Pages

Monday, 4 November 2013

முன்னாள் சோவியத் யூனியனின் சூழலியல்



முன்னாள் சோவியத் யூனியனின் சூழலியல் பார்வை குறித்து யோசிக்கும் அடுத்த நொடி நம் நினைவுக்கு வருவது செர்நோபில் பயங்கரம்,ஆரல் கடலினை வற்றச்செய்தது,மாசடைந்த ஆறுகள்  மற்றும் வரைமுறையற்ற காடழிப்பு..ஆனால் சோவியத் யூனியன் வரலாற்றுக்கு இன்னொரு பக்கம் உண்டு.அது இயற்கை வளங்களை பாதுகாக்க அவர்கள் முன்னெடுத்த “பசுமை கொள்கை” மற்றும் செயல்பாடுகள்.இவ்வரலாறு போல்ஷ்விக் புரட்சியிலிருந்து தொடங்குகிறது...

1917 ஆம் ஆண்டின் போல்ஷ்விக் புரட்சிக்குப்பின் சோவியத் அரசு பல சிக்கலான சூழ்நிலைகளை எதிர்கொண்டது.முதல் உலகப்போரின் தொடர்ச்சி,உள்நாட்டு யுத்தம் மற்றும் அந்நிய நாடுகளின் தலையீடு மற்றும் பொருளாதார முட்டுக்கட்டைகள் இப்படிப்பல சிக்கல்கள்.போரால் பெருமளவிலான நிலங்கள் நாசமடைந்திருந்த வேளையில் உணவு மற்றும் எரிசக்திக்கான  தேடலே முதன்மையாக இருந்தன.இவ்வகையான சூழ்நிலையில் சுற்றுச்சூழல் குறித்த நிலைப்பாடுகளை மற்றும் செயல்பாடுகளை பொறுமையாக எடுத்துக்கொள்ளலாம்,முதலில் இச்சிக்கல்களையெல்லாம் கவனிப்போம் என்று சோவித் அரசு காரணம் தேடவில்லை.மார்க்சிய கட்சியான போல்ஷ்விக் கட்சி சுற்றுச்சூழல் குறித்த சில தீர்மானகரமான நிலைப்பாடுகளை எடுத்தது.சூழலை பாதுகாக்க சட்டங்கள் இயற்றப்பட்டன,இவற்றை நடைமுறைப்படுத்தவும் மேற்ப்பார்வை செலுத்தவும் தீவிர கவனம் செலுத்தப்பட்டது.உலகிலேயே முதன்முதலாக,இயற்கையை பேணிப்பாதுகாப்பதின் பொருட்டும்,இயற்கை மீதான விஞ்ஞானப்பூர்வ ஆய்வு மேற்கொள்ளவும் ஒரு அமைப்பை நிறுவிய அரசு சோவியத்யூனியன் அரசுதான்.விஞ்ஞானவழியில் இயற்கையை அணுக அவர்கள் கொண்டுவந்த சபோவேட்னிக்கி திட்டம் இன்று சோவியத்திலிருந்து பிரிந்து சென்ற நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது.

சில அடிப்படை வனப்பாதுகாப்பு சட்டம் இயற்றுதல்:
வரைதுரையற்ற உற்பத்தியில் லெனின்  உறுதியாக இருந்தார் எனப் பொதுவாக சொல்லப்பட்டாலும் எதார்த்த ஆவணங்கள் அவற்றிற்கு எதிராகவே உள்ளது! சோவியத் ரஷ்யாவின் உற்பத்தி ஆற்றலை பெருக்க லெனின் தீவிர முனைப்பு செலுத்தினாலும்,இயற்கை மதிப்பிற்குரியது என்றே எண்ணினார்.1918 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி, நிலம் குறித்து ஓர் ஆணையை பிறப்பித்தது.அதில் சோவியத் யூனியனின் அனைத்து காடுகள்,நீராதாரங்கள் மற்றும் கனிம வளங்கள் தேசத்தின் சொத்தாகவும் அறிவிக்கப்பட்டது. 1918 ஆம் ஆண்டு  காடுகள் குறித்து லெனின் தலைமையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், காடுகள்  பாதுக்காப்பிற்குரிய காடுகள் மற்றும் உபயோகப்படுத்துவதற்குரிய காடுகள் எனப் பிரிக்கப்பட்டது.பாதுக்காப்பிற்குரிய காடுகளில் அரிப்புகளை கட்டுப்படுத்துவது மற்றும் நீராதாரங்களை  பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.முக்கியாமாக இயற்கையின் சிறப்பை பாதுகாப்பது.”உற்பத்தியை உயர்த்தும்” நோக்கில்! சீனாவில் யான்கேட்ஸ் அணை கட்டுவதற்காக காடுகள் சிதைக்கப்பட்ட நிகழ்வு இங்கு ஒப்புநோக்கத்தக்கது.
காடுகளில் உள்ள விலங்கினங்களை வேட்டையாடும் விளையாட்டை தடை செய்யும் ஆணைக்கு 1919ஆம் ஆண்டு லெனின் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்.அனைத்துப் பருவங்களிலும் மூஸ்கள் மட்டும் காட்டாடுகள் வேட்டையாடப்படுவதை அவ்வாணை தடைசெய்தது.
சபோவேட்னிக்கி திட்டம்
சுற்றுச்சூழல் குறித்த விஞ்ஞானப்பூர்வ ஆய்வுகள் மேற்கொள்ளவும் இயற்கை வளங்களை பாதுகாக்கவும் உணவுப்பயிர்/தாவரப்பயிர் வல்லுனரான பாடியல்போல்ச்கியால்(Podialpolski) சபோவேட்னிக்கி(Zapovedniki)திட்டம் லெனினிடம் பரிந்துரை செய்யப்பட்டது.சபோவேட்னிக்கி என்றால் “பாதுகாக்கப்பட்ட இயற்கை”என மொழிபெயர்க்கலாம்.அதாவது இப்பகுதியில் வேட்டையாடுதல்,பழங்கள் பறித்தல் ஏன் சுற்றுலா கூட தடைசெயயப்பட்டது.அதாவது இயற்கையை அப்படியே அதனிடம் விட்டுவிடுவது. இயற்கையின் சமநிலையை உறுதிப்படுத்தும் பொருட்டும், பல்லுயிரிப் பெருக்கத்தின் பொருட்டும் இவ்வகையான“பாதுகாக்கப்பட்ட இயற்கை” பிரதேசங்களை நாம் உருவாக்கியவேண்டும் என்பதில் பாடியல்போல்ச்கி உறுதியாக இருந்தார்.பின் லெனினிடம் ஒரு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது.அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு பற்றி பாடியல்போல்ச்கி கூறுகிறார்.
”அஷ்ட்ராகன் பிரதேச இராணுவ மற்றும் அரசியல் சூழ்நிலை குறித்து சில கேள்விகள் கேட்டார்.பின் சபோவேட்னிக்கி உருவாக்கத் திட்ட முன்னெடுப்பிற்கு தன் முழு ஆதரவையும் ஒப்புதலையும் வழங்கினார்.மேலும் இவ்வகையான இயற்கை பாதுகாப்பு திட்டம் அஷ்ட்ராகன் பிரதேசத்தில் உருவாக்குவது முக்கியமானது,அதோடு இத்திட்டத்தை குடியரசு முழுமைக்கும் விரிவாக்க வேண்டும் என்றார்”
அதன்பின் பாடியல்போல்ச்கியின் முழுநேரமும் சபோவேட்னிக்கி திட்டம் குறித்த சட்ட வரைவு உருவாக்குவதில் கழிந்தது .1921 ஆம் ஆண்டில் இயற்கையை பாதுகாப்பதன் பொருட்டில் உருவாக்கப்பட்ட இச்சட்டதிற்கு சோவியத் யூனியன் அரசு ஒப்புதல் வழங்கியது.இச்சட்டம் அமுலுக்குக் கொண்டுவருவதை மேற்பார்வை செய்ய ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.புவியியல் விஞ்ஞானி,இரு விலங்கியல் அறிஞர் மற்றும் கனிமத்துறை விஞ்ஞானிகளைக் கொண்ட இக்குழுவை வானவியல் அறிஞர் வாக்ரேன் தலைமையேற்று வழிநடத்தினார்.
பாடியல்போல்ச்கியின் ஆசைப்படி இக்குழு சபோவேட்னிக்கி காட்டை முதன் முதலில் அஷ்ட்ராகன்(Astrakhan) பிரதேசத்தில் நிறுவியது.பின் கனிமவளங்கள் அதிகளவில் கொட்டிக்கிடக்கும் இல்மேன்ச்கிவில் அடுத்த சபோவேட்னிக்கி நிறுவப்பட்டது.இவை ஒருப்பக்கம் இருந்தாலும் சோவியத் அரசானது விஞ்ஞானத்திற்கு குடுத்த முக்கியத்துவம் அளப்பரியது.உதாரணமாக விலைமதிப்பற்ற மையாஸ் படிவங்கள் பரவிக்கிடக்கும் பிரதேசங்கள் புவியியல் விஞ்ஞானிகளின் ஆய்விற்காக ஒதுக்கப்பட்டது(விஞ்ஞானம் குறித்த புரிதலுக்கு முதன்மை தரப்பட்டதே  தவிர மூலதனங்களை குவிக்கும் போக்கிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதை கவனிக்கவும்).இவ்வகை விஞ்ஞான ஆய்வு முயற்சிகளை லெனின் அதிகம் பாராட்டினார்.
லெனினின் தலைமையின் கீழ் சோவியத் யூனியன் இயற்கை பாதுகாப்பின்பால் எடுத்த  துணிச்சலானஅணுகுமுறை 20ஆம் நூற்றாண்டில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலா நோக்கத்திற்காக இயற்கையை அவர்கள் பலி கொடுக்கவில்லை.சபோவேட்னிக்கி உருவாக்கத்தின் மற்றுமொரு நோக்கம் சூழலியலை ஆய்வு செய்வது.ஆராய்ச்சிக்கூடத்திலிருந்து இயற்கையை ஆய்வு செய்யாமல் தாவரங்களின் இயற்கை நிகழ்முறையை நேரடியாக கண்டுணர்ந்து சூழலியலை புரிந்துகொள்ள முயற்சிப்பது.இது முழுக்க முழுக்க விஞ்ஞானமே.இயற்கையையுடன் மனிதன் இசைந்து வாழ இவ்வகை விஞ்ஞானப்பூர்வ ஆய்வுகள் வழிசெய்யும்.உதாரணமாக வேளாண்மையில் இயற்கை முறையில் பூச்சிகளை நீக்கும் வழிவகைகளை கண்டுணர்ந்து செயல்படுத்தலாம்.
லெனினின் மரணத்திற்குப்பின் சோவியத் யூனியன் முதலாளித்துவ அமைப்பு சட்டங்களை நோக்கி நகரும் அழுத்ததிற்கு தள்ளப்பட்டது.அது உற்பத்தியை மனிதத்தேவையின் பொருட்டு நிகழ்த்தவில்லை ,லாபத்தை முன்னிருத்தியே உற்பத்தி முடிக்கவிடப்படது.ஒரு கட்டத்தில் இது சபோவேட்னிக்கிகளை ரத்து செய்யும் அளவிற்கு சென்றதுதான் வேதனை.இன்றைய சீனா அல்லது பிற தேசிய முதலாளித்துவ ஆட்சிமுறை போன்றே ஸ்டாலினிய அமைப்பு மோசமான சூழலியல் பதிவை கொண்டுள்ளது.சீனாவின் வேகாமான பொருளாதார வளர்ச்சி பல சூழலியல் சிக்கல்களை உருவாக்கியது.காற்று மாசு,நீர்பற்றாக்குறை மற்றும் வளிமண்டலத்தில் அதிகளவில் வெளியிடும் பசுமைக்குடில் வாயுக்கள் இப்படிப்பல.....தேசிய முதலாளித்துவம் மற்றும் முதலாளியத்தின் திறந்துவிடப்பட்ட சந்தை வாய்ப்பு போன்றவை சூழலை கண்மூடித்தனமாக அழிக்கத்தொடங்கியது...
சோசியலிச சூழல்வாதியான இயான் ஆங்கசின் வார்த்தைகளில் சொல்வதென்றால்20நூற்றாண்டின்மார்க்சியஇயக்கங்கள்இச்சுற்றுசூழல்பிரச்சனைகளைபுறந்தள்ளிலஅல்லதுபுரட்சிக்குமுன்னோபின்னோசோசியலிசமானதுமந்திரத்தால்  எல்லாவற்றிற்கும்தீர்வுகாணும்   என்றுகண்மூடித்தனமாகநம்பின .
மோசமென்னவேன்றால், 20நூற்றாண்டில்  சூழலுக்குமோசமான  பெரும்அச்சத்தைஉண்டுபண்ணியதுயாரென்றால் தங்களைசோசியலிசவாதிஎன்றுசொல்லிக்கொண்டநாடுகள்தான்”  
மேலும் அவர் கூறுகிறார்
20 நூற்றாண்டில் சுற்றுச்சூழலில் தோல்வியடைந்த சோசியலிசத்தாலும் நாம்கற்றுக் கொண்டபாடமானது ,சோசியலிச கோட்பாடுகள் ,சோசியலிசதிட்டங்கள் மற்றும்சோசியலிச இயக்கங்கள்யாவற்றுக்கும்" சுழல்" ஒருமையபகுதியாக இருக்கவேண்டும்.சூழல்ச மதர்மமானது ,பசுமையின்சிறப்பையும் சிவப்பின் சிறப்பையும் ஒன்றிணைத்துஅதன்வலிவற்றபகுதிகளைகளைந்துகடந்துவருவது.அது ,மனிதசமூகத்தின் மார்க்சிய திறனாய்வையும் ,இயற்கையுடனான நமது உறவுகுறித்தசூழல் திறனாய்வையும் ஒன்றிணைக்க முனைகிறது.
அதுஇரண்டுஅடிப்படையான ,பிரிக்கமுடியாதகூறுகளைஉள்ளடக்கிய  சமூகத்தைகட்டமைக்கமுயல்கிறது
அதுசமதர்மமாக ,ஜனநாயகத்தைபூர்த்திசெய்து ,தீவிர சமத்துவமாக ,சமூகநீதியுடயதாகஇருக்கவேண்டும்.உற்பத்தியில்கூட்டுரிமைபெற்று ,சுரண்டல்நீக்கப்பட்டு ,லாபநோக்கமற்ற ,குவித்தலற்ற பொருளாதரத்தை இயக்கும் விசையாகஇருக்கவேண்டும் .
அதுசிறப்பான சூழலியல் கொள்கைகளுடன் ,சுற்றுசூழலிற்கெதிரானவற்றைதடுப்பதற்கு அதிகமுக்கியத்துவம் குடுப்பதாய்  ,சிதைந்த சூழலை மறுக்கட்டமைப்பு செய்வதாய்  ,சூழல்வலிமையுடன் கூடிய கொள்கைகளைக்கொண்டவிவசாயமாகவும் ,தொழிற்சாலைகளாகவும் இருக்கவேண்டும்.

References:


                                                                                --- தொடரும்

No comments:

Post a Comment