயமாகிறது;கடந்த 131 ஆண்டுகளில் 2010 ஆம் ஆண்டுதான்அதிக வெப்பம் வாய்த்த ஆண்டென உலக வெப்ப அளவீட்டு கருவிகள் மற்றும் ஆவணங்கள் தெரிவிக்கிறது .பருவநிலை மாற்றத்தோடு நேரடியாக தொடர்புள்ள இத்தீவிர சிக்கல்களின் அறிகுறிகளை அவைகளே முன்னதாக வெளிப்படுத்த தொடங்கிவிட்டன .
அவை
- கோடையில் ஆர்டிக் கடல் பனிகளின் உருகல் , சூரியகதிர் பிரதிபலிப்பு அளவினை குறைத்து உலக வெப்பயமாக்களை முனைப்பாக்குகிறது. 1970ஆண்டிலிருந்த பனியின் அளவைக்காட்டிலும் 2007 இல் 40 சதவீதத் திற்கும் குறைவான அளவாக கோடையின் இறுதியில் ஆர்டிக் கடலில் எஞ்சியிருக்கிறது என செயற்கைக்கோள் தகவல்கள் காட்டுகிறது(1970 களிலிருந்துதுதான் ஆர்டிக் கடல் பனிகளை துல்லியமாக அளவீடு செய்யத் தொடங்கினோம் ). 2007 ,2008 மற்றும் 2010 ஆகிய மூன்றாண்டுகள் ஆர்டிக் கடலில் குறைவான பனி மூடிய காலமாகும்.
- 1875 ஆம் ஆண்டு முதல் வருடத்திற்கு 1.7 மில்லி மீட்டராக உயர்ந்து வந்த கடல் மட்டமானது 1993 லிருந்து வருடத்திற்கு 3 மில்லி மீட்டர் அளவாக உயரத்தொடங்கின ; இதன் வீதம் எதிர்காலத்தில் இன்னும் உயரலாம் . உலக வெப்பமயமாக்கத்தால் உருச்சிதையும் கிரீன்லாந்து மற்றும் ஆர்டிக் பனிபாளங்கள் பெரியளவில் கடல் மட்டத்தினை உயர வைக்கிறது.கடல் மட்டமானது குறைந்தபட்சம் 1 மீட்டர் அல்லது 2 மீட்டர் உயர்ந்தாலே கீழைத்தேய நாடுகளான வியட்நாம் ,பங்களாதேஷ் மற்றும் பிற தீவு நாடுகளில் வாழும் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடும் அழிவுகளை சந்திப்பார்கள்.தற்பொழுது ஆர்டிக் கண்காணிப்பு மற்றும் கணீப்பீடு திட்டம் மற்றும் 8 -நாடு ஆர்டிக் மையத்தின் விஞ்ஞான கிளையானது , கடல் மட்டமானது ஒரு நூற்றாண்டில் 1 1/2 மீட்டர் அளவு உயரும் என தற்போதைய போக்கை வைத்து சுட்டிக்காட்டுகிறது.கடல் மட்ட உயர்வு வீதமானது ஒரு நூற்றாண்டிற்கு சில மீட்டர்கள் என்றளவில் உயர்வது தொல் -பருவநிலை ஆவணப்படி சாதாரண நிகழ்வு அல்ல.தற்பொழுது கடல் மட்டத்திலிருந்து 5 மீட்டரில் 400 மில்லியன் மக்களும் 25 மீட்டரில் ஒரு பில்லியன் மக்களும் வசிக்கின்றனர்.
- (வழக்கம் போல்)பசுமைக்குடில் வாயு தொடர் வெளியீட்டால் , புவியின் பனிமலைகளில் உள்ள உறைபனி படலங்கள் வேகமாக குறைந்து இந்த நூற்றாண்டில் கிட்டத்தட்ட காணாமலே போய்விட்டன . புவிக்கோள் வெப்பமானதால் உலகெங்கிலும் பனிமலைகளில் உள்ள உறைபனி படலங்கள் 90 சதவீதம் மறைந்தன. ஆசியாவின் மில்லியன் கணக்கான மக்களுக்கு இமயமலையின் உறைபனி படலங்கள் வறண்ட காலங்களில் நீர் வழங்கும்.ஆனால் இதன் சிதைவு தற்பொழுது வெள்ளம் மற்றும் நீர் பற்றாக் குறையையே உருவாக்குகிறது .ஏற்கனவே ஆண்டியன் மலைஉறைபனிபடலம் உருகியதால் அப்பிராந்தியதில் வெள்ளம் ஏற்பட்டது.2010 ஏப்ரலில் பெருவில் உள்ள ஹுல்க்கன் ஆற்றில் உறைபனி படலங்கள் உருகி கலந்ததால் கரையோரம் வசித்த 50 மக்கள் காயமடைந்தனர் . தற்போது உடனடியான நிகழ்கால சிக்கலாக உறைபனி படல மறைதல் விளங்குவதை பெரு மற்றும் பொலிவியா காட்டுகிறது .அங்கு நீர்தேக்க களங்களில் பயன்பட்ட உறைபனி படலங்களின் மறைவால் பெரும் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது .
- கடல் சூடாவதால் , புவியில் 90 %வெப்பம் அதிகமாக குவிக்கப்படுகிறது.மேலும் கடலின் அடியில் வாழும் பைடோப்லான்க்டன்(Phytoplankton) எனும் நுண்ணுயிர்களின் மறைவிற்கும் இது வித்திடுகிறது .ஆழ் கடலில் வாழும் உயிரனங்களின் உணவுச்சங்கிலியில் முக்கிய அங்கமான பைடோப்லான்க்டன் கடந்த 50 ஆண்டுகளில் வேகமாக குறைந்தது.புவி வெப்பமயமாக்கத்தால், உணவுச்சங்கலியை அடிப்படையாக கொண்ட கடல் உணவு உற்பத்தியும் இதனால் வீழ்ச்சியடையும்.
- வழக்கமான வேலையால் 70 %அதிகமான நிலப்பரப்புகள் கடும் வறட்சியால் பாழாகி மேலும் விரிவடையலாம் .வடகிழக்கு ஆப்ரிகாவும் ,வடக்கு இந்தியாவும் ஏற்கனவே இதற்கு சாட்சி அளிக்கின்றன.இந்த நூற்றாண்டின் தொடக்க பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியா இவ்வறட்சியை அனுபவித்தது.மாறாக மழை வந்தாலும் தொடர்ச்சியாக பெய்து வெள்ளத்திற்கு வித்திட்டு வாழ்வினை அழிக்கிறது ;உதாரணமாக 2010 இல் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம் ,2011 ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வெள்ளம். ‘சுதந்திரம்’ எனும் பிரித்தானிய நாளேடு இவ்வாறு விவரிக்கிறது”உச்சகட்டமான நீர்பஞ்சத்தினை கிட்டதட்ட ஆண்டு முழுதும் அனுபவதப்பின் தொடர்ந்து வரும் வெள்ளப் பேரிடர்கள் என இரட்டை அச்சிறுத்தலை பாகிஸ்தான் போன்ற நாடுகள் சந்தித்து வருகின்றன .சில நேரங்களில் குறைவான அளவு தூய நீரினை வழங்கி தவித்து வரும் நாடுகளும் இவ்வெள்ளங்களால் பாழகின்றன’.
- மாரிக்கால வெப்பம் மற்றும் கோடை பருவநிலை ஏற்கனவே பிராந்திய சூழல் அமைப்பில் சலனத்தை உண்டுபண்ண தொடங்கிவிட்டது.
உதாரணமாக பைன் மரங்கள் நெடுங்காலம் வளரக்கூடிய மரங்களில் ஒன்று; சில மரங்கள் ஆயிரம் ஆண்டு பழமையானது. இம்மரங்கள் அமெரிக்காவின் மேற்கு மலைத்தொடர்களின் உச்சியில் வளர்ந்து வந்தன.இவை பல பாலூட்டிகள்,பறவைகள் மற்றும் பிற உயிரனங்களுக்கு வாழ்வினை அளித்தது. பைன் மர வண்டுகள் அவ்வுயர்ந்த இடத்தில்தான் இனப்பெருக்கம் செய்ய முடியும்.ஆனால் அதிக வெப்பத்தால் இப்பெரும் பகுதி முழுதும் அழிந்து பேய்காடு ஆகியது.இக்காட்டின் மரணத்தால் அங்கு உயிர்வாழ்ந்து கொண்டிருந்த உயிரனங்கள் உணவு கிடைக்காமல் மலையின் அடிவாரத்திற்கு செல்ல நேர்ந்தது.இத்தோடு பனியும் வேகமாக உருகியதால் ,வசந்த காலத்தில் ஆற்று நீர் விரைவாக ஓடிமறைந்தது.பின் கோடைகாலத்தில் ஆறானது நீரின்றி வறட்சியடைந்தது.இதன் எதிர் விளைவுகளை ஆற்றுநீரில் வாழும் மீன்கள் சந்தித்தன!
- உலக வெப்பநிலை சராசரியாக அதிகரிப்பதால் பயிர் விளைச்சலில் நிகழும் பின்விளைவுகள் . வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அடர்த்தி அதிகரிப்பால் சில வகை பயிர்களின் உற்பத்தி பெருகினாலும் எதிர்காலத்தில் உறுதியற்ற பருவநிலை மாற்றமானது வறட்சி சூழலையே கொண்டுவரும். தெற்காசியா பகுதிகளில் செய்த கணக்கீடுகள் நெற்பயிர்களின் இழப்பை ஏற்கனவே உறுதிப்படுத்திவிட்டன . இரவு வெப்பநிலை அதிகரிப்பால் தாவரங்களின் இரவு சுவாச முறை சிக்கலுக்கு உள்ளாகிறது . அதாவது தாவரங்கள் பகலில் ஒளிச் சேர்க்கையின் வாயிலாய் உற்பத்தி செய்ததை இரவில் அதிகம் இழக்கின்றது . இதுவே பயிர்களின் உற்பத்தி சரிவிற்கு காரணமாய் அமைகின்றது. ஆப்ரிக்காவில் செய்த ஒரு ஆய்வு முடிவின்படி 30 டிகிரிக்கும் அதிகமான வெப்பத்தில் விளையும் பயிரின் உற்பத்தியானது , மிகையான நீர் இருந்தும் 1% அதன் உற்பத்தி குறைகிறது; வறட்சி காலத்தில் 1.7% என இன்னும் சரிகிறது. பருவநிலை மாற்றத்தால் 1980 முதல் சோளம் மற்றும் கோதுமையின் உற்பத்தி சரிந்துவருகிறது என பருவநிலை மற்றும் வேளாண் உற்பத்தி பற்றின ஆய்வொன்று சுட்டிக்காட்டுகிறது.
- வெப்பநிலை மண்டலங்கள் வேகமாக நிலைமாற்றம் பெறுவதால் உயிரினங்கள் அழிந்துவருகின்றன -இப்பிராந்தியத்தின் வெப்பநிலை சராசரியாக மேலோங்கி வருவதோடு குறிப்பிட்டசில உயிரனங்களே இம்மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துகொள்கிறது. ஆயிரக்கணக்கான தாவரங்கள் ,விலங்குகள் மற்றும் பூச்சியினங்கள் துரவப்பகுதியை நோக்கி பத்துவருடத்திற்கு 4 மைல் என்ற விகிதத்தில் இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் புலம்பெயர்ததாக ஆய்வொன்று தெருவிக்கிறது .மேலும் கடந்த 30 வருடங்களில் பத்து வருடத்திற்கு 35 மைல் என்ற வீதத்தில் துருவத்தை நோக்கி நகர்ந்துவருவாதகவும் தெரிகிறது.அதேசமயம் துருவப்பகுதி மற்றும் ஆல்பைன் பகுதிகளில் வாழும் உயிரனங்களுக்கு (துருவக்கரடிகள் ) போவதற்கு இடமேதும் இல்லை.போனால் பூமியை விட்டுத்தான் போகவேண்டும்!
இவை எல்லா விடயமும் உணர்த்துவது ;பருவநிலை மாற்றமானது வருடத்திற்கு வருடம் ஒரே சீராக நிகழவில்லை மாறாக செங்குத்தான பத்து மாற்றங்கள் அவற்றின் பின்விளைவுகள் பற்றின பெருக்கு பின்னூட்டு என்ற வடிவம் எடுக்கிறது .இவ்வழியில் பார்த்தல் ஆர்டிக் பனி உருகல் ஒரு "பெருக்கு பின்னூட்டு".வேகமாக உருகும் வெண்பனி நீல கடல் நீராக மாற்றமடைகிறது ,இது புவியின் பிரதிபலிப்பு அளவினை குறைத்து அதிகமான கதிர்வீச்சை கிரகித்து புவி வெப்பமடைவதற்கு வித்திடுகிறது.இம்மாதிரியான பெருக்கு பின்னூட்டு நமக்கும் செங்குத்தான விடயத்திற்குமான இடையிலான இடைவெளியை குறைக்கிறது (இதை நிறுத்துவதை தாண்டிய நிகழ்முறை).முன்பு சொன்னது போன்று உருச்சிதையும் கிரீன்லாந்து மற்றும் ஆர்டிக் பனிபாளங்கள் போன்ற "செங்குத்து பிரிவகங்கள் "பெரியளவில் கடல் மட்டத்தினை உயர வைக்கிறது.மேற்கு ஆர்டிக் பனி
அடுக்குகள் முழுவதும் உருகினால் 20 முதல் 25 அடி வரை
கடல் மட்டம் உயரும் மேலும் அது கிழக்கு ஆர்டிக் பனி அடுக்குகள் உருகுவதற்கும் வழிவகுக்கும்.
----
தொடரும்
No comments:
Post a Comment