Pages

Thursday, 7 November 2013

“ஒவ்வொரு சுற்றுச்சூழல்வாதியும் முதலாளித்துவத்தை பற்றி என்ன தெரிந்துகொள்ளவேண்டும்” -பகுதி-3



வணிகம் வழக்கம்போல் :பூவுலகின் சிதைவுப் பாதையில் ....

சுற்றுச்சூழல் மாசுபடுத்தப்பட்டு, பொருளாதாரமும் நலிவடைந்திருந்தால் ,இவ்விரண்டிற்கும் காரணமான  நோய்க்கிருமியை  உற்பத்தி அமைப்பினில் கண்டுபிடிக்கலாம்.--- பேரி காமன்னர் 

                வழக்கமான  வணிகம்தொடர்ந்து கொண்டிருப்பதால்  புவிக்கோளானது  சிதைவுப்பதையில்   சென்றுகொண்டிருக்கின்றது என முடிவெய்திய சுற்றுசூழல்வாதிகளின் நிலைப்பாட்டை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.


வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள அனைவரும்,வளர்ந்த முதாளித்துவ நாடுகளில் உள்ள மக்களின் “வாழ்க்கைத்தரத்தில்” வாழமுற்பட்டு,உலகின் உற்பத்தி பெருக்கத்தை முடுக்கிவிடும் வேளையில்,மாசு மட்டும் அதிகரிக்கப்போவதில்லை மாறாக வரம்பிற்குட்பட்ட இயற்கை வளங்களின் இருப்பும் விரைவாக குறைந்து போகும்.கழிவுகளை உருஞ்சிக்கொள்ளும் புவியின் வரம்பும்,உற்பத்திக்கான ஆற்றலை தொடர்ந்து வழங்குவதும் ஒருகட்டத்தில் கட்டாயமாக வரம்பை மீறிச்செல்லும்.இதோடு தொடர் புபடுத்தி “வளர்ச்சியின் வரம்புகள்” நூலில் பேரி காமன்னரால்  முன்வைக்கப்பட்ட முடிவுகளை பார்க்கலாம்:

  1. தற்பொழுது வளர்ந்து வரும் மக்கள் தொகை பெருக்கம் ,தொழில்மயமாக்கம்,தூய்மைக்கேடு,உணவு உற்பத்தி மற்றும் கனிம இழப்புகள்  போன்றவை எந்த மாற்றமும் இல்லாமல் இதே பெருக்கத்தில் தொடருமானால் அடுத்த  100 ஆண்டுகளுக்கு உள்ளாக  இக்கிரகம் தனது வரம்பினை எட்டிவிடும்.இதன் விளைவு , மக்கள் தொகை மற்றும் தொழிற்சாலை கொள்திறன் என இரண்டிலும் கட்டுப்படுத்த முடியாத உடனடி வீழ்ச்சிக்கு வித்திடலாம்.
  2. சுழல் மற்றும் பொருளாதார நிலைப்புதன்மைக்கேற்ற வரையறையில்  வளர்ச்சி போக்குகளை மாற்றியமைக்க சாத்தியமுள்ளது. நிலையான உலக சமன்பாட்டினை நாம் வடிவமைக்கவேண்டியதுள்ளது அப்பொழுதுதான் பூமியிலிருக்கும் ஒவ்வொரு மனிதனின்  அடிப்படை பொருட்தேவைகள் திருப்தி செய்யவும் , ஒவ்வொரு தனிமனிதர்களும்  தங்களது ஆற்றலை உணர்ந்த கொள்ள சம வாய்ப்பு கிடைக்க முடியும்.
  3. உலக மக்கள் முதல் முடிவை கைவிட்டு  இரண்டாம்  முடிவை தேர்வு செய்தால் அவர்கள் உடனடியாக அம்முயற்சிகளை தொடங்கி வேளை செய்யவேண்டும் ;அப்படிசெய்தால் வெற்றிக்கு அதிக வாய்ப்புள்ளது 
    

நமது உயிர்க்கோளத்திற்கும் வரம்புகள்  உள்ளதென்பது தெளிபு மற்றும் ஏற்கனவே  வாழ்ந்து வரும் 700 கோடி மக்களும்  மேற்கத்திய "நடுத்தர குடும்ப' வாழ்க்கை தரத்தில் வாழ  இப்புவியால்  ஆதரவு தரமுடியாது.

உலக கண்காணிப்பக நிறுவனத்தின் திப்பீட்டின்படி  , அமெரிக்காவைப் போல்    உலக மக்கள்  ஓவ்வொருவரும்  புவி வளங்களை   துய்த்தால் வெறும் 1.4 கோடி மக்களுக்கே இப்புவியால்  ஆதரவு தர முடியும். ஆனாலும் அமெரிக்காவிலும் கூட வருமானம் மற்றும் வளத்தின்  சமச்சீரின்மை உச்சத்தை எட்டிவிட்டது. 2007 இல் அமெரிக்காவின் 400 தனிமனிதர்களின்(போர்ப்ஸ் 400)  வளங்கள் அந்நாட்டின் பாதி அளவிலான கிட்டத்தட்ட 1.5 கோடி மக்களின் வளத்திற்கு ஈடாக உள்ளன. 

முதன்மை பிரச்சனை என்னவென்றால் சிலரக்கு நடுத்தரமான  வாழ்க்கை தரத்திற்கு உத்திரவாதமில்லை மற்றும் சிலருக்கோ எதுவுமே போதுமானவையாக இல்லை. எபிக்கூரஸ் சொல்வது  போல் 'சிலருக்கு போதுமென பட்டது சிலரக்கு கொஞ்சமாக இருக்கலாம் ".உலக சமூக ஒழுங்கமைப்பானது "போதுமென்பது கொஞ்சம் "என்பதை சுற்றி கட்டப்பட்டு தனனை சுற்றி உள்ளவற்றை அழிக்கிறது .தன்னையும் சேர்த்து..!
இச்சிக்கலை அணுகும்போது பொதுவாக அனைத்து சூழல்வாதிகளும் இச்சூழலிய அநீதி குறித்த  பிரச்சினையை எழுப்புகின்றனர் -பெரும்பாலான ஏழைகள் நிச்சயமில்லாத அபாயகர  சூழலில் வாழ்ந்து வருகின்றனர்,குறிப்பாக சுற்றுச்சூழல் பேரிடர்களின் தாக்குதலுக்கு ஆளாகி சீரழிகின்றனர்.இப்போக்குகள் இப்படியே தொடர அனுமதித்தால்  நிச்சயமாக  இவர்கள் இதற்கு பலியாவார்கள்.கிட்டத்தட்ட பாதி அளவிலான மக்களில் அதாவது 3 பில்லியனுக்கு மேற்பட்ட மக்கள்   கொடிய வறுமையில் பிடியிலும், ஒரு நாளைக்கு  கிடைக்கும்   150க்கும் குறைவான  ரூபாயில்   மனிதனின்  அடிப்படை வாழ்வாதாரத்  தேவைகளான  உணவுப்பாதுகாப்பு ,வீடு ,சுத்தமான நீர் மற்றும் மருத்துவ வசதிகளை பூர்த்திசெய்துகொள்ளும் கட்டாயத்தில் வாழ்ந்து வருகின்றனர் என்பது தெளிபு.


இச்செயல்பாடுகளை நாம் தீவிரமாகவும் விரைவாகவும் மாற்றவேண்டும் என்பது தெளிவாக தெரிகிறது.சிறந்த அமெரிக்க சுற்றுச்சூழல்வாதியும் கார்ட்டர் நிர்வாகத்தில்  முன்னாள் சுற்றுச்சூழல் தர அமைப்பின் இயக்குனருமாக இருந்த ஜேம்ஸ் குஸ்டவ் இவ்வாறு எழுதுகிறார்.   அனைத்து மனித சமூகங்களும் புவிக்கோளின் காலநிலையை அழித்து    நாசப்படுத்தப்பட்ட உலகத்தை நமது வருங்கால சந்ததியருக்கு விட்டுச்செல்ல ,அவர்களும்  இன்று நடந்தது போலவே மிகபொருத்தமாக இதை தொடர்ந்து செய்து  உலக மக்கள் தொகையோ உலக பொருளாதாரமும்  வளர்ச்சியே இல்லாமல் போகப்போகிறது. நமது சிக்கல்களுக்கு  பொருளாதார அமைப்பில் சில மேற்பூச்சிகள் பூசியோ  ,சிறந்த ஆற்றல் திறனை அறிமுகம் செய்தோ ,புதைவு எரிபொருளுக்கு மாற்றாக தூய பசுமை ஆற்றல் வளங்களை மாற்றீடு செய்ததோ அல்லது தொழில்நுட்பத்தாலோ(உதாரணமாக மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் கரியை அப்படியே உறுஞ்சி பூமியின் அடி ஆழத்தில் செலுத்துவது!) இச்சிக்கல்களை  சீர்ப்படுத்தலாம் என  சில சுற்றுச்சூழல்வாதிகள் நினைக்கிறார்கள்
சுற்றுச்சூழல் அமைப்புகளில் சிலர்  நாம் சந்திக்கும் இந்த பேரழிவுக்குரிய பிரச்சனைகளுக்கு பொருளாதார மேற்பூச்சுகளோ அல்லது  தொழில்நுட்ப திருத்தங்களோ  கண்டிப்பாக  தீர்வழிக்க முடியாது என்று தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். உதாரணமாக கர்டிஸ் வொயட் தனது ஓரியன் கட்டுரையின் தொடக்கத்தில் கூறுவதாவது "ஒரு அடிப்படையான கேள்வியை சுற்றுச்சூழல் வாதிகள்  கேட்க்க மறுத்து பதிலை மட்டும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் ;இப்புவி அழிந்துவருவதற்கான காரணம் என்ன ?" இந்த கேள்விக்கான திருப்தியான பதிலை அளிக்க முடியவில்லை என்றால் ஒருபோதும் இச்சிக்கல்களுக்கு எதார்த்தமான நீடித்த தீர்வுகள் சாத்தியமில்லை.
சிக்கலான சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மனிதனல் ஏற்படுத்தப்பட்ட அல்லது உருவாக்கப்பட  பொருளாதார அமைப்பின் வேலையே.மக்கள் தொகை பெருக்கம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற பிரச்சனைகளை அச்சமூகத்தின் சமூக பொருளாதார அமைப்புகளோடு தொடர்பு படுத்தி பார்த்தல் மட்டுமே தெளிவாக தெரியும்.
                                      --தொடரும்

No comments:

Post a Comment