பிற புவிக்கோள் பிளவுகள்
முன்பு குறிப்பிட்டது போல ,புவிக்கோள் எல்லைகளை கடந்த பல புவிக்கோள் பிளவுகளில், பருவநிலை மாற்றமும் ஒன்று.
கடலின் அமிலத்தன்மை அதிகரிப்பும் பருவநிலை மாற்றம் போல ,வளிமண்டலத்தில் கரியமில வாயு வெளியேற்றத்தின் விளைவாகும்.கடல் நீர் பரப்பில் அரொக்னைட் அளவின் உச்சத்தை அடிப்படையாக கொண்டு கடலின் அமிலத்தன்மை அதிகரிப்பின் எல்லையை கணக்கிடலாம் என சமீபத்தில் விஞ்ஞானிகள் பரிந்துரைத்திருக்கின்றனர். இதன் எண்ணிக்கையின் வீழ்ச்சி ,கடலின் அமிலத்தன்மை அதிகரிப்பை குறிக்கும். தொழில்யுகத்திற்கு முன்பிருந்தஅளவு 3.44. பரிந்துரை எல்லை 2.75-அதாவது இந்த அளவை கடந்தால் மெல்லுடலிகளை உருவாக்கும் நுண்ணுயிர்கள் கூண்டோடு இறந்துவிடும். தற்போதைய நிலைமை 2.90. கடலின் அமிலத்தன்மை அதிகரிப்பு ,பருவநிலை மாற்றத்தின் “இரட்டைக் கேடு” என குறிப்பிடலாம் . ஒருபக்கம் கரிவாயு வெளியீட்டின் அளவு அதிகரிப்பால் பருவநிலை மாற்றமடைகிறது ,அதற்கு சமமாக புவிக்கோள் அமைப்பையும் இன்னொருபக்கம் சிதைக்கிறது.
1990 களில் ஒரு விடயத்தை கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும் என்ற கவலை அதிகரித்து முன்னிலையாய் தெரிந்தது ; சூரியனிலிருந்து வரும் அகச்சிவப்பு கதிர்வீச்சு வேகமாக அதிகரித்ததன் காரணமாய் ஏற்பட்ட ஒசோன் மெலிவுதான் அது . தொழில்யுகத்திற்கு
முன் ஒசோன் செறிவின் அளவு 290 ஆக இருந்தது. இதன் புவிக்கோள் எல்லை பரிந்துரை 276.இந்த அளவை கடந்தால் புவிக்கோள் பேரளவிலான இழப்பை
சந்திக்கநேரிடும்.நடப்பு நிலைமை 283 ஆக இருக்கிறது.ஒசோன் மெலிவு அளவானது தற்பொழுது
வேகமாக சரிந்து 60 தெற்கு 60 வடக்குகிற்கு இடையில் தங்கியுள்ளது.அல்லது இப்படி
சொல்லலாம் ;அண்டார்டிக்கா மற்றும் ஆர்டிக் ஒசான் ஓட்டைகள் இன்னும் பத்து வருடங்களில்
மறைந்துவிடும்.இப்புவின் வாழ்வு குறைந்து தூரத்தில் உள்ளது. தொழில்யுகத்திற்கு முன்
ஆண்டிற்கு 0.1-1 PPM என்கிற இயற்கை வீதத்தில் உயிரனங்கள்
அழிந்து வந்தது. சமீபத்தில் விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ள இதன் புவிக்கோள் எல்லை 10 PPM ;ஆனால் தற்பொழுது
100 PPMமிற்கும் மேலான வீதத்தில் உயிரனங்கள் அழிந்து வருகிறது.இவ்வளவு துரிதமான வீதத்தில் உயிரனங்கள்
மறைந்து வருவதற்கு
பருவ நிலை மாற்றம் மட்டும் காரணமல்ல மாறாக
உயிரின வாழ்விடங்களின் மீதான மனிதனின் இடையீடே இவ்வழிவிற்கு முக்கிய காரணியாகும்.நாம்
தற்பொழுது வாழ்ந்து வரும் காலத்தை ‘ஆறாவது அழிவு’ என விஞ்ஞானிகள்
வரையறுக்கிறார்கள். 65 மில்லியன் ஆண்டுகளுக்கு
முன் நிகழ்ந்த கடைசி
அழிவில்தான் டைனோசர்கள் செத்துமடிந்தன.கடந்த காலத்தைய திரள்
புவியியல் அழிவிற்கு போட்டியாக தற்பொழுது உருவாகியிருக்கும் ஆறாவது
அழிவு மற்ற திரள் அழிவைக்காட்டிலும்
ஒருவிதத்தில் மாறுபட்டது.,புவியில் வாழும் உயிரனமே இவ்வழிவை
கொண்டுவருகிறது;அது நாம்தான்.
உலக இயற்கை பாதுகாப்பு மையமானது 2009 இல் செய்த ஆய்வின்படி
17000 விலங்குகள் மற்றும் தாவரங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக தெருவிக்கிறது.நமக்கு
தெரிந்த ஐந்தில் ஒரு பாலூட்டிகள்(அல்லது அதற்கு மேற்பட்ட) ,கால்வாசி ஊர்வனங்கள் ,மற்றும்
70% தாவரங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாக அவ்வாய்வு தெரிவிக்கிறதுஅத்தோடு
2008 ஐ காட்டிலும் 2009 இல் புதிதாக 2800 உயிரினங்கள்
இப்பட்டியலில் இணைந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது.
"இம்முடிவுகள் பனிப்பாறையின் ஒரு சிறு நுனிதான் "
என இப்பட்டியல் தயாரிப்பின்
நிர்வாகி கிரைக் ஹில்டன் டைலர் கூறுகிறார்.கணக்கில் எடுத்துக்கொள்ளாத இன்னும் பிற உயிரனங்களும்
அழிவின் விளிம்பில் உள்ளதை மேலும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.பல்லுயிரிய உயிரனங்களை சார்ந்து இயங்கும் சூழல் அமைப்பின் இயக்கமானது உயிரனங்களின் மறைவால் வீழ்ச்சியடைகிறது.குறைவான உயிரினங்களை கொண்ட வீழ்ச்சியடைந்த சூழல் அமைப்பால் ஏற்படப்போகும் பல பின்விளைவுகளில்,பெரிய அளவிலான ‘ தொற்று நோய் தாக்கம்’ ஒன்று.
நைட்ரஜன் மற்றும் எரியம் என உரத்திலிருந்து வரும் வாயுக்கள் சுற்றுச்சூழலில்
மிகைப் பாரமேற்பற்றி புவியின் உயிர் -புவி வேதிப்பொருள் சங்கலியை பாதிப்பிற்குள்ளாக்கும் மற்றுமொரு சூழல் பிளவிற்கு முன்மாதிரியாகின்றது.வளிமண்டலத்திலிருந்து உறுஞ்சப்படும் நைட்ரஜனின் அளவு மற்றும்
வருடத்திற்கு டன் கணக்கில் சாகுபடிசெய்யப்படும் மொச்சை பயிர் உற்பத்தியின் வாயிலாய் நிலைநிறுத்தப்படும் தழைமத்தின்
அளவு என இவ்விரு விடயத்தையும் கணக்கில் கொண்டு விஞ்ஞானிகள் நைட்ரஜனின் புவிக்கோள் எல்லையை பரிந்துரைத்துள்ளனர். தொழிற்சாலை முதலாளித்துவத்தின் எழுச்சிக்கு முன்பு குறிப்பாக ஹாபர் பாஸ்க் ஆய்விற்கு முன் வளிமண்டலத்திலிருந்து உறுஞ்சப்படும் நைட்ரஜனின் அளவு மிக குறைவான அளவே இருந்தது. புவியின் சூழல் சிதைவை தவிர்க்க இதன் எல்லை 35 மில்லியன் டன்னாக இருக்கவேண்டும்(மொச்சை பயிர்களின் உற்பத்தியில் நிலைநிறுத்தப்படும் நைட்ரஜனின் அளவு மற்றும் தொழிற்சாலை உற்பத்தியில் நிலைநிறுத்தப்படும் தழைமத்தின் அளவு
என இரண்டும் சேர்த்த அளவு)
நைட்ரஜனின் எல்லையை விட எரியத்தின் புவிக்கோள் எல்லை கட்டுக்குள் உள்ளதென்றாலும் தற்போது அதுவும் வேகமாக உயர்கிறது தொழில்யுகத்திற்கு முந்தைய காலங்களில், எரியும் கடலில் கலக்கும் அளவு 1 மில்லியன் டன். இதன் புவிக்கோள் எல்லை பரிந்துரை 11 மில்லியன் டன்.நடப்பு நிலமை 8.5 மற்றும் 9 என வேகமாக உயர்ந்துகொண்டு செல்கிறது
உலங்கெங்கிலும் நூற்றுக்கணக்கான இடங்களில் வேதியல் கழிவுகள் கடலில் கலப்பதால் பைடோப்லான்க்டன் அழிந்துவருகிறது .திரளான அளவில் பைடோப்லான்க்டன் இறந்தால்,நுண்ணுயிர்களின் திசு அழுகல் வீதம் குறைந்து கடலில் உயிர் வாய்வு மண்டலம் மிகவும் குறைவிற்கு வித்திடுகிறது.நுட்பமாக சொல்வதென்றால் ஹைபோசிக் அல்லது குறைந்த உயிர் வாய்வு மண்டலம் எனலாம்,சில நேரங்களில் "இறந்த மண்டலம் 'எனவும் அழைப்பார்கள்;இங்கு எந்த மீன் வகை உயிரனங்களும் வாழ முடியாது.இதுபோன்று இடம் மெக்ஸிகோ வளைகுடா உள்ள மிஸ்ஸிசிப்பி ஆற்று முகத்துவாரத்தில் உள்ளது. உலகின் மிகப்பெரும் 'இறந்த மண்டலங்களில் இதுவும் ஒன்று . ஐரோப்பாவின் பால்டிக் கடலில் மிகப்பெரும் அளவில் இது நடக்கிறது.
உலக நன்னீர் எல்லையும் வரம்பும் கடந்துவிட்டது.நீல நீரோட்டம்(திரவம் ) மற்றும் பச்சை நீர் நீரோட்டம்(ஆவி ) என இரு மட்டங்களும் பிளவுபட்டு முழு நீர் சங்கலியை அச்சுறுத்துகிறது.தற்போதய மதிப்பீட்டின் படி ,உலகின் 25 %ஆற்று நீர் தேக்கங்கள் கடலில் கலப்பதற்கு முன்பாகவே வரண்டுவிடுகிறது . அதிகமான அளவிற்கு நன்னீர் வளங்களை மனிதனின் பயன்படுத்துவதன் விளைவே இது .தொழில்யுகத்திற்கு முன் மனிதனின் நன்னீர் பயன்பாட்டு அளவானது ஆண்டிற்கு 415 கன கிலோமீட்டராக இருந்தது. சமீபத்தில் விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ள நன்னீர் பயன்பாட்டு எல்லை 4000 கன கிலோமீட்டர் (இந்த அளவை கடந்தால் பிராந்திய மற்றும் கண்டங்களின் உள்ள
புவிபரப்பு மற்றும் நீர் சூழல்அமைப்பு சிதைவடையும்).நடப்பு நிலைமை 2600 கிலோமீட்டராக ஆக இருக்கிறது.
நேரடியான மனிதத் தேவையை ஒட்டிய உலக நன்னீர் சிக்கல்கள் ஏற்கனவே உருவாகிவிட்டன.தனது நீல ஒப்பந்தம் என்ற நூலில் பார்லோவ் இவ்வாறு எழுதுகிறார்
"இவ்வுலகம் தற்பொழுது நீர் சிக்கலை சந்திக்கிறது ;அதிகரிக்கும் மாசு ,பருவநிலை மாற்றம் மற்றும் வேகமான மக்கள் தொகை பெருக்கம் போன்றவற்றால் கிட்டத்தட்ட 200 மில்லியன் மக்கள் இப்புவியின் நீர் பற்றாக்குறை பிராந்தியங்களில் வாழ்கின்றனர்.நமது வழிமுறைகளை நாம் மாற்றிக் கொள்ளாவிட்டால் 2025 ஆண்டில் உலகமக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் நீர் பற்றாக்குறையினை சந்திப்பார்கள்".வட சீனா ,வட இந்தியா மற்றும் அமெரிக்காவின் பெரும் பீட பூமிகளில் நீர் சேர்மத்தினை விட நீர் உறிஞ்சி எடுக்கும் அளவே அதிகாமாக உள்ளது. மழை நீர் மூலம் நீர் மீண்டும் நிலத்தினை அடையும் முன்னரே நிலங்களிலிருந்து நீர் உறிஞ்சி 45% அளவிற்கு வேகமாக உறுஞ்சி பஞ்சாப் மாநிலத்தில் பாதி அளவிலான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறன-அழிவின் செயல்முறை
"இவ்வுலகம் தற்பொழுது நீர் சிக்கலை சந்திக்கிறது ;அதிகரிக்கும் மாசு ,பருவநிலை மாற்றம் மற்றும் வேகமான மக்கள் தொகை பெருக்கம் போன்றவற்றால் கிட்டத்தட்ட 200 மில்லியன் மக்கள் இப்புவியின் நீர் பற்றாக்குறை பிராந்தியங்களில் வாழ்கின்றனர்.நமது வழிமுறைகளை நாம் மாற்றிக் கொள்ளாவிட்டால் 2025 ஆண்டில் உலகமக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் நீர் பற்றாக்குறையினை சந்திப்பார்கள்".வட சீனா ,வட இந்தியா மற்றும் அமெரிக்காவின் பெரும் பீட பூமிகளில் நீர் சேர்மத்தினை விட நீர் உறிஞ்சி எடுக்கும் அளவே அதிகாமாக உள்ளது. மழை நீர் மூலம் நீர் மீண்டும் நிலத்தினை அடையும் முன்னரே நிலங்களிலிருந்து நீர் உறிஞ்சி 45% அளவிற்கு வேகமாக உறுஞ்சி பஞ்சாப் மாநிலத்தில் பாதி அளவிலான பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறன-அழிவின் செயல்முறை
மனிதனின் உற்பத்தியோடு இணைவாக்கம் பெற்ற நிலப்பயன்பாட்டின் மாற்றமானது புவிக்கோள் எல்லைகளை மேலும் பிளவுபட வைத்தது.காடுகள் மற்றும் பிற சூழல் அமைப்புகளை வேளாண் நிலங்களாக மாற்றிவருவது புவிஅமைப்பின் இயல்பான நிகழ்முறைகளை சீரழித்து பல்லுயிரிய வளத்தை அச்சுறுத்தி விஞ்ஞானிகள் நம்பும் ‘ஆபத்தான கட்டத்திற்கு’ இட்டுச்செல்கிறது.உதாரணமாக அமேசான் மழைக் காடுகளை வேளாண் நிலங்களாக மாற்றிவருவதால் மழைகாட்டின் அமைப்பு போய் அரை சவானா அமைப்பாக மாறும் நிலையின் ஓரத்தில் உள்ளது.தென் அமெரிக்காவில் பொதுவாக மழைகாடுகளை முதலில் பரந்த அளவிலான மேய்ச்சல் நிலங்களாக மாற்றி பின் ஏற்றுமதி செய்வதற்காக சோயா பீன்சுகள் பயிரிடப்படுகிறது. தெற்காசியா நிலங்கள் பால்ம் ஆயில் பயிரிடுவதற்காக மாற்றப்படுகிறது.உயிரி எரிபொருள் உற்பத்திக்காக பால்ம் ஆயில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இவ்வாறு பூர்வகுடி மக்களை காட்டிலிருந்து வெளியேற்றியும் மழைக்காடுகளை அழிப்பதாலும் 25 % கரிவாயு மனிதனால் உருவாக்கப்பட்டவையே. மண்ணரிப்புகள் மற்றும் நுண்ணியிர் பொருள் பயன்பாட்டின் வீழ்ச்சி போன்றவை உலகில் உள்ள பெரும்பான்மையான வேளாண் நிலங்களில் உற்பத்தி வீதத்தை அச்சுறுத்துகிறது.தொழிற்சாலைக்கு முந்தய காலத்தில் மனித மாறுபாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட நிலங்களின் பயன்பாடு மிகவும் சொற்பமே.இதன் எல்லை பரிந்துரை 15% .இந்த அளவை கடந்தால் பேரளவில் சூழல்அமைப்பு இடையூருக்கு
உள்ளாகும்.தற்போது உலகளவில் வேளாண்மைக்காக மாற்றப்பட்ட நிலங்களின் வீதம் 12%/.
கரிப்புகை ,கந்தக உப்பு போன்ற தூசிகளை வளிமண்டலத்தில் தொடர்ச்சியாக திணிக்கும் நிகழ்முறைக்கும் புவிக்கோள் எல்லையுண்டு.ஆனால் இதை கணக்கீடு செய்வதில் பல சிக்கல்கள் உள்ளதால் சரியான பாதுகாப்பு எல்லையை வரையறுக்க முடியவில்லை.தூசிப்படலங்களும் பருவநிலை அமைப்பை பாதிப்பிற்குள்ளாக்கும்.அதோடு மனிதனின் உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கும். உலகளவில் தூசிப்படலங்களின் திரட்சி தொழில்யுக காலத்தில் இரு மடங்காகியது. தூசிப்படளங்கலானது ,புவிப்பரப்பற்குள் வரும் கதிர்வீச்சினை சிதறடித்து விண்ணுக்கே திருப்பி அனுப்பியோ அல்லது மேகங்களில் பிரதிபலிப்பு சமச்சீரினை சிதைத்தோ , புவியின் கதிர்வீச்சு சமன்பாட்டினை பாதிப்பிற்கு உள்ளாக்கிறது. இதனால் பருவநிலை மாற்றத்திற்கு தூசிப்படலங்கள் முக்கிய காரனியாகின்றன.அத்தோடு இவை நீர் சுழற்சியிலும் மாறுதலை உண்டுபண்ணுவதால் பருவமழைகளை கணிசமான அளவு பாதிக்கிறது. இத்தூசிப்படலங்களின் பின்விளைவுகளால் மனிதனின் ஆராக்கியம் பாதிப்படைகின்றது.இதனால் ஆண்டிற்கு 800000 மனிதர்கள் முதுற்சியற்ற மரணத்தை தழுவுகின்றனர்.
புவிக்கோள் எல்லைகள் குறித்து செயலாற்றும் விஞ்ஞானிகள், பெரும் சிக்கல் மிகுந்த வேதியல் மாசின் புவிக்கோள் எல்லையை இதுவரை இன்னும் நிர்ணயம் செய்ய வில்லை .பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் இன்று செயற்கை வேதிபொருட்கள் உபயோகத்தில் உள்ளது.தொழிற்சாலைகளால் வெளியேற்றப்படும் கதிரியக்க சேர்மங்களாலும் ,திட உலோகங்களாலும்,பல வகையான கரிம சேர்மங்களாலும் பல்லுயிரியம் மற்றும் மனித வாழ்வு அச்சுறுத்தலுக்கு ஆட்படுவதொடு பருவநிலை மாற்றம் போன்று பல சூழல் சிக்கல்களுக்கு வித்திடுகிறது. சில வேதியல் மாசுகள் குறிப்பாக திட கந்தகமானது காற்றில் வாயுவாக தங்கி பின் மண்ணிலும் நீரிலும் விழுந்து கலக்கிறது.பலதரப்பட்ட கரிம சேர்மங்கள் மற்றும் பாதரசத்தால் பல நன்னீர் மற்றும் கடல்களை மாசுபடுத்துகிறது.
கடலானது தொழிற்சாலை பாறைவேதிப்பொருள் கழிவுகளையும் பெரும்பாலும் நெகிழிகளை கொண்ட பல குப்பைகளின் தீவுகளாக உள்ளது.மின்சார விளக்குகள் ,புட்டி மூடிகள் ,பல் துலக்கி மற்றும் நுண்ணிய நெகிழிகள் பசிபிக் கடலில் குடிகொண்டு பத்தாண்டு இரட்டிப்பாகி வருகிறது.அதாவது டெக்சாஸ் மாகாணம் போன்ற இருமடங்கு. சூரிய ஒலி மற்றும் வெப்ப பருவநிலையானது கடலில் உள்ள திரளான நெகிழிகளை உருக்கி சிறு பொருட்களாக ஆக்குகின்றன."ஒரு கைப்பிடி கடல் மண் அல்லது ஒரு கோப்பை கடல் நீரினை உலகில் ஏதோவொரு கடல் பரப்பிலிருந்து எடுத்து பார்த்தாலும் அதில் ஏக அளவில் கண்ணுக்கு புலப்படாத நுண் நெகிழிகள் கலந்திருக்கும்.இந்நுண் நெகிழிகள் ஆழ்கடலில் வாழும் சிற்றியிர்களின் உனவுசங்கலிக்கு ஆபத்து விளைவிப்பதோடு கடல் நீரினில் நச்சு வேதியல் பண்புகளை அதிகரிக்கச்செய்து ஆபத்து உண்டாக்குகின்றன.
அமெரிக்காவில் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் குடிநீரினில் பூச்சி கொல்லி மருந்துகளான அற்றசைன் நைற்றேட்ஸ் போன்ற பிற வேளாண் தொழிலைசேர்ந்த நஞ்சுகள் கலந்திருக்கின்றன.நாமெல்லாம் இவ்வாறான தொழிற்சாலை மற்றும் வேளாண் வேதியல் நச்சுகளை உட்கொண்டதால் பெரியளவிலான உடல்நல கேட்டின் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.
நாம் உட்கொள்ளும் பல பொருட்களிலும் பூச்சிகொல்லி மருந்து கலந்துள்ளது. அமெரிக்காவின் வேளாண்துறையானது பாதி அளவிலான உறைந்த ப்ளூ பெரியிலும் பாதி அளவிலான ஸ்ட்ரா பெரியிலும் காலன் கொல்லிகளை கண்டறியும் ஆய்வினை மேற்கொண்டது.அதில் பாதிக்கும் மேற்ப்பட்ட ஸ்ட்ரா பெரியில் குறிப்பிட அளவிலான காலன் கொல்லிகள் கலந்திருப்பது தெரியவந்தது. 50% திராட்சை சாற்றில் கார்பரில் பூச்சிகொல்லி இருப்பதாக ஆய்வுமுடிவு தெருவிக்கிறது.மேலும் 75% உருளைக்கிழங்கில் க்லோரோப்ரோபாம் என்ற களைக்கொல்லி கலந்திருப்பதும் ,பாதி வெங்காயத்தில் DCPA களைக்கொல்லி கலந்திருப்பதும் , 40%பூசணிக்காயில் எண்டோ சல்பான் கலந்திருப்பதும் ஆய்வு முடிவுகள் தெளிவாக தெரிவிக்கின்றன.சிலவேளைகளில் ஒரே உணவுப்பொருளில் பல வேதியல் சேர்மம் கலந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .உதாரணமாக 20% முதல் 100% ஸ்ட்ரா பெரியில் 16 வகையான பூச்சிகொல்லி வேதியல் சேர்மங்கள் கலந்துள்ளதாக ஆய்வின் மூலம் தெரியவருகிறது.இப்பட்டியல் இப்படி நீண்டு கொண்டு செல்லும்.
இருபது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் செய்த பரிசோதனையில் 63 விதமான வேதியல் பொருட்கள் அவர்களின் ரத்தத்திலும் சிறுநீரிலும் கலந்திருப்பது தெரியவருகிறது.பெரும்பாலும் தீ தாங்குவான் மற்றும் குழை பொருட் குழுமம் போன்ற கரிம வேதிபொருட்கலாக உள்ளன.ஒருவர் உடலில் குறைந்தது 24 வகையான தனி வேதியல் பொருட்களும் ,அதிகபட்சமாக இருவர் உடலில் 39 வகையான தனி வேதியல் பொருட்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.பரிசோதனை செய்யப்பட்ட அனைவரின் உடலிலும் புற்றுநோய் வளர தூண்டும் ஊக்கி என அனுமானிக்கப்படும் பைஸ் பனோல் A (BPA)இருப்பதும் தெரியவந்தது. பைஸ் பனோல் A
(BPA)பாலி கார்பனைட் நெகிழிகளை உருவாக்க பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன. நீர் புட்டிகள் ,குழந்தை புட்டிகள் மற்றும் உணவு சேமிப்பு பெட்டகம் போன்ற பொருட்கள் பாலி கார்பனைட் நெகிழிகளை கொண்டே தயரிக்கப்படுகின்றன.சமையல் உபகரணங்கள், உணவு சேமிக்கும் பெட்டகத்தில் உள்ள உணவுகள் ,பல்பொருள் அங்காடிகளில் தரப்படும் ரசீதுகள் ,தானியாங்கி இயந்திரங்கள் ,வாயுக் கூடங்கள் என நாம் தற்பொழுது அன்றாடம் பயன்படுத்தும் எண்ணற்ற பொருள்கள் BPA கலந்ததுதான்.இதுபோல்:
1. நுகர்வு பொருட்களான உடல் தெளிப்பான் ,ஒப்பனை சாதனங்கள் ,மர சாதனங்கள் போன்றவற்றில் ‘தலேத்ஸ்’ எனும் வேதியல் பொருள் ஏதேனும் ஒரு வடிவில் இருப்பது கண்டுபிடிக்கப்படுள்ளது.
2. கணினி ,மர சாமான்கள் ,மருத்துவ சாதனங்கள் போன்றவற்றில் தீ தாங்குவதற்காக PBDE எனும் வேதியல் பொருள் உபயோகப்படுத்தப்படுகிறது.
3. தரைவிரிப்பிகளின் மேற்பூச்சு ,காகித மேற்பூச்சு ,ஒட்டா பாத்திரங்கள் போன்றவற்றில் PFC எனும் வேதியல் பொருள் உபயோகப்படுத்தப்படுகிறது.
பெரும்பாலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களே பொதுமக்களை காட்டிலும் அதிகளவில் நமது உடலுக்கு ஒவ்வாத வேதியல் பொருட்களின் கடும் விளைவுக்கு உள்ளாகின்றனர்.அமெரிக்காவில் உள்ள 93 % பொதுமக்களின் சிறுநீரில் BPA துணை கூறுகள் இருக்கின்றன.அமெரிக்காவில் உள்ள அனைத்து மக்களின் உடலிலும் குறிப்பிடும் அளவிலான PBDE கலந்திருக்கின்றன
இவ்வகையான வேதியல் பொருட்கள் விலங்குகள் மற்றும் மனிதனின் நரம்பு மண்டலங்களில் கடும் பின் விளைவுகளை ஏற்படுத்தும். பிரசவ காலத்தில் இவ்வகை வேதியல் கலப்புகளுக்கு ஆளானால் குழந்தைக்கு ஆட்டிசத்தின் பாதிப்பு கணிசமான அளவிற்கு உயரும் வாய்ப்புள்ளது. அதோடு ஆர்கனோ பாஸ்பேட் எனும் பூச்சிகொல்லி மருந்திற்கும் குழந்தைகளின் ( ADHD )பாதிப்பிற்கும் தொடர்பு உள்ளதென தெரிகின்றது .
அமெரிக்காவில் தற்போது 8000வேதியல் பொருட்கள் வணிகப்பயன்பாட்டில் உள்ளன.இதில் 2000 மேற்பட்ட வேதியல் பொருட்களின் கூட்டமைவு மற்றும் அதன் தீங்கை குறித்த விவரங்கள் நமக்கு தெரியாது.அவை "வியாபார ரகசியம் " என்ற பிரிவில் அதன் கூட்டமைவுகள் சட்டபூர்வமாக்கப்படுகின்றன. விஞ்ஞான அமெரிக்கன் என்ற இதழில் படி "அமெரிக்காவில் பயன்பாட்டிலிருக்கும் 8000 வேதிப்பொருட்களில் வெறும் 5 மட்டும் தடைசெய்யப்பட்டுள்ளன அல்லது கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.5% அல்ல 5 எண்ணிக்கை.தோரயமாக 200 வேதியல்பொருட்களில் மட்டுமே உடல் நல பாதுகாப்பு ஆய்வு மேற்கொள்ள முடிந்தது’. .இறுதியாக 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதத இறுதியில் அமெரிக்காவின் சூழல் பாதுகாப்பு அமைப்பு BPA பட்டியலை "கவலையளிக்கும் வேதிப்பொருள் " என அறிவித்திருக்கிறது.அதாவது இப்பொழுதுதான் இவ்வமைப்பு இதை படிக்கத்தொடங்கியிருக்கிறார்கள் என புரிந்துகொள்ளலாம். ஆய்வு செய்யாத மற்றும் கட்டுப்படுத்தப்படாத வேதிபொருட்களின் பயன்பாடு வருங்காலத்தில் மாறலாம் ஆனால் தனது உற்பத்தி பொருட்களில் நஞ்சை தடவி விற்கும் வியாபார சமூகத்தின்மனமாற்றதல் கண்டிப்பாக அது மாறாது."வேதியல் தொழிற்சாலைகள் கட்டுப்பாட்டு வட்டத்தில் குறைவாகவே கொண்டுவரப்படுகின்றன ,அதனால்தான் மலிவு விலை சீன தொழிற்சாலைகள் அமெரிக்க தொழிற்சாலைகளை விட அதிகம் உள்ளன "
புற்று நோய் குழுவின் தலைவர் 2010 ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கை இச்சூழலை இவ்வாறு விவரிக்கிறது:
“பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆராய்ச்சி அறிக்கைகள் தெரிவிப்பதாவது - சூழல் காரணிகளின் தொடர்பினால் மரபணு ,எதிர்ப்பு சக்தி மற்றும் சுரப்பிகள் செயல் பிறழ்ச்சியடைந்து புற்று நோய் மற்றும் பிற நோய்களை உருவாக்குகின்றன....பலவீனமான சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள்,சிக்கலான கண்காணிப்பு முறைகள் ,துண்டு துண்டாக இருக்கும் அதிகாரிகள் போன்றவற்றால் புற்று நோய் உண்டாக்கும் பிரதிநிதிகளை சமூகத்திலும் பனி இடத்திலும் தொடர்ந்து தங்களது வேலைகளை தீவிரமாக செய்ய அனுமதிக்கிறது ...”
மனிதன் மற்றும் பிற உயிரனங்கள் சார்திருக்கும் வாழ்வாதார அமைப்பை கொண்ட புவியின் சூழலானது விவாதத்திற்கு இடமற்ற வகையில் மனித நடவடிக்கைகளால் தொடர்ச்சியான மற்றும் தீவிரமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.நமது மாற்றுப்பாதைக்கான வழிகளை தீவிரப்படுத் தவறினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தெளிவாகிறது.பன்முகத்தன்மை வாய்ந்த ,சிக்கல்மிகுந்த மற்றும் வேகமாய் அதிகரித்துவரும் தீவிர
பண்புகள் கொண்ட புவிக்கோள் சூழல் சிக்கலின் மூல காரணத்தை ஒன்றில் தேடினால் கண்டுபிடித்துவிடலாம் அது :நாம் வாழும் பொருளாதார மற்றும் சமூக அடுக்கில் உள்ளது.“பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆராய்ச்சி அறிக்கைகள் தெரிவிப்பதாவது - சூழல் காரணிகளின் தொடர்பினால் மரபணு ,எதிர்ப்பு சக்தி மற்றும் சுரப்பிகள் செயல் பிறழ்ச்சியடைந்து புற்று நோய் மற்றும் பிற நோய்களை உருவாக்குகின்றன....பலவீனமான சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள்,சிக்கலான கண்காணிப்பு முறைகள் ,துண்டு துண்டாக இருக்கும் அதிகாரிகள் போன்றவற்றால் புற்று நோய் உண்டாக்கும் பிரதிநிதிகளை சமூகத்திலும் பனி இடத்திலும் தொடர்ந்து தங்களது வேலைகளை தீவிரமாக செய்ய அனுமதிக்கிறது ...”
-----தொடரும்
No comments:
Post a Comment